நாயன்மாரே…




அன்று மாலை 6 மணியிருக்கும், தல்பீர் வழக்கம் போல் தேயிலை தொழிற்ச்சாலையில் பணியை முடித்து விட்டு மாலை வீடு திரும்பிகொண்டிருந்தான். தேயிலை எஸ்டேட்களை கடந்து ஓரு ஒற்றையடி பாதை நடக்க தொடங்கிய போது, கடந்த வாரம் குன்னுார் மார்க்கேட்டில் 600ரூபாய்க்கு வாங்கிய பழைய 1ஜி மொபைலின் அழைப்பு மணி, ஒலிக்க…
அதை யெடுத்து பச்சை பட்டனை அழுத்திய கணம் அழைப்பில் அவனது மனைவி மனிஷா, இந்தியில் பேசிய வார்த்தைகள் என்ன என்பதை பிறர் கேட்க முடியா விட்டாலும், இவனது முகம் வாடியது ஏதோ ஒரு பாதிப்பை வெளிப்படையாக்கியது…
இன்னும் தல்பீர் வீட்டிற்க்கு செல்ல 30 நிமிடங்கள் ஆகுமென்ற கால சூழலில் அவனைப்பற்றி…
தமிழகத்தை நோக்கி வடமாநிலத்தவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக பிழைப்பிற்காக வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வந்தவன்தான் தல்பீர். ஜார்கண்ட் மாநிலத்தில் குட்கிராமத்தில் ஏழை விவசாயியின் மகன், பிறந்ததும் தாயாரை இழந்த இவனுக்கு இரண்டு அக்காக்கள். வறுமை காரணமாக ஒருத்தி 55 வயது கிழவனுக்கு வாக்கபட்டு போக, இன்னொருத்தி முதிர்கன்னியாய் வாழ்ந்திருக்க, தல்பீருக்கு பக்கத்து வீட்டு மனிஷாவுடன் ஏற்பட்ட காதல் எவ்வித பிரச்சனைகளும் இன்றி கரம் கோர்த்தாலும்,
வட மாநிலத்தை வாட்டிய வறுமை அங்கிருந்து விரட்டியது. சொந்த மண்ணையும்,உறவுகளையும், வாழ்ந்த நினைவுகளையும் மறந்து ஜீவாதாரத்தை தேடி வந்த இடம் தான் தமிழகத்தின் மலை மாவட்டமான குன்னுார். இங்கு இவர்களுக்கு மொழி ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், இவர்களிடன் மனித நேயமிக்க சிலர் அரைகுரை இந்தியில் அன்பாய் பேசி அரவணைத்தனர்.
குன்னுாரில் தேயிலை தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் உள்ள இந்த மலை மாவட்டம்தான், தோற்ற அளவில் மட்டுமல்ல மன அளவிலும் ஈரமானது என நம்பி தஞ்சமான அவனுக்கு, குன்னுாரில் ஒரு தேயிலை எஸ்டேட்டில் கணவன் மனைவி இருவருக்கும் வேலையும் குடியிருக்க வீடும், வாழ்க்கையை ஓட்ட வாரக்கூலியும் கிடைத்து வந்தது. இவர்களுக்கு தற்போது 5–ஆம் வகுப்பு படிக்கும் 8–வயது ஒரே மகள் நிஷா இவர்களின் தேவதை.
இப்படியான சூழலில் தான் இன்றைக்கு நெஞ்சை பிளக்கும் சம்பவம் அவனது தொலை பேசியில் வந்த தகவல்…
அடர்ந்த வனப்பகுதியை கடந்து வீட்டையடைந்த தல்பீரை கண்டதும் ஆறுதலுக்காக காத்திருந்ததை போல் மன குமுறல்களை சொல்ல வார்த்தைகளின்றி கதறி அழுத மனிஷாவை தேற்ற முடியாமல் திணறி நாதழுத்து நடந்தது பற்றி கேட்ட போது,பள்ளிக்கு சென்ற சிறுமி நிஷாவிடம் பள்ளி தலைமையாசிரியர் ஏதோ மொழிபேசும், வெளி மாநிலத்தவர்தானை பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தானே தொட்டால் யார் கேட்பார்கள் என்ற எகத்தாளத்தில் அந்த பிஞ்சு குழந்தையின் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு, பாலியல் வன்புணர்வுக்கு முயன்றிருக்கிறான் தெரிய வந்தது.
அதிர்ச்சியில் உறைந்த தக்பீர் தனது மகளுக்க நேர்ந்த பாலியல் வன் கொடுமைக்கு எதிராக குரல் உயர்த்தி திட்டக்கூட முடியாமல், குமுறலுக்கு ஆளாகி காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்றால், இனத்தால் மொழியால் இம்சிக்கபட்டு அங்கும் அந்த காமூகனுக்கே காக்கிகளின் ஆதரவு குரல்கள்…
கதறி அழுகிறான் அந்த வட நாட்டான், பரதேசி பட நாயகனை போல் “நாயன்மாரே…”, என்று வடமொழியில் சொல்லி.