தீயவை தீய பயத்தலால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 117 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
– குறள் கதைப் பாடல்.

பண்டிதர் ஜவஹர் லாலின்
பள்ளிப் பருவம் தன்னிலே
நன்கு விடியும் காலையில்
நடந்த தந்த சம்பவம்!
அன்பு மிக்க தந்தையார்
அருமை மோதி லாலவர்
தங்கும் தனிமை அறைக்குள்ளே

மெல்லச் சென்றார் நேருவும்
ஊள்ள மேஜை தன்னிலே
நல்ல இரண்டு பேனாக்கள்
நேரு கண்ணைப் பறித்தன!

சிறுவர் நேரு தனக்குள்ளே
சிந்தனையும் செய்தனர்
இரண்டு பேனா தந்தைக்கு
எதற்கு என்று எண்ணியே

ஒன்றை எடுத்து அவருமே
ஓடிவிட்டார் வெளியிலே!
தந்தை வந்து பார்க்கையில்
தனது பேனா இல்லையாம்!

அன்பு கொண்டு மகனையும்
அழைத்துக் கேட்டார் தந்தையார்
அன்னல் நேரு உண்மையை
அவரி டத்துச் சொன்னதும்

உண்மை சொன்னாய் வாழ்த்துக்கள்
ஒன்றை நீயும் உணர்ந்துகொள்!
திருட்டு தீய செய்கையாம்…
தீயவை தீய பயத்தலால்
தீயவை அஞ்சு எனச்சொல்லி

வேறு நல்ல பேனாவை
நேரு மகிழத் தந்தாராம்!
யாரும் உலகில் திருட்டினை
என்றும் விலக்கல் நல்லதாம்!

அன்று நமது வள்ளுவர்
அன்பு கொண்டு சொன்னதை
நன்று என்று ஏற்பது
நாளும் நமக்கு நல்லதே!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *