நீதி வாக்கியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 61 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆப்பிரிக்காவின் சில பாகங்களில் கிறிஸ்தவர் களான ஒவ்வொரு தலைவனுக்கும் ஒரு நீதி வாக்கியம் உண்டாம். ஒரு தலைவன் மிஷனரியிடம் உங்களுடைய நீதி வாக்கியம் என்னவென்று கேட்க, “உன் தேவ னாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்பதே என் நீதி வாக்கியம் என்றார்.

உன் நீதி வாக்கியம் என்னவென்று மிஷனரி அத் தலவனைக் கேட்க, “நீ ஒரு காட்டின் வழியாய் போகை யில் பின்னால் வருகிற மனுஷன் வழி கண்டுபிடிக்க ஒரு கிளையை ஒடித்து வழி நெடுகப் போடுவாயாக” என்பதே என் நீதி வாக்கியம் என்றானாம் தலைவன்.

இந்த இரண்டும் கிறிஸ்து சொன்ன, “தேவனிடத் தில் அன்பு கூருவாயாக.” “பிறரிடத்திலும் அன்பு கூரு வாயாக” என்ற ஒரே நீதியைத்தானே கூறுகிறது.

“ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.” [ஏசாயா 41:6]

‘‘என் பிள்ளைகளே! வசனத்தினாலும் நாவினாலுமல்ல. கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூரக் கடவோம்.” [யோவான் 3:18]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *