தீமையின் வேர்!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 90
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆபத்தான வேளையில் நம் ஆடையை அகற்றி விடலாம. ஆனால் நம் உடலோடு ஒட்டிக்கொண்டிருக் கும் தோலை நீக்கமுடியாது. ஆடிக்கொண்டிருக்கும் பல்லை எளிதில் பிடுங்கிவிடலாம். ஆனால் ஊனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லை நோவின்றிப் பிடுங்க முடியாது.
அவ்வாறே பணத்தில் தன் மனதைச் செலுத்தாத வனிடமிருந்து பண ஆசையை நீக்கிவிடலாம். பணத் திலே லயித்துக்கிடப்பவனிடமிருந்து பண ஆசையை நீக்குவது மகா கடினம், இரண சிகிச்சை செய்தா லொழிய பண ஆசை என்ற நோய் நீங்காது.
மேய்ப்பன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக் கிறான். ஓநாயைக் கண்ட ஆடுகளெல்லாம் ஓடிப்போய விட்டன. ஆனால் ஒரு ஆடு மட்டும் வேலியில் சிக்கி ஓநாய்க்குப் பலியானது. ஏன்? அந்த ஆட்டிற்கு மயிர் அதிகம். ஆகவே, வேலியில் சிக்கி மாண்டது. பணத்தை வைத்துக் காத்துக்கொண்டிருப்பவர்களின் முடிவும் இதுவே.
பணம் வேண்டும். ஆனால் புளியம்பழம் அதன் தோட்டிலிருந்து விலகி இருப்பது போல, பண ஆசை யிலிருந்து விலகி இருக்கவும் தெரிய வேண்டும்.
தங்கக் கிரீடம் ஒருபோதும் தலைவலியை நீக்காது. பஞ்சணை மெத்தை ஒருபோதும் பிணியைப் போக்காது
”பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்”. [பிரசங்கி 10:19]
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது”. [1 தீமோத்தேயு 6:10]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
