நல்ல மனம் வாழ்க…! – ஒரு பக்க கதை






ப்ரீதாவுக்கு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. புகுந்த வீடு போனவள் ஒருமுற கூட தாய் வீட்டுக்கு வந்து தங்கவில்லை.
தன் பெண் ஏன் வர மறுக்கிறாள் எனத் தெரயிவில்லையே. மாப்பிளைளயால் ஏதாவது பிரச்னையா? பலவிதமான குழப்பங்களில் ப்ரீதாவின்அம்மா மனது தவித்தது.
‘’என்னம்மா நீ உன் மாமியாரும் மாமனாரும் நம்ம வீட்டிற்கு அனுப்பினா கூட நீ வேண்டாம்னு சொல்கிறாயாமே. என்னம்மா காரணம். என்ன பிரச்னையா? எனக்குக கவலையா இருக்கும்மா’ என்று ஒரு நாள் ப்ரீதா வீட்டுக்கே போய்க் கேட்டார் அவள் அம்மா.
‘’சே! சே! அதெல்லாம் ஒண்ணுமில்லையம்மா. நீயே ஏன் என்னவோ ஏதோன்னு கற்பனை பண்ணிக்கிறே. அவரோட அண்ணியோட அம்மாவும் அப்பாவும் எங்க கல்யாணத்துக்கு இரண்டு மாசம் முன்னாடிதான் ஒரு ஆக்ஸிடெண்டல செத்துப் போயிட்டாங்க. அண்ணியும் அவங்க குடும்பத்தில ஒரே பொண்ணுதான். நான் அம்மா வீட்டிற்குப் போறேன்னு சொல்லி கிளம்பினா பாவம் அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். அதுவும் இப்பதான் அவங்க அந்த துக்கத்திலேந்து கொஞ்ச கொஞ்சமா வெளியே வந்திட்டிருக்காங்க. கொஞ்ச ஆள் கழிச்சு நான் வர்றேன்’’
மகளின் பதிலைக் கேட்ட தாயின் மனது பெருமையடைந்தது.
– பத்மா ஹரிகிருஷ்ணன் (13-10-10)