நூலிழையில் ஒரு கொலை..!





‘நூலிழையில் உயிர் பிழைத்தேன்!’ என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம். அது என்ன, நூலிழையில் ஒரு கொலை?!. அது வேற ஒண்ணுமில்லை.. அப்பாவியான அவளைத்தன் காதல் வலையில் வீழ்த்திக் கற்பைச் சூறையாடினதோடில்லாமல் இண்டர் நெட்டில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டிய மிராசுதார் மைலம்பாடி மைனரை எப்படித் தீர்த்தாள் மைதிலி என்பதுதான் இந்தக் கதை.

நீண்ட பெருமூச்சுவிட்டுவிட்டு முடிவுக்கு வந்தாள். ‘ஹூஹும்!’ அவன் இனி இருக்கக் கூடாது! பொம்பளைனா சும்மாவா? கொலையும் செய்வாள் பத்தினி என்பதைக் காட்ட வேண்டாம்?!!? முடிவுக்கு வந்தாள்.
கைகளுக்கு கையுறை போட்டுக் கொண்டு புத்தாண்டுக்கு அவனை வாழ்த்துச் செல்வது போல் சென்று, வாழ்வை முடித்துவிட வேண்டியதுதான். எப்படி? எப்படித் தீர்ப்பது?!
ஓ! கரெக்ட் அதுதான் சரி. புத்தாண்டுக்கு ஒரு புது டைரியைப் பரிசளிப்போம். அதில் பேஜ் மார்க்கிங்காக இருக்கும் கயிறில் நூலிழை மார்க்கரில் நூதனமாக விஷம் தடவி வைத்து அதை அவன் நுகர்ந்தால் சாகும்படி செய்ய வேண்டும்!. விஷம் ரெடி பண்ணிவிடலாம் ஆனால் அவன் டையிலிருக்கும் பேஜ் மார்க்கிங்க் நூலைக் கையில் தொட வேண்டுமே…? தொடுவான். அவனுக்கு ‘ஸ்மெல் அலர்ஜி’ உண்டுதானே?
கையோடு வாங்கிப் போன கொசுவத்தி லிக்வியூடேட்டரில் பிளக்கில் பொருத்த, ஸ்மெல் பரவியது. கொடுத்த டைரியை அன்றைய தினத்தைக் குறித்துத் தேர்ந்தேடுத்து எழுதும் ஆவலில் மார்க் செய்ய கையில் ஆலகாலவிஷம் ஒட்டிக் கொண்டது. அதே நேரம் ஆன் செய்யப்பட்ட ‘லிக்வியூ டேட்டர் ஸ்மெல்’ மூக்கை நெருட கையால் துடைக்க மயங்க்கிக் கவிழ்ந்தான். விஷம் வேலை செய்யத் தொடங்கியது!
‘டேய்! பொறுக்கி. எல்லா பலமும், பணமும் உன் கையில் இருக்கலாம். ஆனால், என் மூளையில் இருப்பது புத்தி அல்ல… நீண்ட காலப் பகை…! அப்பா.. மகன் என்று வழிவழியாய்த் தப்புப் பண்ணித் தப்பித்த உங்ககளைத் தண்டித்த நிம்மதியில் விடைபெறுகிறேன். மைதிலி மன திருப்தியோடு தப்பிக்க.. அவன் நூலிழையில் தடவப்பட்ட பாய்சனுக்கு பலியாகி பரலோகம் போய்க் கொண்டிருந்தான்.