திருட்டுச் சிரிப்பு
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 90
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிரிப்பு பிணிதீர்க்கும் சிறந்த மருந்து. உடலை வளர்க் கும் ஊட்டச்சத்து. நண்பர்களைத் தேடித்தரும் டானிக். ஆயுளைக் கூட்டித்தரும் காயகல்பம். மனிதன் மட்டுமே சிரிப்பான். மிருகம் சிரிக்காது.
சிரிப்பின் பெருமைபற்றி இப்படிப் பலபடக் கூறுவர். ஆனால் சிரிப்பு திருடனை விரட்டுமா? அமெரிக்காவில் ஒரு செயல் நடந்துள்ளது.
வின்ட்சர் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் ஒரு திருடன் நுழைந்துவிட்டான். அது 1988 அக்டோபர் மாதம் முதல் வாரம். உள்ளேயிருந்த கணக்கரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தார். அதில் சூப்பர் மார்க்கட்டைக் கொள்ளை யடிப்பதாக எழுதியிருந்தான்.
தனியாக இருந்த கணக்கருக்கு ஏது செய்வதென்று தெரியவில்லை.
பயந்து நடுங்குவதற்குப் பதிலாகச் சிரித்தார். அட்டகாச மாகச் சிரித்தார். பலர் இருப்பதுபோல பல குரல்களில் விழுந்து விழுந்து சிரித்தார்.
திருடன் பயந்தான், நடுங்கினான். மிகத் துணிச்சலுள்ள பலர் இருப்பதாக எண்ணினான்.
மெள்ள நழுவி ஓடலானான். தன் திருட்டுத் தொழிலுக்கு ஊனம் ஏற்பட்டுவிடக்கூடாதென்று கருதி ஓடும்போதே ஆங்கிருந்த சுருட்டுக்கட்டு ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.
பின்பு காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரி சொன்னார்:
“சிரித்து திருடனை விரட்டியது சரிதான். தீமையை நன்மையினால் வென்ற உனக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் எந்நாளும், எல்லோரும் இப்படி வெற்றிபெற முடியாது. திருடர்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.”
“தீமையை நன்மையினாலே வெல்லு.” – [ரோமர் 12:21]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
