நூதனப் போராட்டம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 1,317
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ராம-ராவணப் போர் நடந்துகொண்டிருக்கிறது. நாடகம் பார்க்கவந்த மக்கள் “ராவணன் ஒழிக” என்று ஆர்ப்பரித்தனர். “ராவணன் செத்தான்” என்று கத்தினர். ராமனது பேராண்மையை ராவணனது வீழ்ச்சியைத் துரிதமாக எதிர்நோக்கினர்.
ராமனது அஸ்திரபாணம் ஆக்ரோசத்துடன் செல்கிறது. அதில் ராவணன் வீழ்ந்து மடியவேண்டும். ஆனால் ராவணன் சாகவில்லை என்பதுமட்டுமல்ல, நிமிர்ந்து நின்று போராடினான்.
ராம பாணம் பிசுபிசுத்துவிட்டது. கடன்பட்டார் நெஞ்சம்போல ராமன் கலங்கினான். ராமாயாணம் தலை கீழானது.
மக்கள் சோர்ந்தனர். நாடக நிர்வாகத்தினர் திரை மறைவிலிருந்து ராவணனைச் சாகும்படி மிரட்டினர்.
ஆனால் ஒன்றும் பயனில்லை.
ராவணன் சாக மறுத்துவிட்டான். இறுதியாகப் போலீசார் தலையிட்டனர். அப்பொழுது ராவணன் முறையிட்டான்.
“நாடகக் கம்பெனியார் எனக்குச் சேரவேண்டிய பணத்தைத் தர மறுக்கின்றனர். அதை இந்த இடத்தில் தரும்வரை நான் சாகமாட்டேன்” என்றான்.
நாடகம் பார்க்கவந்த மக்கள் நகைத்து மகிழ்ந்தனர்.
கம்பெனி கட்டவேண்டிய பணத்தை அந்த இடத்திலேயே கட்டிய பிறகுதான் ராவணன் வீழ்ந்தான்.
நூதனமான இப்போராட்டம் கண்டு மக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் பாபு பாரி என்ற கிராமத்தில் 1987ஆம் ஆண்டில் இந்நிகழ்ச்சி நடந்தது.
“புல்லிருக்கிற இடத்திலே காட்டுக் கழுதை கத்துமோ?” – [யோபு 6:5]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கூகுள் குப்புசாமி…
யுவராஜ் சம்பத்
August 22, 2026
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
