தெய்வச்செயல்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 6
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வேடன் வேட்டையாடக் காட்டிற்குச் சென் றான். ஓரிடத்தில் ஒரு மானைக் கண்டான். அதனைப் பிடித்துவிட்டால் இரண்டொரு நாளைக்கு உணவுக் கவலை இல்லாமல் இருக்கலாம் என்று முடிவுசெய் தான். அம் மானைத் துரத்திக்கொண்டு மிகு விரைவாக ஓடினான். மானை எப்படியாவது பிடித்துவிட வேண்டு மென்னும் பரபரப்பினால் எதனையும் பாராமல் விழுந் தடித்து ஓடினான். அந்த மானோ இன்றைக்கு நாம் இறந்தொழிந்தோம் என்னும் அச்சத்தினால் பறந். தோடியது.
வழியில் ஓரிடத்தில் கிணறு ஒன்று புதர்களால் மூடப்பட்டிருந்தது. விரைந்தோடிய வேடன் அக் கிணற்றில் விழுந்தான். அக் கிணறு மிக ஆழமாக. இருந்ததன்றி மிகுந்த சேறாகவும் இருந்தது. வேடன் விழுந்த விரைவினால் அப்படியே சேற்றுக்குள் அழுந்தி விட்டான். அவனால் தலையைக்கூட மேலே தூக்கமுடிய வில்லை. சிறிதுநேரத்தில் திக்கு முக்காடி மாண்டு போனான்.
மான் உயிர்பிழைத்து ஓடிப்போய்விட்டது. ஆகவே, நாம் நினைக்கிற எல்லாம் நமது எண்ணப் படியே முடிவதில்லை. எல்லாம் கடவுளின் திருவுளப் படிதான் இவ் வுலகத்திலே நடைபெறுகிறது. இதனை உணர்ந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் எவ்வளவோ மனக்கோட்டைகளைக் கட்டி இறுதியில் அவை நிறை வேறப் பெறாமல் மிகுந்த மன வருத்தத்திற்கும் துன்பத் திற்கும் உள்ளாகிறார்கள்.
”ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை நினையாத
முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.”
(உரை.) ஒன்றை நினைக்கின் – ஒரு பொருளைப் பெற நினைத் தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் – அப் பொருள் கிடையாமல் வேறொகு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும், அன்றி அது வரினும் வந்து எய்தும்-அப்படியல்லாமல் அப் பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும், ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் – மேலும் ஒரு பொருளை நினையாதிருக்கு முன்னே அது தானே வத்து நின்றாலும் நிற்கும், எனையாளும் ஈசன் செயல் – இவையெல்லாம் என்னையாண்டருளும் கடவு ளுடைய செய்கைகளாகும்.
(கருத்து.) இவ்வுலகத்தில் நிகழும் எல்லாச் செயல்களும் தெய்வத் திருவருளின்படியே நடைபெறுகின்றன.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026