நாகரிகம் – ஒரு பக்க கதை





டீசன்ட்டான அந்த ரெஸ்டாரன்டினுள் முண்டாசுடன் ஒரு கிராமவாசி நுழைந்தார். மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டி, அதைவிட அழுக்கான சட்டை.
சர்வர் அருவருப்படைந்த போதிலும், தொழில் தர்மம் கருதி பவ்யமாக,’’என்ன சாப்பிடறீங்கய்யா?’’ என்றார்.
‘’சாப்பாடு எவ்வளவு?’’
முழுச்சாப்பாடு அறுபது ரூபா’’
உனடே தன் அண்டர்வேரிலிருந்து பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தர். ‘’பணம் பத்தாது…அளவுச் சாப்பாடு இருக்கா?’’
இருக்குங்க. முப்பத்தைஞ்சு ரூபா’’
‘’சரி, அதையே கொடுங்க.’’
சாப்பிட்டு முடித்ததும் பில்லை ஒரு அட்டையினுள் வைத்து நீட்டினார் சர்வர். பணத்தை அதனுள் வைத்து விட்டு எழுந்துபோன கிராமவாசி, கைகழுவி வேட்டியிலேயே துடைத்துக் கொண்டு அப்படியே வெளியேறினார்.
பயந்துபோன சர்வர், டேபிளுக்குப் பாய்ந்தார். பத்து ரூயாய் நோட்டுக்கள் ஐந்து அங்கே அவரைப் பார்த்து சிரித்தன.
– ஷேக் சித்தார் மதார் (8-9-10)