தடிக் கம்பு




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு காரியக்காரன் இருந்தர். அவ், அந்த ஊக்குக் காரியக்காரன். நல்லது நடந்தா, அந்த வீட்ல போயி இருந்திட்டு வருவானாம்.
அந்த ஊர்ல, சாவு நடந்தா, அந்த வீட்டுக்குப் போயிட்டு, கையில இருக்ற தடிக்கம்ப வச்சிட்டு வந்திருவானாம். செத்த வீ ட்டுக்கு மட்டும் போறதில்ல. மத்தெல்லா வீட்டுக்கும் போயி, உண்டு உறங்கி வருவானாம்.
ஒருநா, அந்தக் காரியக்காரன் செத்துப் போயிட்டர். சாகவும், அந்த ஊர்ல இருக்றவங்கல்லா, ஆளுக்கொரு, தடிக்கம்ப எடுத்திட்டுப் போயி, காரியக்கார் வீட்ல வச்சிட்டு வந்திட்டாங்க. யாருமே எளவு வீட்ல இல்ல. வெறுந் தடிக்கம்பா இருக்கு. அந்த வீட்டுக்காரப் பொம்பள பாத்தா, பெறகு போயி, கெஞ்சிக் கெதறி அழுது பெறக்கி, கால்ல கையில விழுந்து கூட்டிட்டு வந்தாளாம். பெறகு எல்லாருமாச் சேந்து, தூக்கிட்டுப் போயி, நல்லடக்கம் செஞ்சாங்களாம். கெட்டவன, இப்படித்தர் திருத்தணும். சாவுக்குப் பெறகு, ஒருவன மக்கள் மறக்காம, இருக்கணும்ண்டா, நன்ம செய்தவனாகவோ அல்லது தீமை செய்தவனாகவோ இருக்கவேண்டும். நன்ம செய்தவனையும், மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். தீம செய்தவனயும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.