தெய்வசிகாமணி
கதையாசிரியர்: மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 236
(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12 | அதிகாரம் 13-15
பத்தாம் அதிகாரம்

“அண்ணாச்சி, வாருங்கள், வாருங்கள் நமஸ்காரம். ஏது இவ்வளவு தூரம். ‘நடுக்காட்டில் கெங்கை சூதித்தது போல்’ இந்த எட்டரை மணி வண்டிக்குத்தான் வந்தீர்களோ, உட்காருங்கள். ஊரில் எல்லாரும் க்ஷேமந்தானே “என்று தாசில் நெல்லைபப்பபிள்ளை ஒரு புதியவரோடு அளவளாவிக் கொண்டிருந்தார்.” பள்ளிக்கூடத்திலிருந்து வந்த தெய்வசிகாமணி தன் தகப்பனாரிடம் போய், மெல்ல இவாள் நேற்று எங்கள் பாடசாலையில் ஒழுக்கமென்னும் விஷயத்தைப் பற்றி உபந்நியாசம் பண்ணினார்கள். மஹாவித்வானாம் தமிழில். பாப்பையாபுரமாம் இவாள் பெயர் சாமிநாத கவிராயரென்று எங்கள் எட் மாஸ்டர் சொல்லிக் கொண்டிருந்தார். என்றான். தாசில்தார், அண்ணாச்சி, நேற்றே வந்திருக்கிறீர்களாமே என்னா உங்கள் மனதும் இப்படியாய் விட்டது. தங்களுக்கு ஒரு குற்றஞ் செய்யவில்லையே.
சாமிநாத:- சிவா அப்படியொன்றும் பேதமாக நினைக்க வேண்டாம். குற்றமிருந்தாலும் பாராட்டாத நான் யாதொரு வழுவுமில்லாத பரிசுத்தராகிய தங்கள் விஷயத்தில் யாது நினைப்பேன். பத்து நாளைக்கு முந்தித் திருநெல்வேலிக்குப் போயிருந்தேன்.அங்கே தங்களைப்பற்றி விசாரித்ததில், வடக்கே மாற்றியிருக்கிற தென்று மாத்திரம் சொன்னார்களே தவிர இவ்வூரைத் தெளிவாய் ஒருவருஞ் சொல்லவில்லை. ஆகையினாலே தான் நேற்றே நம்முடைய வீட்டுக்கு வரக்கூடாமற் போய்விட்டது.
இருக்கட்டும் எல்லாரும் சௌக்கியந்தானே தங்களுக்குப் பையன் ஒருவன் தானோ?
தாசில் :- இவனொருவன்தான் கடவுள் தந்தபிக்ஷை
சாமி :- எந்த வகுப்பீல் வாசிக்கிறானோ?
தாசில் :- யவ்.ஏ.கிளாஸ் ஸீனியர்.
சாமி :- வயஸென்ன ஆகிறது?
தாசில் :- பதினாலு பதினைந்திருக்கும்.
சாமி :- உத்தேசந்தானே? எந்த வருஷம் ஜெனனம்.
தாசில் :- ஞாபகமில்லை.
சாமி :- என்னையா அருமைக் குழந்தை பிறந்த வருஷங் கூடத் தெரியாதென்கிறீர்கள். ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள் நான் பார்க்க வேணும், அவனைப் பள்ளிக்கூடத்திற் பார்த்தது முதல் எனக்கு அவன் மீது ஒரு விதமான அன்பு ஜெனிக்கிறது இவனிடத்தில் பல உத்தம லக்ஷணங்கள் காணப்படுகின்றன. இவன் முகத்தில் வசீகர சக்தி பதிந்து கிடக்கிறது. இவைகளெல்லாம் பிறந்த குறிப்பை வைத்துப் பார்த்தால் மிகத்தெளிவாய் விளங்கும்.
தாசில்:– அண்ணா, தங்களுக்கு இக்குழந்தை பேரில் இயல்பாகவே பக்ஷமுண்டானதைப் பற்றி மிகவுஞ் சந்தோஷிக்கிறேன். போஜனத்தின் மீதும் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் ஸ்நானத்துக் கெழுந்தருளி யாகட்டும்.
என்றவுடனே இருவரும் எழுந்து போய்ச் சாப்பாட்டு வேலையை முடித்துக் கொண்டு வந்து மேல்வீட்டு ‘வராந்தா’விற்போட்டுள்ள நாற்காலிகளின் மீதமர்ந்து தாம்பூலம் போட்டுக்கொண்டே..
தாசில்:- அண்ணாச்சி, பையன் ஜாதகத்தைப் பெட்டிகளெல்லாம் தேடினேன் தென்படவில்லை. நாம நக்ஷத்திரத்திற்குப் பார்த்துத்தானே சொல்லுங்கள். நீங்கள் எப்படிச் சொன்னாலும் பலன் சரியாயிருக்குமென்று எனக்குத் தெரியும்.
சாமி:- இருந்தாலும், ஜென்ம ஜாதகத்தைப் போல பேரி ராசிக்குப்பலன் சரியாச் சொல்ல முடியுமா, கொஞ்சம் பிரயாஸப்பட்டா ஜாதகத்தைத்தானே தேடிக்கொண்டு வாருங்கள்.
தாசில்தார் தனக்குள்ளேயே இதேது தர்மசங்கடமாயிருக்கிறது ஜாதகத்தைக் காணவில்லை யென்று கண்டிப்பாய்ச் சொல்வதுங் கொஞ்சம் இழிவாயிருக்கிறது. தவிரவும், கல்விமானும், ஸ்வய பந்துவுமாகிய இவரிடத்தில், முழுப்பொய்யைச் சொல்லி யேமாற்றுவதும் உசிதமல்ல, நாளை உண்மை வெளி போது, நம்மிடத்தில் இவர் வைத்திருக்கிற அன்பும் மரியாதையும் கெட்டுப் போகும். அன்றியும், சாமான்யப் பேர்வழியுமல்ல. இவரிடத்தில் உண்மையைச் சொல்லாம லிருக்கவுங் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, அண்ணாச்சி, தங்களிடத்தில் ஒரு ரகஸ்யமான காரியத்தைச் சொல்லப் போகிறேன். அது தங்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணத் தக்கதாயிருக்கும். பிற்பாடு ஜாதகத்தைக் காட்டுகிறேன்.
சாமி:- அப்படியா, குழந்தையின் ஜாதக விஷயத்திலும் ஒரு ரகசியமா? ஆனாற் சொல்லுங்கள். அந்தரங்கமென்று தாங்கள் சொல்லி விட்டதினாலே நானும் அப்படியே மனஸுக்குள்ளே வைத்துக் கொள்வேன், சந்தேக முண்டோ?
தாசில்:- ஆஹா ஒரு ஐயப்பாடு மில்லை பையன், நம்முடைய சொந்தப் பிள்ளையல்ல.
சாமி:- அப்படியா? பின்னை யாருடையதோ?
தாசில்:- அதுவுஞ் சொல்ல முடியாது.
சாமி: முடியாதென்றால், என்னிடம் சொல்லப்படா தென்பதா? தங்களுக்குந் தெரியாதா?
தாசில்:- தங்களிடம் சொல்லாம லொருமறைவா; தெரியாது.
சாமி:- என்னிடத்தில் இன்னும் சங்கைவைத்துத்தான் பேசுகிறீர்கள். ஒரு சந்தேகமும் வேண்டாம். மனத்தாராளமாச் சொல்லுங்கள் ஒன்றும் வராது.
சில வருஷங்களுக்கு முன்னே நடந்த லக்ஷுமிமால்க் கதையைத் தெளிவாயுஞ் சுருக்கமாயும் சொன்னார் தாசில்தார்.
சாமி: அத் திருடர்கள் பேசிக்கொண்ட சம்பாஷணையிலிருந்து, பெற்றோர் பெயர் இருப்பிட முதலிய சில அடையாளங்கள் புலப்படவில்லை யென்றாலும், இன்ன ஜாதிக் குழந்தை யென்பதும், நல்லூருக்குப் பத்து நாழிகை வழித்தூரத்தில் இப் பிள்ளையின் ஊருள்ள தென்பதும், இவனது சிற்றப்பன் பெயர் தங்கச்சாமி யென்பதும், திருச்செந்தூர் விசாகத் திருவிழாவிற் றவறி விட்ட தென்பதும், இம் மகவின் வீட்டுப் பரிசாரகன் பெயர் கணபதி என்பதும், ஒச்சன் வாய்மொழியிலிருந்து தங்களுக்குக் கிடைத்த சாக்ஷியங்கள் இவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு பெற்றோர்களைக் கண்டு பிடிப்பது கஷ்ட சாத்தியமல்ல. இதோ இந்தப் பத்திரிகையின் மூன்றாவது பக்கத்தில் ‘காணாமற் போன தெய்வசிகாமணி’ என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளதைப் பாருங்கள், வாசித்துப் பார்த்தீர்களா? இப்போது குழந்தையின் தாய் தந்தையர் விஷயத்தில் என்ன நினைக்கிறீர்கள்.
தாசில்:- இன்னமும் சந்தேகமா, பாப்பையாபுரம் மிராசு சோமசுந்தரம்பிள்ளையின் பிள்ளையே இப்பிள்ளை. ஆனால் இதுவரையும் வளர்த்துவிட்டு எப்படித்தான் மனமொப்பி இன்னொருவர்வசம் அனுப்ப முடியும்? அதுவுமன்றி, இந்தச்சமயம் என்னை அவனுக்குத் தந்தையல்ல வென்று வெளிப்படுத்தினால் அவன் படிப்புக்கும் பின்னேற்றத்திற்கும் மிக்க இடையூறாப் முடியும். இதைக் கவனித்துக் கொள்ளுங்கள், எனக்கும் இவனைத் தவிர வேறு சந்ததி களுமில்லை, அப்பால் தங்களிஷ்டம் என்று முடித்தார் தாசில்.
சாமி:- ஐயா, இவனையிழந்த பின்பு சோமசுந்தரம் பிள்ளை வெகுநாளாய் பைத்தியங் கொண்டிருந்தார். இப்போது ஞானப் பைத்தியத்திலிருக்கிறார். இவன் தவறின விஷயத்தில் எனக்கு ஆரம்பத்திலேயே சந்தேகமேற்பட்டுத் தேட முயற்சித்தேன். மிராசுப்பிள்ளையின் வியாதியே தடைபடுத்தி விட்டது. தங்கச்சாமியால் இத்தனை விபரீதமும் நடந்திருக்கிறது. அவன் இன்னமும் ஊரிற் செய்கிற அக்கிரமங்களுக்குக் கணக்கு வழக்கில்லை. அதை ஒருவாறு நிவர்த்திக்க வேண்டியது நம் போன்றவர்கள் கடமையாயிருக்கிறது. ஊரிலும் தங்கச்சாமி சொல்லுக்கு மீறிப் பேசுவோர் கிடையாது. ஊரிலுள்ளவாது, பொன்னோ பொருளோ எல்லாம் அவனுக்கே சொந்தம். இச்சமயம் குழந்தையை அவ்வூருக்கு அனுப்பவே வேண்டாம். நாம் மறியாதைக்காக அடங்கி நடக்க வேண்டிய நேரமாயிருக்கிறது. நான் இவனைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டிய வியாஜமாகவே தான் புறப்பட்டேன். ஊரை விட்டு வெளியேறி வெகு நாளாகிறது. நேற்றுத்தினத்துடன் என் விரதத்தின் பாதி முடிந்திருக்கிறது. அஃதாவது பள்ளிக்கூடத்தில் உபந்நியாசம் பண்ணிக் கொண்டிருக்கும் போது தெய்வசிகாமணியின் வலது கையிலுள்ள பச்சையைக் கவனித்தேன். பாதி விரத முடிந்ததாகக் கருதினேன். இதற்காகவே ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தவறாமற் பிரசங்கம் பண்ணிக் கொண்டு வந்தேன். மற்றொரு பாதி முடிவு தங்கச்சாமியையும் அவனது நண்பரையும் சிறைவாசம் பண்ணுவித்தலே, நிற்க. நாம் இப்போதொரு காரியஞ் செய்ய வேண்டும். குழந்தை தங்களிடத்தி லிருக்கிறதாக ஒரு கடிதம் எழுதி அதில் நானும் கையெழுத்திட்டுப் பாப்பையாபுரத்திற் கனுப்பிவிடல் வேண்டும். பிற்பாடு நடக்க வேண்டியதைப் பற்றி நான் காசிக்குப் போய் விட்டு வந்த பின் யோசித்துக் கொள்ளலாம். என்ன தங்களுடைய அபிப்பிராயம் சொல்லுங்கள்.
தாசில்: தங்கங்களுடைய வார்த்தைக்கு இரண்டுஞ் சொல்வேனா, அப்படியே செய்கிறது. எப்படியும் குழந்தைக்கு யாதொரு மனக்கிலேசமும் உண்டாகக் கூடாது. அதுதான் நான் கேட்டுக் கொள்கிறவரம்.
சாமி:- அப்படி யொன்றும் நேராது. தங்கள் கைவச மிருக்கும் போதென்ன கவலை.
என்றிருவரும் கலந்து ஒரு கடிதம் எழுதி சோமசுந்தரம் பிள்ளைக் கனுப்பிவிட்டு மறுநாளே காசியாத்திரையைக் கருதிப் போய் விட்டார் சாமிநாதபிள்ளை.
பதினோறாம் அதிகாரம்
மனுஷா மனுஷனெல்லாம் நம்முடைய பேரைக் கேட்டவுடனே, கப்சிப் பென்னாமல் வாயைா மூடுகிறான். அப்படி யிருக்கச் சில ஏழைப்பயல்களாய் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை யெதிர்க்க முன் வந்து விட்டான்களே. இந்த எளிய பயல்களுக்கு இவ்வளவு தைரியம் எது எல்லாம் அந்த அதிகப்படித்த குரங்கன் சாமிநாதன் செய்து வைத்த வேலை. அவனை ஆரம்பத்தில் ஏளனமாக மதித்தது நம்பேரிற் பெரியதன்று. அவன் கல்வி எவ்வளவு கற்றிருக்கிறானோ அதற்கு மேல் உலக அனுபவத்திலும் பழகியிருக்கிறான். அவனைப் பணத்தைக் கொண்டு சரி பண்ணலாமென்றாலும், அவன் அதிலுங் குறைந்தவனா. ஒன்றுக்குங் கட்டுப் படமாட்டான். குடியானவன் களுக்கு இவ்வளவு உபபலமுஞ் சேர்த்துக் கொடுத்து விட்டு இந்திரஜித், நிகும்பலை யாகஞ்செய்யப் போனதுபோல எங்கையோ போயி ருக்கிறானென்னுங் கேள்வி வரட்டும் பார்த்துக் கொள்வோம். ஜெய முள்ளவரைக்கும் பயமில்லை என்று தங்கச்சாமிபிள்ளை சில ரிக்கார்டுகளை யெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்நேரம் காமாக்ஷியம்மாள் வந்து, “இந்தாருங்க, எங்கையா வந்திருக்கா..” என்றாள்.
தங்கச்சாமி:- அம்மான், வாருங்கள் ஏது பரப்பையாபுரமும் பகையா? ஒரு லெட்டரும் பஞ்சமாய் போய்விட்டதே.
பூமிநாதபிள்ளை:- என்ன பண்ணச்சொல்கிறீர்கள் எனக்கும் பலவிதமான அலைச்சல் தான். கேஸூ என்னமோ ஒருவிதமாக.
தங்க :- விதமென்ன விதம் கோர்ப்டார் நிரம்ப வாலிபம். அனுபவமில்லாத ஆள். ஒரு பக்கமாகத் திரும்பிக் கொண்டு குடியானவன்களுக்கு அநுகூலமாய்த் தீர்ப்புப் பண்ணியிருக்கிறதாகத் தெரிகிறது. ஹைக்கோர்ட்டிருக்கிறது பார்க்கிறேன். ஒருகை, இத்தோடு விட்டு விட்டேனா?
பூமி:- நீலகண்ட சாஸ்திரி அநுபவமில்லாதவரா, அடே அப்பா, அந்த மனிதனெழுத்துக்குள்ள மதிப்பு எந்தக் கோர்ட்டாருக்குத் தான் உண்டு. அந்தப் பைஸலுக்கு மேல் அப்பீலே அநேகமாக இருக்க மாட்டாதென்று பெரிய பெரிய வக்கீல்களெல்லாஞ் சொல்லுவார்களே. உங்களுக்கும் சமயத்திலே காரியா காரியம் தெரிகிறதில்லை. எந்நேரம் பார்த்தாலும் பிடிவாதப் பேச்சே குடியாயிருந்தால் எதைச் சாதிக்க முடியும்! கோர்ட்டுக்குப் போனவன் எவன் முன்னுக்கு வந்திருக்கிறான். நம்மைக் கையெடுத்துக் கும்பிடுகிற ஏழைப்பயல்களை யெல்லாம் எதிரியாக்கிக் கொண்டு கச்சேரி வாசலிலேயே காத்துக் கிடந்தால் ரெம்ப மரியாதையல்லவா? எட்டு நாளையில் ஆட்டி வைக்கப்படாதா? நான் சொன்னபடி ஒரு கேஸ் மாத்திரம் போட்டிருந்தால் இப்படி யெல்லாம் நேரிடுமா? ஆபத்திலே ராஜிக்கு வருவான்கள். அச்சமயம் பார்த்து ராஜிநாமா எழுதுகிற குமாஸ்தாவைச் சரி பண்ணிக் கொண்டால் எதிரிகளுக்குச் சொத்தும் ஒரு கேடோ? உன்னல், பதுங்கல், தெரிந்து நடவாதவன் என்ன மனுஷன், மாப்பிள்ளை ஐக்கோர்ட்டிருக்கிறது பார்த்துக் கொள்ள லாமென்கிறீர்களே? கேஸுக்குப் போகாதவன் ஐக்கோர்ட்டைப் பார்த்தால், தணடித்து விடுவார்களோ? அந்தக் கோர்ட்டில் (Gruond) கிரவுண்டு இல்லையென்று கேஸைத் தள்ளிவிட் டால் யாரைக் கட்டிக் கொண்டழுகிறது! என்னைக் கேளாமற் செய்த எந்தக் காரியந்தான் விளங்கியிருக்கிறது. அன்றைக்கொரு காரியம் முடித்தோமே அப்படி யிருக்க வேண்டாமா? எதிலும் யுக்தி வேண்டும். என்று மட மட வென்று பேசினார்.
தங்க:- அந்த யுத்தியிலுந்தான் மண்விழுந்து விட்டதே. யாராருக்கு என்னென்ன கேடு வரக் காத்திருக்கிறதோ தெரிய வில்லை.
பூமி:- என்ன மாப்பிள்ளை இப்படிச் சொல்கிறீர்கள் வெகுகால மாய்விட்டதே.
தங்க:- எத்தனைகாலமானா லென்ன நம்முடைய கால வித்தியாசததுக்கு, இந்த வூர்ப் போஸ்ட்மாஸ்டர் ஒரு வாரம், ரஜாவில் அணியாபரண நல்லூருக்குப் போயிருக்கிறான். அவன் வேலையை நான் பார்த்துக்கொண்டு வருகிறேன். இன்று மெயிலில் இந்தக் கடிதம் என் தமையனார் பேருக்கு விலாசம் போட்டு வந்தது, நெடுங்காலமாக அவர் பேருக்குக் கடிதப் போக்கு வரவு இல்லாதிருக்க, துயாரால் எழுதியிருக்கக் கூடுமென்று பிரித்துப் பார்த்தேன், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல எவன் நமக்கு விரோதியோ, எவன் நம்முடைய யுக்தி வல்லபத்தைக் கண்டு பிடிக்கும் சமர்த்தனோ அவனால் எழுதப் பட்டிருக்கிறது. அது மட்டுமா! ஒரு தாசில்தாருஞ் சேர்ந்திருக்கிறதாய்த் தெரிகிறது.
பூமி:- வறுத்த காணம், முளைக்குமா மாப்பிள்ளை நேற்றிருந்தவனை இன்றைக்குக் காணோம். ஒரு வியாழ வட்டத்திற்கு முந்திப்போன ஒரு கொசுகு இத்தனை பெருவாரி நோய்களுக்குத் தப்பிப் பிழைத்துப் பெரிய மனுஷத் தனத்திற்கு வந்து விடப்போகிறதோ? காகிதம் சிருஷ்டணை.
தங்:- அம்மான் நானும் அப்படித்தான் யோசனை பண் ணினேன் ஆனால் எங்கேயாவது கிடந்து முளைத்துவிட்டால் பெரிய அனர்த்தமா முடியுமே என்றுதான் கொஞ்சந் திகில் தவிரவும், சாமிநாதனுக்கெல்லாம் ஒரு தாசில்தார் நேசம் கிடைப்பதானால் சாமானியமா? இவன் அவ்வளவு தரவான,ஒரு கடிதத்தில் அவ ரோடு சேர்ந்து கையெழுத்துப் போடும்படியான அவ்வளவு யோக் கியனா, அதுதான் எனக்குச் சந்தேகமா இருக்கிறது. இப்படி ஒரு புரளியைக் கட்டி விட்டால், மான்ய நிலவழக்கை அசிரத்தையாய் விட்டு விடுவோமென்று நினைத்துக் கொண்டு இந்த எழுத்துக் கொடுத்திருக்கிறான். 10..12- வருஷங்களுக்குப் பிறகு குழந்தையைக் கண்டு பிடித்தவன் கூட்டிக்கொண்டு உடனே வர மாட்டானோ.
பூமி:- சாமிநாதபிள்ளைக்குத் தாசில்தார் பழக்கம் குதிரைக் கொம்பாக நினைக்க வேண்டாம். அவனுக்கு பெரிய பெரிய அதிகாரிகளெல்லாம் பழக்க முண்டே, இந்த விஷயத்தில் அவனுக்கு மேற்போக நம்மால் முடியாது. அவன் வாயைத்திரந்து பேச ஆரம்பித்து விட்டால் வையகமெல்லாம் மயங்குமே. அதிருக்கட்டும் இன்றைக்குக் கண்டவனை நாலு மாதங் கழித்துப் பார்த்தால் அடையாளந் தெரிந்து சொல்ல முடியாது. இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஒரு தடியனைக் கொண்டு வந்து இவன் தான் காணாமற் போன கண்மணி யென்று ருஜூப்படுத்தி விடுவானோ அவன் கிடக்கிறான் பூல ஜன்னலைச் சாற்றிவிட்டு லட்டரைப் படியுங்கள் மாப்பிள்ளை..தங்கச்சாமிபிள்ளை கடிதத்தை யெடுத்து.
“மகாகனம் பொருந்திய ஐயா, உபய குசலோபரி 16-5-26ல் திருச்செந்தூர் விசாகத் திருநாளிற் காணாமற் போன தங்கள் தெய்வசிகாமணி என்னிடம் சுகமே இருக்கிறான். தங்கள் மைத்துனர் கனம் சாமிநாதக் கவிராஜாரவர்கள் நேற்று தினம் இவடம் வந்தார்கள் அவர்கள் சொல்லத்தான் தங்கள் குழந்தை யென்று தெரியும். பரீக்ஷாகாலம் சமீபமாயிருக்கிறது முடிந்தவுடன் கொண்டு வந்து விட்டு விடுகிறேன். ஏனைய விவரங்கள் நேரில் வேணும். சுபம்.
தங்கள்
நெல்லையப்பபிள்ளை
தாசில்தார்
மணிமங்கலம்.
காணாமற் போன கான் முளையைக் காலங்கடந்துங் கருடணை யோடளித்த கடவுட்கு வந்தனஞ் செலுத்துங்கள், காசிக்குப் போய் விட்டுக் கடிதிற்றிரும்புவேன் மற்றய பின்.
சாமிநாதன்.
படித்து முடிக்கவும் பூமிநாதபிள்ளை பூமியைப் பார்த்துக் கவிழ்ந்து ஆலோசனை யிலாழ்ந்து குறிப்பான தேதியைப் போட் டெழுதியிருப் பதினாலே கடிதம் உண்மையானதாயிருக்கக் கூடுமென்று மருமகனிடஞ் சொன்னார்.
அதை வைத்துத்தான் கற்பனையாக எழுதப் பட்டதென்று நினைக்கிறேன். தேதி போட்டவனெல்லாம் சாமிநாதனே, எவனாவ தொருவனுக்குக் கையிலே ‘தெ’பச்சையைக் குத்திக் கொண்டு நமக்கெதிரியாக நிறுத்தி நம்முடைய மிராசைப் பறித்துக் கொள்ள அஸ்திவாரம் போட்டு விட்டான். இதிற் சந்தேகமில்லை யென்றார் தங்தச்சாமிப்பிள்ளை.
பூமி:- இது எப்படியும் வரட்டும் பார்த்துக் கொள்வோம் மானிய நிலக்கேஸூக்கு அப்பீல் கோர்ட்டில் என்ன தீர்மானஞ் செய்யப் பட்டிருக்கிறது.
தஙக:- அப்பீல் பைஸலா, தாவா நிலத்தில் நாம் பிரவேசிக்கவே கூடாதென்றும், கோர்ட்டுச் செலவும் மத்யகால நஷ்டமும் குடியானவன்களுக்கு நாம் கொடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பாகியிருக்கிறது. அதில் இன்னொரு பேரிழவும் வந்து விழுந்திருக்கிறது. அது என்ன வென்றால் குடியாவன்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற தாவா நிலங்கள் நம்முடைய அநுபவத்திலிருக்கிறதாக வியாஜ்பம் போட்டால் அனுகூலமாயிருக்கு மென்று நம்முடைய கீழ்க்கோர்ட்டு வக்கில் சொல்லி அந்தப் பிரகாரஞ் செய்திருந்தோமல்லவா, அப்படி அனுபவித்ததாகச் சொல்லுகிற காலங்களுக்குள்ள மேற்படி நிலங்களின் வருமானத்தையும் நாமே செலுத்த வேண்டு மென்றும் உத்திரவு செய்யப்பட்டிருக்கிறது. அதுமாத்திரம் 12 ஆயிர ரூபாய்க்குக் குறையாது. இரண்டு கோர்ட்டுச் செலவும் பின் வட்டியும் செலுத்தவும் வேண்டும். குடியானவன்கள் விரோதம் ஏற்பட்டதிலிருந்து நமது விவசாய வேலைக்கு ஆட்கிடையாமல் சொந்த நிலங்களும் மூன்று வருஷமாகப் பயிரிடப்படாமற் பெரு நஷ்டம் நேர்ந்திருக்கிறது. இது சமயம் சாமிநாதன், ஊரிலிருந்தால் இந்தச் செலவுத் தொகை வகையராவுக்காக நம்மை மிகவும் அலக்கழித்து விடுவான் எப்படியும், வண்ணான் துறை முயலைப் போல, திடுக்கிட்ட நெஞ்சோடு காலங்கழிக்க நேர்ந்து விட்டது. அட்டியில்லை யென்று முகவாட்டத்துடன் சொன்னார்.
இந்தப்பரம சண்டாளர்கள் பிரஸ்தாபமே நமக்கு வேண்டாம் மணிமங்கலந் தாசில்தாரண்டை போவோம்.
பன்னிரண்டாம் அதிகாரம்
“பொய் வழக்காளிகளும், மோசக்காரரும், திருடரும், பகற்காலத்துக் கூகை போற் பதுங்கவும், சாதுக்களெல்லாம். கார்காலத்து மயிலினங்கள் போல, கம்பீர்யமாயுலாவும் இராஜாங்க விஷயத்தில் இம்மியும் வழுவில்லாமல், நெல்லையப்பபிள்ளை உத்தியோகம் பண்ணிக் கொண்டு வரும் போது, சாதாரணமா யுடம்பிலேற்பட்ட ஒரு அற்பவியாதிக்கு அவ்வூர் டாக்டரிடம் மருந்து சாப்பிட்டு வந்தார். அப்பண்டிதர் இவர் தேகத்தைப் பரீக்ஷிதது மூளை அஹோ ராத்திர முயற்சியாற் பல க்ஷயப்பட்டிருக்கிற தென்றும் இரண்டு வருஷத்திற்கிடையில் உத்தியோகம் வஹிப்பது அபாயமென்றும், அபிப்பிராயந்தந்தார். அதன் மீது தமது தேக சுகத்தைப் பாதுகாத்துக் கொள்ளத் தாம்பிரபர்ணி நதி தீரத்துள்ள தமது சொந்தவூரே தகுதியான இடமென்று கருதி, லீவு வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தார். தெய்வசிகாமணி இவ்வருடம் B.A.பி.ஏ. வகுப்பிற்சேர்ந்து வாசிக்க வேண்டியவனா யிருந்தான். ஆனால் உயர்காப்பாடசாலை திருநெல்வேலியில் இல்லாமையால் படிப்பை நிறுத்திவிடும் படியாயிற்று.
தாசில்தாருக்கு வர வர வியாதி அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. அவர் மனைவியின் பிதாவான வேணுவனலிங்கம் பிள்ளை யென்பவர் குடும்ப விசாரணைக் கர்த்தராக இருந்து வந்தார். அவர் அகம்பாவமும், கோபத்தனமுமுடைய ஒரு மனிதர்.
அவருக்குத் தெய்வசிகாமணியைப் பற்றிய வரலாறு முற்றிலுந் தெரியாது. அவனைக் குடும்பத்திற் சேர்த்துக் கொண்டிருக்கிறதே அவருக்கு மிகவும் அகௌரவமாகப் பட்டது. ஆகிலும் தம்மகளும் மருமகனும் அதிக அன்போடு வளர்த்து வருவதால் ஒன்றும் பேச இடமற்றிருந்தார் தற்காலம். அவர் யோசனை கேட்டு அதன் படி நடக்கும் தன்மையில் தாசில்தார் குடும்பம் வந்து விட்டமையாலும், தெய்வசிகாமணி வந்து சேர்ந்த பிற்பாடு தான் இப்படிப்பட்ட அதிர்ஷ்டஹீனம் நேர்ந்ததென்று அவர் மனோ சங்கற்பம் பண்ணிக் கொண்டபடியாலும், அவனை வீட்டை விட்டுத் துரத்த எண்ணிக் கடினமாய் நடத்திக் கொண்டு வந்தார். உலகத்தில் மனிதர்களெல்லாம் நல்லவர்களே என்று நினைக்கிற ஸ்வபாபமுடைய தெய்வசிகாமணி தன் பாட்டனார் தன்னைக் கோபிக்கிறதெல்லாம் தன்னுடைய நன்மையைக் குறித்ததாயிருக்கு மென்றே சஹித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் தன் பள்ளிக்கூடத்துச் சிநேகிதனான அச்சுதனைக் கண்டு பேச அரை மைல் தூரத்திலுள்ள வீரராகவபுரத்திற்குப் போய் விட்டு இரவு 9-மணிக்கு வீட்டுக்கு வந்தான். கதவு பூட்டப்பட்டிருந்தது. வாசலுக்கு சமீபமான சேளியில் தன் பாட்டனார் படுக்கை விரித்துக் குந்தியிருப்பதைக் கதவின் சாவித் துவாரத்தின் வழியாகப் பார்த்து பாட்டையா, பாட்டையா வென்று கூப்பிட்டுக்கொண்டு கதவை தட்டினான். ஒரு பதிலும் காணப்படவில்லை. மறுபடியும் பாட்டையா, பாட்டையா, என்றான். வேணுவனலிங்கம்பிள்ளை யெழுந்து, எலே உனக்குப் பாட்டையா யார்லே, உங்கம்மையைப் பெத்தவன், எந்தக் காட்டு மூதி, அம்மாளாம், ஐயாவாம், பாட்டையாவாம் எப்படியிருக்கு யோக்கியம். இங்கிலிசு படிச்சு உத்தியம் பண்ணி யிட்டாப் போதும், சாதியில்லை, ஒழுக்கமில்லை, ஆசாரமில்லை எல்லாம் ஒண்ணு தாம். சீமையிவில்லாத தாசில் வேலை, கண்ட கழுதைகளை யெல்லாம் கெட்டியழுதுக்கிட்டு, அந்த மடப்பயல் மகளையில்ல சொல்லனும். ஆம்பிளைக்கு யென்ன தெரியும். நாளை, நாலு எனவனுக்கு மின்னாலே போனால்லா தெரியும்… இரு, இண்ணைக்கு
ஒன்னைத் தொலைச்சிட்டு மறு அலுவல் பார்க்கேன் என்று தாறுமாறாப் பேசிக் கொண்டே வந்து, ஏலே வரமின்னே யென்னலே கதவை ஓடைக்கியே என்று கதவைத் திறந்தார்.
வேணுவனலிங்கம்பிள்ளை பேசிய வார்த்தைகளில் இரண்டொன்று செவிப்பட்டதும் தெய்வசிகாமணி முகத்தைச் சுளித்து நம்முடைய பேரிற் புத்திக்குறைவு நிரம்ப விருக்கிறது கதவு பூட்டு முன்னமே வந்திருந்தால் இப்படிப் பெரியோர்களெல்லாம் கோபிக்கும்படி யிராதல்லவா? இராக்காலங்களில் அங்குமிங்கும் போவது கெட்ட வழக்கந்தானே. அதைப் பற்றித்தான் பாட்டையா கோபிக்கிறார்கள். சாமி சந்நிதித் தென்பக்கத்துத் தெருவழியே போக வேண்டா மென்று அச்சுதனும் சொன்னானே, கெட்டவர்கள் அத்தெருவி லிருக்கிறதினாலே தான் அப்படிச் சொல்லியிருக்கிறான். அயோக்கியர்களுக் கேற்ற இறாட் காலங்களில் வெளியே போகக்கூடா தென்று வாலிபனான நம்மைப் பாட்டையா கண்டிக்க வேண்டியது அவசியமே, அவர்கள் மனம் நோகாமல் நல்வாக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும், பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால் எப் பொருளும் பேதிக்கு மென்று பெரியோருஞ் சொல்லியிருக்கின்றார்களே என்று வாசற்படியிற் காலை வைத்து உள்ளே வரலானான். வந்தும் வராமலும் இருக்கும் போதே வேணுவனலிங்கம்பிள்ளை கதவைத் திடீரென்று மூடித் தெய்வசிகாமணியை நிலைக்காலோடு சேர்த்துக் கதவினால் நெருக்கினான். கதவுக்கும் நிலைக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்ட சிறுவன் பாட்டையா, பாட்டையா, நான் நான் பொறுங்கள், பொறுங்கள் என்று கத்தினான். நானாவது, நீயாவது ஒன்றுக்கும் மறுமொழியில்லை கதவு முன்னிலும் பலமாய ழுந்துகிறது. தெய்வசிகாமணிக்குக் கண் விழிபிதுங்குகிறது மூச்சு முட்டுகிறது என்ன செய்வான் பாபம், பொறுமையே பூஷணமாகக் கொண்ட தெய்வசிகாமணிக்குக் கோபம் பிறந்தது. “குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங்காத்தலரிது” என்றது உத்தர வேதம். தன் முழுப்பலத்தோடுங் கதவைக்காலால் ஒரு உந்து உந்தினான். அந்த விசையில் எதிர்ப்பக்கத்து நிலையோடு சேர்ந்த சுவரில் தடாலென்று மோதப்பட்டுப் பிரக்ஞை தவறிப் பொத்தென்று பூமியில் விழுந்தான் கிழவன்.
மணிமங்கலத்திலிருந்து வந்த நாள் முதல் தன்னை அம்முது மகன் அலக்ஷியமாக நடத்தி வந்ததினாலும், இப்போது பஹிரங்கமாக வாய்க்கு வராத கடுஞ் சொற்களாற் சுட்டதனாலும் கதவிடுக்கில் வைத்துக் கொல்ல வகை தேடினதினாலும், கிழவனைத் திரும்பியும் பாராமல் திடு திடுவென்று வீட்டிற்குள்ளே போனான். அப்போது தான் தூங்கி யெழுந்த காந்திமதியம்மாள் மகனைக் கண்டவுடன் அட ஐயா, கட்டிக்கரும்பே என் கனுவில்லாச் செங்கரும்பே இந்நேர மட்டும் எங்கே போயிருந்தாயடா என் கண்மணி. மணி பத்தாயிட்டுதே சாப்பிட வாடா ஐயா, என்றுபசரித்துக் கிட்ட அழைத்து முத்தமிட்டு உன்னையும் என்னையும் ஒக்கப் பரதவிக்க விட்டு விட்டுப்போய் விடுவார்கள் போலிருக்கிறதடா என் செல்வமே, நீ நாலு நாளாக ஐயாவை நன்றாகப் பார்க்கவில்லையே, ஒரு நாளைக் கொரு நாள் அசதியும் மயக்கமும் அதிகமாகுதே நான் என்னசெய்வேன், ஆற்றுவாருமில்லை, தேற்றுவாருமில்லையடா என் தங்கமே, என்று கதறினாள். தெய்வசிகாமணிக்கு மணங் குழம்பிவிட்டது. கிழவன் செய்த கொடுமையாகிய தீ ஒரு பக்கம் பிடித்தெரிய தன் தாய் படுந்துக்கமாகிய சுடு தீ ஒரு பக்கம் வாட்டப் பசியை மறந்தவனாகித் தன் பிதா படுத்திருக்கும் அறைக்குட் புகுந்தான். படுக்கையில் பொலிவிழந்த முகத்தினராய் ஜீவதாது குறைந்து கைகாலசைக்கச் சக்தியற்றவராய்ப் படுத்திருந்த நெல்லையப்பபிள்ளை சற்று நேரத்திற்கு முன் தலைவாசற் கதவண்டை நடந்த குரூரச் செய்கையைச் கீழ்புறத்து ஜன்னல் வழியாக் கண்டு செருப்பில் விழுந்த புழுப் போற்றுடித்து அக்கொடுஞ் செயலைத் தடுக்க வகையற்ற நிலைமையி லிருப்பதற்காக வருந்தினார். என் அருமைப் பெருஞ் செல்வத்தைக் கல்விக் களஞ்சியத்தை, வளர்த்த நாளெல்லாம் வளர்த்து விட்டு இக் கண்னெஞ்சு படைத்த கிழப்பிணத்தின் கையிலொப்பிக்கவா இங்கு கூட்டிவந்தேன். கவிராயரோடு கூட்டியனுப்பியிருந்தால் இத்தனை கண்கலக்கப்பட வேண்டியிராதே, அந்தோ! அந்தோ! என் கண்ணுள்ள போதே இக்கதியானால், நான் மண்டையைப் போட்டு விட்டால் இரக்கமில்லாப் பாவியர் எப்பாடு படுத்துவரோ எண்ணிளஞ் சிங்கத்தை. முருங்கைமரம் போல் பெருத்த என்னுடலி லுயிரிருந்தும், என் கண்மணிக்கு வந்த இடரை நீக்கப் பலனற்றவனாய் விட்டேனே. ஆ! விதியே, விதியே இப்பாதகச் செய்கையில் காந்தி மதியுங் கலந்திருப்பாளோ. ஐயோ அப்படியானால் நான் இறந்தாலும், மறுமையிலுங் கதியில்லையே, “மனைவி குறைகண்டிருந்துந் துறவார்” எய்தும் நரகமன்றோ சித்திக்கும் சீ நாம் நினைத்தது தப்பு. இவ்வளவு பிசகு செய்ய என்னுயிர்க்காதலி ஒப்பியிருக்க மாட்டாள். தெய்வமே! தெய்வமே! செந்நாயினுங் கடைப்பட்ட வேணுக் கிழவன் முகத்தில் விழித்துக் கொண்டு இன்னமும் இருக்கும்படி என்னை விட்டுவிடாதே. ஜீவகோடிகளின் வினையளவறிந் தூட்டுளிக்கும் வித்தக உயிர்களை அநாதியே பந்தித்திருக்கும் ஆணவ மலத்தைப் பெத்த காலத்தைப் போலவே முத்தியிலும் இருக்க வைத்தும் அதன் சேட்டையறச் செய்விக்கும் செல்வ நின்றிருவடியிற் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். இனித்தாழேன், சகியேன். உன் அடைக்கலம் என்று பிரலாபித்து நாவறண்டு சற்று விட்டு விட்டு நெஞ்சு படபடத்தடிக்க இரு கடைக்கண்ணிலும் ஜலம் வடிய மூச்சடங்கினார். சரிக்க முடியாத் துக்கத்தோடு வீட்டிற்குட் புகுந்த தெய்வசிகாமணி தன் பிதாவின் கட்டிலண்டை போய்ப் பார்த்துப் பிரமித்து ஒன்றுந் தோன்றாமல் கட்டிற்சட்டத்திலுட் சார்ந்து பிதாவின் கையை யெடுத்து மடிமீது வைத்துக் கொண்டு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். வலதுகைச் சுட்டு விரலால் நாக்கைத் தடவினான், அம்மா சுக்கு வெந்நீர் கொண்டு வா, மயிலிறகு விசிறியை யெடு, குளிர்ந்த காற்று வருகிறது. கதவையும் ஜன்னலையும் மூடு, கம்பளியைக் கொண்டு வந்து உடம்பைப் போர்த்து என்று, கை தேர்ந்த டாக்டர் மாதிரி பேசினான். சாந்திமதியம்மாள் கஷாயுத்தைத் தயாரித்துக் கொண்டு சாமான்களுடன் வந்தாள். இச்சமயத்தில் நெல்லையப்பபிள்ளை கொஞ்சம் ஸ்மரணை வந்து பெருமூச்சு விட்டுப் புரண்டார். நாலைந்து தினங்களாகச் சற்றேறக் குறைய இம் மாதிரியிருந்து வருகிறபடியால் மனம் தடுமாறாமல் சாயத்தைத் தன் மகன் வசம் தந்தாள். அதை வாங்கி விரலிட்டு இளஞ் சூறிந்து பிதாவைப் பக்குவமாகத் தூக்கி மார்பிற் சாய்த்துக் கொண்டு வெந்நீரைக் குடிக்கக் கொடுத்தான். கஷாஞ்சாப்பிட்டுச் சிறிது களைதீர்ந்து கண்ணைச் சற்றே திறந்து தெய்வசிகாமணியைக் கவனித்துப் பார்த்துக் கையால் முதுகைத் தடவிக் கண்ணீருதித்தார். முன்றானையால் அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டே முத்துப் போல கண்ணீரைப் பல பலவென்று வடித்தாள் காந்திமதி. நெல்லைபப்பபிள்ளை, நாம் எப்படியானாலும் ஆகிறோம். நமது மனைவி கதி என்னவானாலும் ஆகட்டும் உலகமே இன்னதென அறியாத ஒரு உத்தமகுலச் சிறுவனை நாம் நிர்க்கதியாகத் திரியவிட்டுப் போவோமானால் நமக்கு எழுமையும் நற்கதி கிட்டாது. இன்று இவனால் உதையுண்ட கிழவன் அடைப் பாம்புபோற் சினங்கொண்டிருப்பான் நாளைக்கே சில சண்டாளர்களை யேவிக் கொன்றாலும் கொன்று விடுவான். “தான் கெட்டது மில்லாமற் சந்திர புஷ்கரணியையுங் கெடுத்தான்” என்பது போல நாம் பிள்ளையற்ற பெருமலடனாப் போனது மல்லாமல் சோமசுந்தரம்பிள்ளையையும் கெடுத்து விடக் கூடாது. இவன் வரலாற்றைச் சிறிது துலக்கிவிட்டால் இவனென்ன ஒன்றுந் தெரியாத பிள்ளையா, பெற்றோரிடமாவது போய்ச் சேர்வான். பேத மற வூட்டும் பிரான் இந்தச் சரீரத்தை இன்னங் கொஞ்சக் காலத்திற்கு இந்த உலகில் சஞ்சரிக்கப் பண்ணுவராயின் நம், தெய்வசிகாமணியை நரம் நினைத்த வண்ணம் நல்ல நிலைமையில் வைத்துப்பார்த்துப் பரகதியடைவோம், என்றெண்ணினவராய்த் தன் காதலியின் முகத்தைப் பார்த்தார். அக்குறிப்பை உடனே அவர் பார்வையினாற் றெறிந்து கொண்ட அவ்வம்மணி, சரியென்றொப்புக் கொண்டதற் கடையாளமான சைகை கண்ணாற செய்தாள். இந்த நயன் பாஷைகளொன்றும் தெய்வசிகாமணிக்குத் தெரியாது. நெல்லையப்பபிள்ளை தன் தலையை மெல்லத் தூக்கித் தலையணையின் கீழிருந்து இரண்டு (கவர்) உறைக் கடிதங்களை யெடுத்து அவன் கையிற் கொடுத்து வெளியே போகும்படி சைகை செய்தார். கடிதங்களைப் பெற்ற சிறுவன் முகப்பு வாசலில் வைத்திருக்கிற தீப வெளிச்சத்திற் போய் மேல் விலாசத்தைப் பார்த்தான் ஒன்றில் “தெய்வசிகாமணி ரகஸ்யம்” என்றும் மற்றொன்றில் “பூர்வசாஸனங்கள்” என்றும் எழுதப்பட்டிருந்தன. இதைத் தெரிந்து கொண்டவுடனே தெய்வசிகாமணி இரகஸ்யம் என்றெழுதியிருப்பது தன்னுடையவும் கல்யாணசுந்தரத்தினுடையவும் ஆஸ்தி வாழ்க்கை முதலியவைகளைக் குறித்திருக்கக் கூடுமென்றும், மற்றது கல்யாணசுந்தரத்தின் பூர்வீக சொத்துக்களைக் குறித்த சாஸனங்களா யிருக்கலாமெனவும் எண்ணினான். அவைகளை அவ்விடத்திலிருந்து பிரித்துப் படித்துப் பார்க்க அவனுக்கு உசிதமாத் தோன்றவில்லை. ஏனெனிற் கிழப்புலி வந்து பாயினும் பாயுமே, எனத் திகைத்து நிற்கிற வேளையில் ஒரு குகிரை வண்டிக்காரன் வண்டியைச் சற்று வேகமா யோட்டிக் கொண்டு தெருவோரம் போனான். அவனைத் தெய்வசிகாமணி கூவி லோக்கல் பண்டு சத்திரத்திற்கு வண்டி விடுகிறாயா? வென்றான், நாலணா வென்றான் சரியென்று வண்டியிலேறிப் போய்ச் சத்திரம் சேர்ந்தான்.
– தொடரும்…
– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நேர்நிரை
நாஞ்சில்நாடன்
November 1, 2026
கோடுகள் இணைந்தன
இரா.துரைமாணிக்கம்
November 1, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 1, 2026