நீதிக்கதை – 5
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 617
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இனி, அந்ய திருஷ்டி ஸம்ஸர்க்கர நிவிருத்தி விருத்தி யென்னும் தரிசனாங்கத்தில் பிரசித்தராகிய தேவதையார் சரிதமாவது-
ஜம்பூ துவீபத்து பரத க்ஷேத்திரத்து வெள்ளியின் பெருமலையில் தென்செடியில் தரணீ திலகமென்னும் நகாத்து ரதிவேக னென்பானொரு வித்தியாதரனொருவன், தீர்த்த வந்தனார்த்தமாகப் போகின்றா னுத்தர மதுரை யென்னும் நகரமடைந்து, அங்கே யெழுந்தருளி யிருந்த அவதி மனஹப்பரிய ஞானங்களை யுடைய ஸர்வகுப்தி பட்டாரகரென்றும் திவ்ய தபோதனரை யடைந்து நமஸ்கரித்து, தர்மசிரவணம் பண்ணின பின், “தபோதன ரெங்கு போகின்றீரே”ன்று கேட்டருள, “யான் மகத விஷயத்து ராஜ கிருஹ மென்னும் நகரத்து(த்) தீர்த்தங்கள் வந்திக்கப் போகின்றேனெ”ன்று வித்தியாதரன் சொல்லிய பின், தபோதனர் ராஜ கிருகமென்னும் நகரத்துப் போகின்றீராகில் அங்கே உண்டுருளதத்தரென்பா ரொரு திவ்ய தபோ தரருளினர். அவருக்கு நமஸ்காரஞ் செய்தமையும், அந்நகரத்து சிராவகி தேவதை யென்பாள் அவளுக்கு ஆசீர்வாதம் பண்ணினோ மென்றுஞ் சொல்லி, வீராமீனென வித்தியாதரன் ராஜகிருக நகரத்திலே இரண்டாயிரவர் தபோதனருக்கு பரமாகமம் வியாக்கியானம் பண்ணி யெழுந்தருளி யிருக்கின்றார்.
பவஸேன பட்டாரசு ரென்பார் அவனாத்தவிர்ந்து, உண்டுருள தத்தரென்னும் அக்ஷுத்திர அசூத்திர தபோதனருக்கு நமஸ்காரம் செய்தற்குக் காரண மென்னென்று கருதி (ப்) போய், ராஜகிருக நகரமடைந்து, பவஸேன பட்டாரகர் பாஹ்ய பூமியுள்ளே எழுந்தருளி யிருக்கின்றாரைக் கண்டு, நமஸ்கரித்து, இவருடைய தரிசன விசுத்தியை யறிவான் வேண்டி,யருகே சென்று, திருமணப் முதலாகிய வளஸ்பதி காயங்களை மிதித்தலும் சுபோதனரது கண்டு, கேளீர் ஜயினராயினார்க்கு காயங்களை வனஸ்பதி மிதிக்க லாகாதென்ன, வித்தியாதன் ‘முனிவனே இதற்குக் காரண மென்னென்று வின(வ) தபோதனர் “வனஸ்பதி காயங்களை ஏகேந்திரிய ஜீவனென்று ஆகமத்திலே சொல்லக் கேட்டறிவோ”மென்ன,
வித்தியாதர னென்னே இவர் தரிசன விசுத்தி யிருந்தது! இப் பேற்றியதோவென்று அவமானம் பண்ணிப் பின்னுங், குண்டிகை நீர் விழாமல் மறைத்து நிரில்லை யென்ன, தபோதனரு மோடையிலே நீர் முகந்துகொண்டு வருவீராமி னென்ன, அவனுஞ் சென்று பார்த்து, அந்நீர் பிராணி பகுளமா யிருந்துதென்றறிவிப்ப, அவரும் பிராணிகளை நீக்கி, முகக்கவென்ன, “என்னே, இவர் சித்தவிருத்தி யறியாது யார் ஸர்வகுப்தி பட்டாரகர் வசனத்தை(ச்) சந்தேகித்த வண்ணாமென்று தன்னை நிந்தித்து(ப்) போய், உண்டுருளி தத்தரெழுந்தருளி யிருந்த ஜீன பவன மடைந்து, மறைந்து நின்று கண்டிவருடைய ஸம்ய சுத்தியினை யறிவான் வேண்டி இவரைக் கண்டிலன் போல, அவர் கேட்கச் சொல்லுவான்: ‘என்னே பிரமாதத்தால் சுத்தமேதிக்கப் பட்டது! இதனை உண்டுருளித் மஸ்தகத்திலே துடைப்பானாக வந்தேன். அவரெங்கே யிருந்தாரோ” வென்று சொன்னமை கேட்டு, பட்டாரகரு, “மிங்கே யிருந்தேனென வந்து, நினைத்தேபடி செய்வீராக”வென்று அருளிச் செய்தார்.
அது கேட்டு, வித்தியாதரன் பயப்பட்டு, இவ்வண்ணமே ஸம்யசுத்தராகிய தபோதனனா யன்றி ஸர்வகுப்தி பட்டாரகர் நமஸ்கரிப்பரோ வென்று நினைத்து, பட்டாரகரைச் சென்று நமஸ்கரித்து, முனீந்திரனே, சர்வகுப்தி பட்டாரகர் நமஸ்காரஞ் செய்தருளினா ரெ”ன்று விண்ணப்பஞ் செய்யக் கேட்ட பட்டாரகர் நம்பக்கல் என்ன ஸமயங் கண்டு, வினயம் பண்ணினா ரென்று தம்மில் நொந்து, பிரதி வந்தனை பண்ணின பின், வித்தியாதரன் நும்முடைய மகிமை யறிவான் வேண்டி, பாப கர்மாவாகிய என்னால் அறியச் சொல்லப்பட்டது; அதற்கு(ப்) பிராயச் சித்தம் பிரசாதித் தருள வேணுமென் றிறைஞ்சி, பிரயெச் சித்த நோன்பேற்றிக்கொண்டு, நமஸ்கரித்துப் போய், தேவதையாரிருந்த பிரதேசங் குறுகி, இவருடைய மித்தியா தரிசனம் சயிக்கமின்மை காண்பான் வேண்டி, விச்கிரியா விசேஷத்தால் பத்மாஸனத்துப் பிரும்மாவாகி யவதரித்து வந்து, தர்மோபதேசம் பண்ணக் கண்ட முக்த ஜனங்களெல்லாரும் சென்று, “தர்மங் கேட்டபின் பிரும்மா வாகிய யிவன் நம் பார்சுவத்து தர்ம சிரவணம் பண்ண நகரத்துள் வராதார் ஆருமுளரோ?” வென்ன, அவர்களுஞ் சென்று தேவதையாளாக் குறுகி பத்மாஸனத்திலிருந்து பிரும்மாபதோசம் பண்ணுகின்றனர்.
நீரு மிப்போது வருவீராமி னென்று சொல்லக் கேட்ட தேவதையார் சொல்லுவார்: “பிரஜாபதியார்க்கும் பத்மாவதி யார்க்கும் புத்திரன் பிரும்மாவென்பானவன் எண்பது விலகாலத்தான். இவனே முமுடிக்காலத்தில் அவனுளனோ விது வேதேனுமொரு காயங்காணுமென்று காயங்காணுமென்று சொன்னமை சொல்லக் கேட்ட விரும்மா விஸ்மிதனாகி யந்த வேஷந் தவிர்ந்து சில நாட் கழிந்தத பின் விஷ்ணமு தேவனாகி சங்க சக்கிரதாரியாகி மகுடகடகாதி விபூஷதனாகி யிருந்து ஸந்யாஸிகட்கு(த்) தற்மோபதேசம் பண்ணுகின்றமை கேட்டு க்ஷத்திர ஜனங்கள் சென்றஞ்சி தர்மங் கேட்டபின் விஷ்ணு தேவதை நியோகத்தால் முன்பு போல, தேவதையார் சமீப மடைந்து சொல்லுதலும், தேவதையாரும் ஸீராஷ்டிர விஷயத்து ஸ்ரீநகரத்து வசுதேவர்க்குந் தேவியார்க்கும் புத்திரன் விஷ்ணு தேவன். அவன் பத்து விற்காலத்தான். அவன் இப்பொழுதே முமுடிக் காலத்துளனோ, இது யாதா னுமொரு மாயை போலுமென்று சொல்லக் கேட்டு, வந்தறிவிப்ப விஸ்மிதனாகி யந்த விஷ்ணு ரூப மாறிச் சில நாட் கழித்தபின் ஈசுவர ரூபங் கொண்டு, ஜடாதரனாகி, உமாபதி ஸஹிதனாகி, யாலின் கீழிருந்து பாஷண்டிகளுக்கெல்லாம் தர்மஞ் சொல்லக் கேட்டு, முக்த ஜனங்கள் முன் போல ஈசுவர நியோகத்தாற் சென்று, தேவதையார்க் கறிவிப்ப, அவரும் பிராம்மணீய ஜனபதத்துப் பைசாலி நகரத்து ஸத்யவரி யார்க்கும் ஜ்யேஷ்டையார்க்கும் புத்திர னீசுவரன், அவன் ஜின ரூப தாரியாகி பரீஷஹங்கட் கிடைந்து தபஸ்ஸழிந்து போயினன்.
அதன்பின்,ஆயிரம் ஸம்வத்ஸரம் சென்றது. இப்பொழுது, அவனுளனோ வென்று சொல்லக் கேட்டுச் சென்றறிவிப்ப, விஸ்மிதனாகி, யந்த ஈசுவர ரூபம் மாறிச் சிலநாட்கழிந்தபின், புத்தன் வடிவு கொண்டு, சீவாதாரியாகி போதிவிருட்சத்தின் கீழிருந்தும் புத்தராயினராக்குத் தர்மோபதேசம் பண்ணக் கண்ட ஜனங்கள் சென்று தர்மோபதேங் கேட்டபின், புத்த தேவதை நியோகத்தால் முன்புபோலச் சென்று தேவதையார்க் கறிவிப்ப அவரும் அங்க விஷயத்து சம்பா நகரத்துச் சுத்தோதனருக்கும் மாயைக்கும் புத்திரன் புத்தனென்பானவன் அக்காலத்தே நீங்கினன்.
அவனிப்பொழுது உளனோவென்றமை சென்றறிவிப்ப, விஸ்மிதனாகி, யென்னே புண்ணியவதியுடைய தரிசன மாகாத்மியமிருந்த வாறென்று ஸந்தோஷித்து, பத்த வேஷந் நீங்கிச் சில நாட் கழித்தபின் சுத்தமாகிய உத்தியானப் பிரதேசத்து ஸ்மவஸ்ரணம் ர்மித்து தபோதனர் முதலாகிய பன்னிரண்டு கணங்களும் பரிவேஷ்டிக்க சித்திர கூடத்து ஸிம்மாசனத்திருந்து தர்மோபதேசம் பண்ணக் கேட்ட ஜனங்களெல்லாருஞ் சென்று தேவதையாருக்குச் சொல்ல, அவருமிந்த அவஸர்ப்பினீ காலத்து முடிவில் ஸ்ரீவர்த்தமான…. கள் ஸ்ரீவிகாரமும் ஸமவஸரணமும் நீங்கி,பரிநிர்வாணகாலமுங் கழிந்தபின் ஆயிரத்துச் சின்னம் சம்வத்ஸரம் சென்றது.
இனித்தீ..லமுமத்தீதீக் காலமுஞ் சென்று உத்ஸர்ப்பிணி காலத்து தீத்தீ காலமும் தீக்காலமுஞ் சென்று, தீநற் காலமுமாகிய மூன்றாங் காலத்து தீ… பரமேசுவரன் சாம்ராச்சியந் தோன்று மிதுக்கு இக்காலத்துளதன்று இந்த வீபரீத விகாரங்களெல்லாம் யாவரோ செய்து மயக்கு நின்றார்.
இவ்விழிவு காலத்திற் றோற்று மியற்கை யிப்பேற்றியதோ வென்று தெளிந்திருந்தனன்.
இது கேட்டு, வித்தியாதரன் மாயா ரூபம் நீக்கி, பயப்பட்டு, தேவதையாளா நமஸ்கரிப்பான் வேண்டி, க்ஷுல்லதாரியாய் இவர் மனை குறுக தேவதையாருஞ் சென்று நமஸ்கரித்துத் தம்மனை யுட்கொண்டு புக்கு, அவர் பாதங் கழுவி, யாசனத் திருத்தி, இவர் அனசனத்திலே வருகிறா ரென்று ஆஹாரஞ் சமைக்கப் புக வித்தியாதரன் மாயையா லே அடுப்பிலேயிட்ட நெருப்புப் பல காலம் வருந்தி மூட்டவும், நீர்போற் குளிர்ந்து எரியாமை கண்டு, இவர் சமீபமு மடைந்து, முன்பு மிந்த மாயைகளெல்லாஞ் செய்தீர் நீரோவென்று சொல்ல, அய்யன்களும், சொல்ல, அய்யன்களும், அஃதெவ்வண்ண மறிந்தீரோ வென்ன ஆஹார வேளை கழியாமல் ஆஹாரஞ் சமைக்கப் புக்கவிடத்து, நெருப்பு எரியாமை கண்டுற்றேனென்று சொல்லக் கேட்டு, வித்தியாதரன் பயப்பட்டுச் சென்று, தன் வடிவு கொண்டு, உசிதப் பிரகாரத்தினால் வினயஞ் செய்ய தேவதையார் சொல்லு வார். முன்பே, இழிவு காலமாய் மித்தியார்த் தத்துவம் பிரபலமாய்ச் செல்லா நிற்ப, நீர் நானாப் பிரகாரத்தன வாகிய மித்தியாத்துவ வேஷங்காட்டி, முக்தராகிய ஜனங்களையும் மயக்கிப் பிழை செய்தீரென்று சொல்லக் கேட்ட வித்தியாதரன், உத்தர மதுரையில் ஸர்வகுப்தி பட்டாரகர் உம்மை வினவியருளினார். உம்முடைய தரிசன மாகாத்மியத்தினை பரீக்ஷிப்பான் வேண்டி இவ்வண்ண மென்னால் விக்கிரியை பண்ணப்பட்டது.
இவ்வண்ணம் ஸம்யக்த்துவ சுத்தராயினா ரிக்காலத் தெங்குமில்லை யென்று ஸ்தோத்திரம் பண்ணி, பொன் மழை பூ மழை பொழிந்து நமஸ்கரி(த்து) வித்தியாதரன் யோயினன்.
இவ்வண்ணம் அன்னிய திருஷ்டி ஸம்சர்க்கா பாவமென்னும் தரிசனாங்கத்தில் தேவதையா ருதாஹண மாகச் சொல்லப்படுகிற தென்றவாறு.
– தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வரிசை எண்: 73, நீதிக் கதைகள், பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ, (தமிழ்), எம்.ஏ, (ஆங்.), பி.எட், டிப்.வ.மொ, பிஎச்டி, காப்பாட்சியர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, தமிழ்நாடு அரசு, 1992