துன்பத்தில் துணிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 66 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உல்லியம் கேரி இந்தியாவிற்கு இறைத்தொண்டாற்ற வந்து பெரும்பாடனுபவித்தார், பெரும் வெற்றியும் கண்டார் இங்கிலாந்திலுள்ள இறைமக்கள் அவருக்கு உதவியாகக் கைதேர்ந்த அச்சுத் தொழிலாளி ஒருவரை உடன் அனுப்பி வைத்தனர்.

கேரி அச்சுக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார். திரு மறையை வடஇந்திய மொழிகளில் அச்சடித்து மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வந்தார்.

வங்காளி மொழியைக் கற்று தமக்குப் பின்வரும் மிஷனரிகளுக்குச் சாதகமாக அகராதி ஒன்று தயாரித்தார்.

ஒருநாள் கேரி வெளியூருக்குப் போயிருந்தார். அவ்வேளை, அவர் குடியிருந்த வீடு, அச்சுக் கருவி அச்சிட்ட பைபிள்கள், அகராதி அனைத்தும் தீக்கு இரையாயின.

பல ஆண்டுகளாகத் தயாரித்த கைப்பிரதிப் புதையல்கள் சாம்பலாயின. கேரி வந்தார். இரவு பகலாகத் தயாரித்த இறை இலக்கியங்கள் நெருப்புக்கு இரையானதைக் கண்டார். கவலையைக் கடவுள் பொறுப்பில் போட்டு முழங்காலூன்றித் துதித்தார்.

“ஆண்டவரே! திரும்பவும் எழுதுவதற்கு எனக்கும் பெலன் இருக்கிறதற்காக உம்மைத் துதிக்கிறேன்”.

மீண்டும் வேலையைத் துரிதமாக ஆரம்பித்தார் முன்பைவிட மேன்மையாகச் செய்து முடித்தார்.

துன்பத்தில் துணிவு அவருக்குப் பொரும் வெற்றியைத் தேடித்தந்தது.

“என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில் உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது”. (சங்.94:19)

“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்”. [யாக்கோபு 1:2]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *