நடுநிசியில் பிறந்தார் இயேசு பாலன்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 176

(கிறிஸ்துமஸ் கவிதை)
கரும் இருளில் குளிர்ந்த குடிலில்
கடவுள் வந்து பிறந்தார் மனிதனாக
கயமைகளைப் பிடுங்கி களைந்திடவே
கனவான் வந்தார் வானிலிருந்து பூமிக்கே….
கனவுலகில் வாழும் மனிதரை
கண்டபடி வாழும் கால்நடை மாந்தரை
கரையேற்றி நல் வழிப் படுத்திட
கட்டு மரமேறி நற்செய்தி பரப்பிய தேவனவர்…
எங்கும் எதிலும் பாவங்களாய்
எழுதிச் செல்லும் மைந்தர்களை
எழுந்திடச் செய்யவே – உலகிற்கு
வந்தார் சிலுவைச் சுமந்திட சின்ன குமாரன்…
வண்ண நிலவைச் சுமக்கும்
வானிலிருந்து பூமிக்கு வந்தார்
வானகத் தேவன் குழந்தை இயேசு பாலனாக
வருந்தும் மாந்தரின் பாவங்களைக் கழுவிட…
குழந்தையாய் வந்தார் குழிவிழுந்த
குமிழ் விடும் சிரிப்போடே அன்னை மரியிடமிருந்து
கும்பிட்டுத் தொழுவோம் பாலன் இயேசுவை.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
