நடைப்பிணங்கள்!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 70
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு ஏரிக்கரையில் கிடந்த ஆமையைப் பார்த்த இரு சிறுவர்கள் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன்: இந்த ஆமைக்குத் தலை இல்லை, ஆகவே செத்துப் போயிற்று.
மற்றவன்: செத்துப் போனால் எப்படி அசையும்?
இருவரின் விவாதமும் சூடாகிக் கைகலப்பு வரும் நேரம ஒரு பெரியவர் அவண் வந்தார். அவர் சொன்னார்.
‘உங்கள் இருவர் கூற்றிலும் உண்மை இருக்கிறது. இந்த உலகிலும் அநேகர் நாற்பது வயதிலேயே செத் துப் போனாலும் எழுபது, எண்பது வயது வரை இந்த ஆமையைப் போல புதைக்கப்படாமல் திரிகிறார்கள்’ என்றார்.
மனுஷன் சுகத்துடன் ஜீவித்திருக்க மூன்று காரி யங்கள் வேண்டும்.
நல்ல உணவு, நல்ல காற்று, நல்ல உழைப்பு.
ஆத்தும சுகத்திற்கும் இம் மூன்றும் அவசியமே;
நல்ல உணர்வு -திருவசனமாகிய ஞானப் பால்
நல்ல காற்று -ஜெபமும்தியானமும்
நல்ல உழைப்பு நல்ல போராட்டத்தைப் போராடுதல்.
சரீர சுகத்தையும் ஆன்ம சுகத்தையும் இழந்து அநேகர் மரித்துப் போயிருப்பது அவர்களுக்குத் தெரி யாது. சிம்சோனை விட்டுக் கர்த்தர் விலகினார். அவன் பெலன் அவனைவிட்டு எடுபட்டுப் போனதை அவன் அறியாதிருந்தான்.
அநேகர் ஆவியும் அனலுமின்றி புதைக்கப் படாமல் நடைப்பிணங்களாகத் திரிகிறார்கள்.
“என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது” [சங்கீதம் 51:3]
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டா நித்திய ஜீவன்” [ரோமர் 6:23]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
