நரி சொன்ன நீதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 150 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல இருந்தா. எடாறு வச்சு மானு, பண்ணிகளப் புடிக்கிறது வழக்கம். ஒருநாத் தேவையில, வேட், வச்ச எடார்ல புலி மாட்டிக்கிருச்சு. அந்த வழியா – ஒரு எடயன் ஆடு பத்திக்கிட்டுப் போனர். போகயில, புலியப் பாக்குறர். புலி எடாருல மாட்டிக் கெடக்குது. 

அப்ப: புலி, எடயனப் பாத்து, அண்ணே! அண்ணே!! என்னயத் தொறந்து விட்டியின்னா, ஓ…ம்பிள்ள குட்டிகளெல்லாம் நல்லாருக்கும்ண்டு சொல்லிக் கெஞ்சுச்சு. எடயனும், ரொம்ப இரக்கப்பட்டு, எடார்லிருந்த புலிய எடுத்துவிட்டா. எடுத்துவி டவும் -, எனக்கு ரொம்பப் பசி, இப்ப நர் ஒன்னயத் திங்கணும்ண்டு சொல்லுச்சு. சொல்லவும், எடயனும் பயந்து போயி, ஒன்னயத் தொறந்து விட்டதுக்கா, என்னயத் திங்கணும்ண்டு சொல்ற, வாவா! நாலுபேருகிட்டப் போயிக் கேப்போம், அவங்க திங்கச் சொல்லிட்டாங்கண்டா, நிய்யி என்னயத் திங்கலாம்ண்டு எடய சொல்றா. 

சரி – வாண்ட்டுப் போறாங்க. போகயில, ஒரு ஆலாமரம் இருக்கு, அந்த ஆலாமரத்துக்குக்கிட்ட போயி, ஆலாமரம்! ஆலாமரம்!! இந்த புலி, எடார்ல பட்டுக் கெடந்திச்சு, அந்த வழியா நா… போனே. அப்ப, இந்தப் புலி இருந்துகிட்டு, காப்பாத்தி விடுண்டு சொல்லிச்சு. நானுங் காப்பாத்தி விட்டே. இப்ப, என்னயத் திங்கணும்ண்டு சொல்லுது. இது நாயமா? ஆலாமரமே! நீ சொல்லுண்டு கேக்குறர் 

கேக்கவும், அந்த ஆலாமரம், இந்த மனுசப் பயக இருக்காங்களே, என்னய அடிக்கடி வெட்டிக் கொடுமப் படுத்துராங்கே, இவங்களப் பாவம்ண்டு பாக்கக்கூடாது. சும்மா! புடுச்சுத் தின்னு புலியேண்டு சொல்லிருச்சு. 

அப்ப அங்ஙிட்டுப் போறாங்க. அங்ஙிட்டு ஒரு காராம் பசுவு இருக்குது. காராம்பசுவே! காராம்பசுவே!! இந்தப் புலி, ஒரு எடாறுல மாட்டிக் கெடந்திச்சு. அந்த வழியா நா… போனே. போகயில, இந்தப் புலி என்னயப் பாத்து, காப்பாத்திவிடுண்டு கேட்டுச்சு. நானும், எடார்ல இருந்து எடுத்துவிட்டே. இப்ப என்னயத் திங்கணும்ண்டு சொல்லுது. இது நாயமா காராம்பசுவே! நீ சொல்லுண்டு கேட்டா. 

அப்ப அந்தக் காராம்பசுவு, இந்த மனுசப் பயலுக நர்… பால் தர்ரவரைக்கும் என்னயக் காப்பாத்துராங்க. பால் இல்லாத காலத்ல, வெளிய வெரட்டி விட்டுறுராங்க. கொஞ்சஞ்கூட, எரக்கங் காட்டாம, புலியே! புடுச்சுத் திண்ணுண்டு சொல்லிருச்சு. 

அப்ப அங்கிட்டுத் தள்ளிப் போகயில, ஒரு மரத்தடில, ஒரு நரி ஒக்காந்துக்கிட்டிருந்திச்சு. நரிகிட்டப் போயி, நரியண்ணே! நரியண்ணே!! இந்த புலி எடாறுல மாட்டிக் கெடந்திச்சு. அந்த வழியா நா… போனே. என்னயக் காப்பாத்தி விடுண்டு சொல்லுச்சு. நானும், எடார்ல இருந்து காப்பாத்திவிட்டே. இப்ப, என்னயத் திங்கணும்ண்டு சொல்லுது. இது நாயமா? நீ சொல்லு நரியண்ணேண்டு சொல்றர். 

அப்ப நரி சொல்லுச்சு. அட எடப்பயலே! ஒனக்கு அறிவிருக்காடா? இங்க இருந்து, என்னால நாயஞ் சொல்ல முடியாது. எந்த எடத்ல? எந்த மாதிரி புலி எடார்ல பட்டுக் கெடந்திச்சு. நீ எப்டிப் போயி, எடார எடுத்து விட்ட, வாங்க! அங்க போயிப் பேசிக்கிறலாம்ண்டு, நரி கூப்பிட்டுக்கிட்டுப் போகுது. 

மூணு பேரும், அந்த எடத்துக்குப் போறாங்க. போயி -, புலிய எடார்ல மாட்டி விட நெனச்சு, எடயப்பயலப் பாத்து, நீ புலிய, எதுக்குள்ள இருந்து தொறந்து விட்ட? இந்தக் கூட்டுக்குள்ள, இத்தம் பெரிய புலி, எப்டி உள்ள போச்சு? நிய்யி பயப்படாம, எப்டிக் கிட்டப் போயித் தொறந்துவிட்டேண்டு நரி கேக்கவும், எடயஞ் சொன்னா. சொல்றதெல்லாம் எனக்குப் புரியாது. அதுப்படி செஞ்சு காட்டுங்கண்டு, நரி சொல்லுது. புலிய அடச்சு வைக்ககணும்ல்ல. அதுனால இந்தத் தந்திரம் செய்யுது. புலி கூட்டுக்குள்ள போச்சு. போகவும் எடயன் லபக்ண்டு அடச்சு வச்சுட்டர். அடப்பாவி ! ஆட்டப் பத்திக்கிட்டு, வீ ட்டுக்குப் போடாண்டு சொல்லிட்டு, நரி காட்டுக்குள்ள ஓடிப் போச்சாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *