நரியும் திராட்சையும்





கடும்பசியால் திராட்சைப்பழத் தோட்டத்திலே நரி நுழைந்தது. பழங்களை உண்ணவேனும் என்ற ஆசை. எட்டி எட்டிப் பார்த்தது. முடியாமல் நெடுநேரத்துக்குப் பின், ‘சீசீ! இந்தப் பழம் புளிக்கும்; இது வேண்டாம்’ என்று சொல்லிப் போய்விட்டது நரி.
இந்தக் கதையை என் பேத்தியிடம் சொன்னேன்.
பேத்தி, “தாத்தா அது உங்க காலத்து நரி, இந்தக் காலத்து நரி என்றால், ‘ஸ்டுல்’ – பலகை எடுத்துக் கொண்டுபோய்ப் போட்டு, அதன்மேல் ஏறி, எல்லாத் திராட்சைப் பழங்களையும் நன்றாகத் தின்று விட்டு போய்விடும் – ”
என்று சொல்லவே.
நான் – “இது இக் காலத்து நரிக்கதை போலும்” என்றேன்.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |