தர்மசங்கடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 178 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உன் வலது கை செய்கிறதை இடது கை அறியாதிருக்கக் என்ற விவிலிய வசனத்தின் பேரில் ஓரங்க நாடகம் நடத்தவேண்டும். இரு நிமிடங்களுக்கு மிகுதல் கூடாது என்ற நிபந்தனையின்படி இரு கல்லூரி மாணவர்கள் ஒரு நாடகம் நடத்தினர்.

நகரப் பேருந்தில் ஏறுவதற்கு ஒரு கூட்டம் முண்டியடிக்கிறது. ஓர் இளைஞனுக்குப் பின்னால் பிறிதொரு இளைஞன் இடது கையை உயர்த்தி வலது கையால் பஸ் கம்பியைப் பிடித்தவாறு முனைந்து ஏற முயற்சிப்பதாகப் பாவனை செய்கிறான். பின்பு தன் வலது கையினால் முன்னால் நின்றிருந்தவனின் வலது பையினுள்ளிருந்த மணிபர்ஸை எடுத்து யாருக்கும் தெரியாமல் தன் இடது பைக்குள் வைத்துவிடுகிறான். இன்னமும் அவன் இடது கை உயர்ந்தே இருக்கிறது.

முன்னவன் மணிபச்சைப் பறிகொடுத்தது தெரியாது பஸ் ஏறிப் போய்விடுகிறான். பின்னவன் அதாவது திருடன் கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறான்:

“உன் வலது கை செய்கிறதை இடது கை அறியாதிருக்கக் கடவது என்று மத்தேயு ஆறு-மூன்று கூறுகிறது” என்று சொல்லிச் செல்கிறான்.

நாடகம் இரு நிமிடங்களில் முடிகிறது.

இப்படித்தான் அநேகர் வேத வசனங்களைப் பிரித்து, உடைத்து, சிதைத்துத் தாறுமாறாக்கிப் பொருள் கூறுகிறார்கள்.

தர்மத்தைக் குறித்துச் சொல்லிய அந்த வேத வசனம் எவ்வளவாகத் தர்மசங்கடப்படுகிறது.

“நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.” – [மாற்கு 12:24]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *