டீம் லீடர்





மூன்று சுற்றுக்கள் நேர்காணல் முடிந்து இறுதி HR ரவுன்ட் நேர்காணலுக்கான தேர்வுக்கு இரண்டு நபர் காத்திருந்தனர். ஒருவர் கார்த்திக். மற்றொருவர் அஷோக். இதில் அஷோக்கிற்கு மொபைலில் ஒரு கால் வந்தது.

சார்.. இங்க தான் இருக்கேன். இன்னொருத்தரும் வந்திருக்கார்.
அது சும்மா பார்மாலிட்டி. ஃபில்டர் பண்ணற procedure. அது. நீங்க தைரியமா பேசுங்க. சொல்லி வெச்சிருக்கேன். HR மேனேஜர் circastic ஆ கேட்பாரு. கேஷுலா பதில் சொல்லுங்க. மூன்று ரவுன்டுல நீங்க எடுத்த ஸ்கோர் தான் அதிகம். இன்னொருத்தர் பேர் கார்த்திக்கா?
ஆமாம் சார்.
No problem. அவருக்கு ஸ்கோப் இல்ல. All the best.
தேங்க்யூ சார்..
இந்த conversation ஐ கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு தெளிவாகப் புரிந்தது, அஷோக்கிற்கு ஏதோ சிபாரிசு உள்ளே இருக்கிறது என்று.
அஷோக் அசாத்திய தைரியத்துடனும், சற்றே ஏளனமாகவும் கார்த்திக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
பஸ்ஸர் அழுத்தும் சத்தம் கேட்டது. இருவரும் தயார் நிலையில் இருக்க…, அஷோக் யாரு சார்? நீங்க உள்ள போங்க.
கார்த்திக்கை இன்னொரு முறை அதே ஏளனத்துடன் பார்த்துவிட்டு, டையை சரி செய்து கொண்டான்.
எக்ஸ்கியூஸ் மீ என்று கூறிக்கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
Welcome Mr. அஷோக். டேக் யுவர் சீட்.
எதிரில் மூன்று பேர் அடங்கிய HR டீம் இவரது ப்ரொபைலை ஆராயந்து கொண்டே நுனி நாக்கு ஆங்கிலத்தில் தங்களுக்குள் பாசிடிவாக பேசிக் கொண்டனர்.
அஷோக்கிற்கு அவர்களின் செயல் மிகுந்த தெம்பையும் தைரியத்தையும் வரவழைத்தது.
Fantastic Mr. அஷோக். மூன்று ரவுன்ட் பிரம்மாதமா பண்ணிருக்கீங்க. எங்கள் நிறுவனத்துக்கும் உங்கள் பணி நியமனத்திற்கும் தேவையான கல்வி அறிவும், அனுபவ அறிவும் உங்க கிட்ட இருக்கு. You are the perfect choice. கங்ராஜுலேஷன்ஸ் அஷோக் என்று அனைவரும் கை குலுக்கினர்.
தேங்யூ சார். தேங்க் யூ வெரி மச். நிமிர்ந்து கம்பீரமாய் உட்க்கார்ந்தான்.
By the bye.. ஆரம்பிக்கலாமா அஷோக். Few simple questions என்று ஆரம்பித்த நேர்காணல் சில நிமிடங்களில் முடிந்தது.
ஓக்கே Mr. அஷோக். வெளியில வெயிட் பண்ணுங்க. Mr. கார்த்க்க உள்ள வரச் சொல்லுங்க. Best of luck என்று மீண்டும் கை குலுக்கிக் கொண்டனர் அனைவரும்.
தேங்க்யூ சார்..
ஹலோ.. உன்ன உள்ள கூப்பிடறாங்க போப்பா என்று திமிருடன் கூறினான் அஷோக்.
மிகவும் தளர்ந்த நடையுடன உள்ளே சென்றான் கார்த்திக். ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தான். அவன் முகத்தில் ஒரு தெம்பும் புன்முறுவலும் இருப்பதை பார்த்து சற்றே அதிர்ந்தவனாய்.. என்னப்பா ஆச்சி? என்று கேட்க.. சார் உங்களை திரும்பவும் உள்ளே கூப்பிடறாங்க என்றான் கார்த்திக்.
Mr.அஷோக். Sorry to inform you sir. உங்கள அப்பாயின்ட் பண்ண முடியாது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். பொதுவாக ரிஜெக்ட் பண்ற கேன்டிடேட்ஸுக்கு காரணம் சொல்ல மாட்டோம். உங்களுக்கு மட்டும் சொல்கிறோம்…
நீங்க சொன்னீங்க, ஜாயின்ட் ஃபேமிலி தான் என்று. உங்க குடும்பத்தில மொத்தம் எத்தனை நபர்னு கேட்டதுக்கு, 5 பேர்னு சொன்னீங்க இல்லையா?
Yes sir.
உங்க கூட எத்தனை பேர் இருக்காங்கன்னு கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க தெரியுமா? உங்க மனைவி மட்டும் தான் உங்க கூட இருக்காங்க. அதையே ஜாயின்ட் ஃபேமிலின்னு கிண்டலா சொன்னீங்க. Right?
Yes sir.
ஒரு ஐந்து நபர் உள்ள சிறிய குடும்பத்திலேயே உங்களால அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழ முடியில. உங்களால எப்படி உங்க கீழ உள்ள டீமை நிர்வகிக்க முடியும்? உங்கள எப்படி team leader ஆ தேர்வு செய்ய முடியும்.. புரியுதா.. கார்த்திக் குடும்பத்துல 13 நபர். இப்பவரைக்கும் கூட்டுக்குடும்பமா வாழ்ந்துக்கிட்டிருக்காரு சூழ்நிலை எப்படி இருந்தாலும். Of course அவரு மூன்று ரவுன்ட் performance உங்களை காட்டிலும் நிறைவாக இல்லாவிட்டாலும்.. அதை சரி செஞ்சிடுவோம். கூட்டுக்குடும்பம் என்பதற்கான உங்களோட definition. அ மாத்திகிடுங்க Mr. அஷோக்.
Good bye..
குனிந்த தலையுடன் வெளியேறினான் அஷோக்.