நட்பே! உன் அன்பிற்கு நன்றி…





மதியழகி, அம்மா, அப்பா, என்று அழகான சிறு குடும்பம்
மதியழகியை சுருக்கமாக மதி என்று அழைப்பார்கள்
இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மதியழகியின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
மதியழகி தன் அப்பா அம்மாவுக்கு ஒரே செல்ல பெண். மதியழகியால் அப்பாவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்லூரி போகாமல் வீட்டிலியே அடைபட்டுக்கிடந்தாள் . தன் தோழிகள் , அம்மாவின் ஆலோசனைகளை கேட்டு மதியழகி கல்லூரிப்படிப்பை முடித்தாள்.
மதியழகிக்கு இன்டர்வியூவில் தேர்வு செய்து ‘அமெரிக்கா’ வில் வேலைகிடைத்தது. வெளிநாட்டிற்கு செல்வதனால் இந்த இழப்பிலிருந்து விடுபெறலாம் என்று மதியும், அம்மாவும் அமெரிக்கா செல்ல தயாராகிவிட்டார்கள்.
‘அமெரிக்கா’ சென்று ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியை ஆரம்பித்தாள். சில மாதங்கள் ஓடியது. ‘மதி’ க்கும், ‘அம்மா’வுக்கும் ‘அப்பா’ வின் நினைவிலே இருப்பார்கள்.
மதி எப்பொழுது கவலைலிருந்து மீண்டு வருவாள் என்று எல்லா தெய்வங்களிடமும் முறையிடுவாள் மதியின் அம்மா.
மதியழகியின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட ஆரம்பமாகியது.
மதி வேலைபார்க்கும் நிறுவனத்தின் மேலாளர் ஒரு தமிழ் பேசக்கூடியவர்.
அவர் பெயர் ‘அனேகன்’ அப்பா , அம்மா, சிறுவயதிலேயே ‘அமெரிக்கா’ வில் குடியேறினார்கள்.
அனேகன் ‘அமெரிக்கா’ வில் பிறந்து வளர்ந்தவர். வீட்டில் தமிழ் மட்டுமே பேசுவார்கள்.
“அனேகன் குடும்பத்தின் தாய் மொழி தமிழ் “.
மதியழகி மதியவுணவுக்கு கேன்டீன் சென்று தனியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். எதிரிலிருந்து அழகி என்று குரல் கேட்டது.
அனேகன் அழகி ஹாய் என்றார். இருளில் இருந்த மதியின் உள்ளத்தில் ஒளி வீசியது.
“கார்த்திகை மாதத்தில் செம்பருத்தி பூவின் மொட்டு தலைகுனிந்து இருக்கும்போது, காலையில் சூரிய ஒளி பூவின் மீது பட்டவுடன் தன் இதழ்களை மெதுவாக விரித்து பிரகாசமாய் காட்சியளித்து, ஈரக்காற்று பூவின் மீது விழும்போது மெதுவாக அசைந்து கொடுப்பதைபோல், மதி உதட்டின் இதழ்கள் மெதுவாக விரிந்து, இரண்டு கன்னங்களும் மலர்ந்து, கண்ணில் புன்னகைத்து , மெதுவாக தலையசைத்து ஹாய் என்றாள்”.
மை நேம் மதியழகி.
மதியழகி ஷார்ட் “அழகி” உங்களுக்கு பொருத்தமா இருக்கு.
ப்ரண்ட்ஸ் எல்லாரும் என்னை ‘மதி’ என்று அழைப்பார்கள் .
நான் அழகி என்று அழைக்கிறேன். உங்களுக்கு எதுவும் பிரச்னை இல்லையே,
நோ, நோ, எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது.
உங்கள் நேம், மை நேம் ‘அனேகன் ‘ நாங்களும் தமிழ் குடும்பம் தான். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் ஓகேவா?
ஓகே, தேங்க் யூ,
ஓகே அழகி ஈவினிங் மீட் பண்ணலாம்.
ம்ம்ம்ம் மீட் பன்னலாம்.
ஹாய் அழகி, குட் ஈவினிங்.
குட் ஈவினிங் அனேகன்.
எப்படி வீட்டிற்கு செல்வீர்கள்? நான் அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்.
தாங்ஸ் அனேகன் உங்களுக்கு எதற்கு சிரமம்?
ஹலோ வாங்க மேடம், பரவாயில்லை, நம்ம இருவரும் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள், வாருங்கள் அழகி.
ம்ம்ம்ம் தேங்க்ஸ் அனேகன்.
ஹலோ, தேங்க்ஸ் எதுவும் வேண்டாம்.
ம்ம்ம்ம்ம் ஓகே அனேகன்…
ஓகே அழகி பை பை…
மார்னிங் பிக் அப் செய்து கொள்கிறேன்
ம்ம்ம்ம் ஓகே அனேகன்.
ஹாய் அழகி காலை வணக்கம்…
ம் ம் ம் குட் மார்னிங் அனேகன்.
ரெடியாக இருக்கிறீர்களா?
ம்ம்ம்….. அம்மா உங்களைப் பார்க்க விரும்புகிறார்… நீங்கள் கொஞ்சம் சீக்கிரம் வாங்க….
ஹாய், அதற்குள் வந்துவிட்டீர்கள் !!!!!… உங்கள் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்தேன். அம்மா, அம்மா, அனேகன் வந்திருக்கிறார்.
ஹாய் ஆண்டி,,, எப்படி இருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கிறேன்
உங்களைப் பற்றி என்னிடம் கூறினாள்.
எனக்கு ரொம்ப சந்தோசம், தெரியாத நாட்டில் எப்படி இருப்பது என்று ஒரு பயம் இருந்தது.
டோன்ட் ஒரி, ஆண்டி, நாங்கள் இருக்கிறோம். ஓகே ஆண்டி இப்பொழுது டைம் இல்லை நெஸ்ட் ஒரு நாள் வருகிறேன்.
சரி , கவனமாக செல்லுங்கள். . .
பை அம்மா , பை ஆண்டி.
அழகி ஒர்க் எப்படி போகிறது.
ம்ம்ம் ஓகே, நோ ப்ரோப்லம் அனேகன்.
ஏதாவது ஹெல்ப் வேண்டும் என்றால் கேளுங்கள் அழகி.
ஓகே அனேகன்.
லஞ்ச் டைம் மீட் பண்ணலாம். ம்ம்ம் ஓகே பை.
ஹாய் அழகி.. ஏன் லேட்?
நீங்கள் ரொம்ப நேரம் வெயிட் பண்றீங்களா சாரி அனேகன்.
இட்ஸ் ஓகே, வாவ், உங்கள் லஞ்ச் பாக்ஸ் கொடுங்க செம,, இதுமாதிரி சாப்பிட்டு பல வருடம் ஆகிறது. நம்ம நாட்டுக்கு போனால்தான் இந்த ஐட்டம்ஸ் லா சாப்பிடமுடியும். என்னுடைய லஞ்ச் நீங்கள் சாப்பிடுங்க, ஒன்னு பண்ணுங்க ஆண்டிகிட்ட சொல்லி எனக்கும் லஞ்ச் கொண்டுவாங்க…
ம்ம்ம் ஓகே அனேகன்.
ஈவினிங் வெயிட் பண்ணுங்க அழகி..
ம்ம்ம் ஓகே….
குட் ஈவினிங் அனேகன்
குட் ஈவினிங் அழகி
அம்மா கால் பண்ணி உங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
நாளை சண்டே லீவு நீங்களும், ஆண்டியும் வீட்டுக்கு வாங்க. கூட்டிக் கொண்டு போகிறேன். ஓகே வா?
ம்ம்ம் ஓகே
ஓகே பை, பை…
ஹாய் ஆண்டி, ரெடியா
ம்ம்ம் ரெடி அனேகன்.
அம்மா, அழகி பாமிலி வந்துருக்காங்க…
வாங்க, வாங்க எப்படி இருக்கீங்க தமிழ் நாட்டில் எங்கே இருக்கிறீர்கள், அனேகன் உங்களை பற்றி சொன்னான்.
நம்ம நாட்டு மக்களை பார்த்தாலே ஒரு சந்தோசம் தான். உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேண்டும் என்றால் கேளுங்கள்.
சந்தோசம், ஊரு , பேரு, தெரியாத இடம் பயம் இருந்தது. உங்களை சந்தித்ததில் சந்தோசம்..
அனேகன் இவர்கள் சாப்பிட்ட பிறகு பத்திரமா வீட்டில் விட்டுவிடு.
ஓகே, மா…
ஓகே நாளைக்கு மீட் பண்ணலாம்.
ம்ம் ஓகே பை
குட் மோர்னிங் அழகி
குட் மோர்னிங் அனேகன்.
டிரஸ் நல்லா இருக்கு அமெரிக்க பொண்ணா மாறிட்டீங்க,
அனேகன் இன்னைக்கு ஷாப்பிங் போக வேண்டும். கொஞ்சம் டிரஸ் கலெக்ட் பண்ணனும்.
ஓகே , ஈவினிங் போகலாம்.
ம்ம்ம்ம், ஓகே பை.
அனேகன் லேட் ஆகுமா ஐம் வெயிட்.
ஜஸ்ட் எ மினிட்.
ஓகே, போகலாம் ஒரு சின்ன கான்வர்சேஷண்.
ம்ம்ம்…
இங்கே டிரஸ் நல்லா இருக்கும் பார்க்கலாம் வாங்க அழகி.
ம்ம்ம்ம் ஓகே
நானே உங்களுக்கு கலெக்ட் பண்ணித்தரேன். இந்த டிரஸ் சூப்பரா இருக்கும்.
ஓகே ஏதாவது சாப்பிட்டு போகலாம். ம்ம்ம்….
உனக்கு என்ன வேண்டும் அழகி.
ஜூஸ் போதும்
ஹலோ, அதென்ன உனக்கு,
அழகி எனக்கு உன்ன பிடிக்கும், உனக்கு என்ன பிடிக்கும், நமக்குள்ள என்ன வாங்க , போங்க,
ஹலோ, ஹலோ, யாரு சொன்னது உங்களை எனக்கு பிடிக்கும் என்று, பிடிச்சிருக்கவும் தான் நாம் ப்ரண்ட்ஸ் இருக்கிறோம்.
ம்ம்ம்ம்…. ஓகே,
அழகி உனக்கு மேரேஜ் இந்தியா வா, அமெரிக்கா வா?
இந்தியா, உனக்கு அனேகன்?
எனக்கு தமிழ் பொண்ணுதா வேண்டும் என்று அம்மா, அப்பா, சொல்ராங்க. ஜாதகம் வருது ஒன்றும் செட் ஆகவில்லை…
டோன்ட் ஒரி அனேகன்…
நான் இதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன். நடக்கும் போது நடக்கட்டும்.
ம்ம்ம்…
ஓகே , டைம் ஆகிறது போகலாம்..
போகலாம் பேபி
போகலாம் டா
பை டா, குட் நைட்..
பை பேபி குட் நைட்..
குட் மோர்னிங் பேபி ரெடியா…
ம்ம்ம் ரெடி டா
பை அம்மா .
ம்ம்ம் பார்த்து போங்க…
பேபி இன்னைக்கு ஒரு பார்ட்டி இருக்கு போகலாமா….
பார்ட்டியா!!!!
நான் வரவில்லை…
ஒன்றும் ப்ரோப்லம் இல்லை வா…
சரி வருகிறேன் வீட்டில் ஏழு மணிக்கு இருக்க வேண்டும்.
ஓகே அழகி வந்துவிடலாம்.
ம்ம்ம்ம்….
அழகி என்னாச்சி ரெடியா, போகலாமா?
ம்ம்ம்ம் போகலாம் டா.
வெயிட் பண்ணு பைக் பார்க் பண்ணிட்டு வருகிறேன்…
ம்ம்ம்ம்ம்…
ஹாய் டா, ஹௌ டூ யு..
பைன் டா, who is this?
ஷி இஸ் மை ப்ரண்ட் அழகி.
welcome அழகி.
தேங்க யூ..
அனேகன் நான் இந்த மாதிரி பார்ட்டி அட்டன் பண்ணுனது இல்லை.
டோன்ட் ஒரி அழகி, நான் இருக்கிறேன் பயப்பிடாதே பேபி…
ம்ம்ம்ம்..
நான் உன் கையை பிடித்துக் கொள்கிறேன் டா, மெதுவாக போ…
கையை பிடித்துக்கொள்கிறாயா? உனக்கு அழகி, பேபி, இந்த இரண்டு பெயரும் பொருத்தமா இருக்கு. நீ பேபி தான்…
குழந்தை மாதிரி பண்ற, ஓகே, வா…
ம்ம்ம்ம்….
சாப்பிடு அழகி.
ம்ம்ம்….
டைம் ஆகிறது டா போகலாம்…
நாளைக்கு ஆபீஸ்யில் மீட் பண்ணலாம் டா.
ஓகே டா பை…
பை டா…
அழகி போகலாம்
ம்ம்ம்…
சீக்கிரம் வரச்சொல்லி அம்மா கால்பன்னி பேசுனாங்க,
ம்ம்ம்
போய்டலாம் பேபி
ஏன்?? டென்ஷன் ஆகிற. வீடு வந்துருச்சி
குட் நைட் நாளைக்கு பார்க்கலாம்.
ம்ம்ம்.. பார்த்து போ….
அனேகன் நாளைக்கு நான் ஆபீஸ்க்குவர லேட் ஆகும். நீ என்னை எதிர்பார்க்காதே. ஓகே…
பேபி குட் மோர்னிங், ஏன்? ரிப்பிலே பண்ணவில்லை, போன் கால் அட்டன் பண்ணவில்லை
ஓகே, ஆபீஸ்ல பார்த்துக்கலாம்…
ஏன்?? லஞ்ச்கும் வரவில்லை. கால் பண்ணினால் இரண்டு நாட்களா சுவிட்ச் ஆஃ இருக்கிறது. இன்று வீட்டில் பார்த்துவிட்டு வந்திடலாம்…
குட் மோர்னிங் பேபி
ஏன்? இரண்டு நாளா என்னிடம் பேசவில்லை. உனக்கு என்ன பிரச்சனை, உடம்பு சரி இல்லையா, ஏதாவது பேசு, அமைதியா இருக்க, என்னவென்று சொன்னால் தான் எனக்கு தெரியும்…
ஒன்றும் இல்லை, காபி சாப்பிடு, உனக்கு டைம் ஆகிறது. நீ ஆபீஸ்க்கு கிளம்பு..
ஏன் ? கோவமா பேசுற என்னாச்சி அழகி….எதுவா இருந்தாலும் சொல்..
உனக்கு ட்ரிங் சாப்பிடுகிற பழக்கம் இருக்கிறதா.
ப்ரிண்ட்ஸ் கூட பார்ட்டி அட்டன் பண்ணினால் மட்டும்.
ட்ரிங் பன்றது தெரிந்திருந்தால் நான் உன்னோடு வந்திருக்க மாட்டேன்..
இதில் என்ன தப்பு இருக்கிறது அழகி. பார்ட்டினா இப்படி தான் இருக்கும்.
உனக்கு இது சாதாரணம் அனேகன்.
எனக்கு அப்படி இல்லை. என் அப்பா எப்படி இறந்தார் என்று உனக்கு தெரியுமா. அப்பா நண்பன் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு டிரைவ் பன்னிருக்காரு அப்பாவும் அவர்கூடத்தான் வந்தார் அக்க்ஸிடென்ட் ல அப்பா இறந்துவிட்டார். நானும் , அம்மாவும், அப்பாவோட இழப்பிலிருந்து இப்ப கொஞ்ச நாளாகத் தான் மறந்து இருக்கோம். நேற்று உன்னை அப்படி பார்த்தவுடன் எனக்குள்ள ஒரு பயம் வந்துருச்சி அனேகன்.
அப்படியெல்லாம் எதும் ஆகாது அழகி..சரி இனிமேல் நான் ட்ரிங்ஸ் பண்ணமாட்டேன் சரியா…
ம்ம்ம்ம் … ப்ரோமிஸ்
ப்ரோமிஸ் நான் ட்ரிங்ஸ் பண்ணமாட்டேன் ஓகே வா…. பிரெஷ் ஆகிட்டு வா வெளியில் போகலாம்.
நீ ஆபீஸ் போகவில்லையா, நீ இப்படி இருக்கும் போது நான் எப்படி வேலை பார்க்கிறது. நான் லீவு சொல்லி விட்டேன்.
ம்ம்ம்ம்….. வெயிட் பண்ணு டா வருகிறேன்.
ம்ம்ம்ம் போகலாம் டா….
லஞ்ச் ஹோட்டலில் சாப்பிடலாம்.
ம்ம்ம்ம் சரி டா….
பேபி ஏன்? நீ இப்படி இருக்க… குழந்தை மாதிரி பன்ற,
நீ சொன்ன நான் கேட்டுக்கொள்வேன் பேபி, நீ இரண்டு நாட்களாக பேசவில்லை ஒர்க்கில் கான்சல்டரேஷன் பண்ணமுடியவில்லை…
ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள் என் மீது எதாவது தப்பு இருந்தால் நேரில் சொல்லிவிடு நான் அதை மாற்றிக்கொள்வேன். பேசாமல் மட்டும் இருக்காதே சரியா, இது தான் பஸ்ட் & லாஸ்ட். என்னால் பேசாமல் இருக்க முடியாது. ஓகே அழகி அம்மா கால் பன்றாங்க போகலாம்.
ம்ம்ம்ம்.. கால் பன்னினால் அட்டன் பன்னு அழகி. முதலில் பிளாக் லிஸ்ட் லிருந்து என் நம்பரை எடு.
சாரி டா.. நாளைக்கு மோர்னிங் வெயிட் பன்னு. ம்ம்ம்ம்…..
குட் மோர்னிங் டா,
குட் மோர்னிங் பேபி, நீ ஆபீஸ்க்கு போய்விடு, நான் கொஞ்சம் லேட் ஆகும்.
ஓ ஓ அப்படியா, சரி ஓகே…
அனேகன் என்னாச்சி ஏன் லஞ்ச் க்கு வரவில்லை.
டுடே லீவு.
ஓ, ம்ம்ம்ம்…. நான் உனக்கு பிறகு கால் பன்றேன்.
ம்ம்ம்ம்….
அனேகன் என்ன பன்னிட்டு இருக்க, சாப்பிட்டியா, இன்னைக்கு உன்ன பார்க்கவே இல்லடா,,
பிஸியா டா
online தான் இருக்கிற ஏன் பேசவில்லை..
ஓகே டா, குட் நைட்.
குட் மோர்னிங் மதி, சாரி நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதனால் தான் கவனிக்கவில்லை.
இட்ஸ் ஓகே டா..
ஆபீஸ்க்கு கிளம்பு நான் வருகிறேன்.
ம்ம்ம்…..
போகலாமா…
போகலாம் டா..
நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசனும் மதி.
லஞ்ச் டைம் பேசலாம்…
ம்ம்ம் சரி டா….
ஹாய்,, என்ன லஞ்ச் கொண்டுவந்த பேபி…
ம்ம்ம் நீயே பாரு, சாப்பிடு டா…
ஹெலோ, ஹெலோ,, ஒரு நிமிடம் கால் வருது அட்டன் பன்னிட்டு வரேன் மதி. நீ சாப்பிடு
ம்ம்ம்ம்…
அனேகன் டைம் ஆகிறது சீக்கிரம் வா…
ஓகே, வரேன். யாரிடம் பேசிக்கொண்டு இருந்த லஞ்ச் சாப்பிடாமல்…
லஞ்ச் வேண்டாம் மதி. பசிக்கவில்லை
அதென்ன புதுசா மதி.
cool, cool அழகி.
ம்ம்ம்ம்….
ஈவினிங் நீ வீட்டுக்கு போ, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. வீட்டிலிருந்து கால் பன்னு மதி.
ம்ம்ம்….
ஹெலோ, ஹெலோ, சொல்லு பேபி என்ன பண்ற
எதோ பேச வேண்டும் என்று சொன்ன. எதுவும் சொல்லவே இல்லை.
ம்ம்ம் சொல்றேன்.
எனக்கு ஒரு கால் வருது பிறகு பேசுறேன்.
ம்ம்ம்…
குட் மார்னிங் டா, என்னாச்சி, இரண்டு நாட்களா சேட் பன்னவும் இல்லை, கால் பன்னினால் அட்டன் பன்னவும் இல்லை.
ஹாய் மதி. எப்படி இருக்கிறாய்?
ம்ம்ம் நல்லா இருக்கேன்.
ஏன்? இரண்டு நாட்களா பேச வில்லை.
நான் இந்தியா வில் இருந்தேன் அதனால் தான் உன்னிடம் பேசமுடியவில்லை.
இந்தியாவில் இருந்தியா!!!! இதை பற்றி என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை டா..
உன்னிடம் சொன்னேன்
சொல்லவில்லை டா. உன்னிடம் ஒன்று பேச வேண்டும் என்று தான் சொன்ன.
சொல்லலியா, சாரி, சொன்னேன் என்று நினைத்தேன்.
உனக்கு ஞாபகம் மறதி அதிகமா இருக்குடா
ம்ம்ம்ம் ஆமா, என்னவென்று தெரியவில்லை.
சரி இப்ப சொல்லு, திடீர்னு இந்தியா பயணம்.
ஒரு வரன் வந்துருக்கு அது விசயமா சென்றோம்..
ஓ அப்படியா!!!…
கால் வருது பிறகு பேசுறேன்.
ம்ம்ம்ம் …..
குட் மார்னிங் டா,
ஹாய், லஞ்ச் சாப்பிட்டியா மதி..
ம்ம்ம்..
ஏன் லேட்
ஒன்றும் இல்லை சும்மாதான்.
ஏன் லேட் என்று கேட்கிறேன். நீ என்னடா பதில் சொல்ற, சேட் பன்னினால் replay பன்னவில்லை, கால் அட்டன் பன்னவில்லை, என்னிடம் பேசுவதே இல்லை. ஏன் டா???….
என் சூழ்நிலை அப்படி இருக்கு
என்ன சூழ்நிலை
இந்தியாவிலிருந்து கால் பன்றாங்க, நீயும் கால் பன்ற, நான் யாரிடம் பேசுவது, என் சூழ்நிலை நீ புரிந்து கொள்.
சரி நீ பேசு யாரு வேண்டாம் என்று சொன்னது. நீ ஈவினிங் பேசுடா, இப்ப என்னிடம் பேசினால் என்ன.
உனக்கு புரியவில்லை, இப்ப உனக்கு என்ன வேண்டும். கேள்வி கேட்டு டென்ஷன் பன்ற, இப்ப என்ன சாரி கேட்டு உன் காலில் விழணும் அதுதானே உன் ஆசை.
நான் அப்படி சொல்லவில்லை டா. என்னிடம் ஏன் பேசவில்லை என்று தான் கேட்கிறேன். சாரி டா, நான் எதுவும் கேட்கவில்லை…
ஹெலோ, ஆண்டி, ஏன் இரண்டு நாட்களா மதி ஆபீஸ் வரவில்லை. போன் சுவிட்ச் ஆஃ வருது, மதி பக்கத்தில் இருந்தால் போன் கொடுங்க ஆண்டி…
ஹெலோ சொல்லுங்க
ஏன்? இரண்டு நாட்களா ஆபீஸ் வரவில்லை, போன் சுவிட்ச் ஆஃ பன்னிருக்க
ஒன்றும் இல்லை.
என்ன ஒன்றும் இல்லை. நான் கொஞ்சம் அதிகமா திட்டிவிட்டேன் அதனால் இப்படி பேசாமல் இருக்கியா.நான் திட்டாமல் வேற யாரு திட்டுவா…
நான் தான் உன்னிடம் சொல்றேன், என்னால் உன்னிடம் பேசாமல் இருக்க முடியாது என்று, ஏன் உனக்கு புரியவில்லை. என் சூழ்நிலை நீயே புரிஞ்சிக்கவில்லை என்றால், வேற யாரு புரிந்து கொள்வது, நீ என்னோட தேவதை அழகி.. நீ எனக்கு நல்ல தோழி.. நீ எனக்கு தோழியாக கிடைத்தது ஒரு வரம்.
ம்ம்ம்… சாரி டா… திடீர் என்று நீ பேசாமல் இருப்பது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீ என்னை அழகி , பேபி , குழந்தை என்றெல்லாம் பேசுவது, எனக்கு பிடிக்கும். ஆனால், இப்பொழுது மதி என்று பெயர் சொல்லி பேசுவது நீ என்னைவிட்டு விலகி இருப்பதுபோல் தோன்றுகிறது டா.
நீ என்னிடம் கேள்வி கேட்டு டென்ஷன் பண்ணாமல் இருக்கிறியா.
ஏன்டா? பேசவேண்டாம் என்று சொல்றியா.
நான் எது கேட்டாலும் கோவம் வருது.
நீ ஏன் என்கிட்ட சண்டை போடுகிறாய் மதி. சண்டை போடவில்லை டா.
நான் பேசினால் உனக்கு பிடிக்கவில்லை. பேசாமல் அமைதியாக இருந்தாலும் ஏன் பேசவில்லை என்று கேட்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
தலை வலிக்கிறது. நீ பேசினால் மட்டும் பேசுகிறேன்.
நான் எதுவும் பேசவில்லை.
மதியின் மனம் பேசுகிறது………..
என்ன நடக்கிறது ஒன்றும் புரியவில்லை, நாம் இனிமேல் அவனிடம் எதுவும் பேசவேண்டாம். அவன் பேசினால் மட்டும் பேசுவோம். அவன் நம்மை விட்டு தூரமா போய்விட்டான் என்று நினைக்கிறன். நம்மிடம் அன்பாக இருப்பவர்கள் எல்லோரும் சீக்கிரமா நம்மை விட்டு போய்விடுகிறார்கள். முதலில் அப்பாவை இழந்தேன். பிறகு, நண்பனிடமிருந்து கிடைத்த அன்பும் பாதிலேயே பறிபோனது.
நாம் மற்றவரை சார்ந்து வாழ்வதால்தான் நமக்கு இதுமாதிரி நடக்கிறது. நாம் ஒவ்வொரு முறையும் எத்தனை அன்பானவர்களை துளைத்துவிட்டு வருத்தப்பட்டு நிற்பது. நமக்கென்று ஒரு இலக்கை தேடி, அந்த இலக்கை அடையக்கூடிய வழியை மட்டும் பார்ப்போம்.
அழகி, ஏன்? வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்தியா போறிங்களா. ஏன்? திடீர் முடிவு.
கம்பெனியில் 6 வருடம் ஒப்பந்தம் முடிந்தது.
இனிமேல் நாம் பேசமுடியதா
ஏன்? அனேகன் அப்படி நினைக்கிற, நீ எப்பொழுது கால் பன்னினாலும் நான் பேசுவேன்.
கடந்த 6 வருடங்களாக நீ என்னிடம் காட்டிய அன்பு, அக்கறை, பரிவுக்கு நன்றி அனேகன்.
உன்னை மிஸ் பன்றேன் அழகி…..
நானும் தான். குட் பை.
எந்த நாட்டில் இருந்தாலும் உண்மையான அன்பும், நட்பும் தொடரும்…
இப்படிக்கு,
அன்பிற்காக ஏங்குகிற மனம்.