நேசிக்க வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 85 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் அனாதை விடுதியிலுள்ள ஒரு சிறுமியை ஒரு பணக்கார அம்மாள் தத்து எடுக்க விரும்பினாள்.

ஜெஸி என்ற சிறுமியைத் தெரிந்துகொண்டு அவளிடம் பேசினாள்.

“நான் உனக்கு நல்ல சாப்பாடு, உயர்ந்த துணி மணிகள் எல்லாம் தருவேன். உனக்கு என் வீட்டில் தனி அறை, தனி மேசை உண்டு. உன்னை நன்கு படிக்க வைப்பேன். நீ என் பிள்ளையாய் இருக்க வேண்டும்” என்றாள்.

ஜெசி மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். மேலும் ஜெசிக்குச் செய்யப்போவதைக் குறித்து வரிசையாக அடுக்கிக்கொண்டே போனாள்.

அமைதலான அச்சிறுமி கடைசியாக வாய் திறந்தாள். “அம்மா, எனக்காக இவ்வளவெல்லாம் செய் கிறீர்களே, பதிலுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டாள்.

சீமாட்டி அவளை அன்புடன் அணைத்துக்கொண்டு, ‘நீ என்ளை நேசிக்க வேண்டும், அவ்வளவுதான்’ என்றாள்.

நாம் ஆண்டவருடைய பிள்ளைகளாயிருக்க நாம் அவரை நேசிக்கவேண்டும், அவ்வளவுதான்.

“நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது: ஆம், சிறப்பான சுதந்திரம் எனக்கு உண்டு” [சங்கீதம் 16:6]

“அவர் நம்மை இயேசுகிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான மைந்தர்களாக்கிக்கொள்ள முன்பே திட்டமிட்டிருந்தார்”.  [எபேசியர் 1:6]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *