கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 8,890 
 
 

சீடர் ஒருவர் தனது குருவுக்குத் தேநீர் எடுத்துச் சென்ற போது கோப்பையைத் தவறவிட்டுவிட்டார். அது உடைந்து போனது. சீடர் மனம் கலங்கினார்.

கோப்பைத் துகள்களை அப்புறப்படுத்தினார். கோப்பை உடைந்த விஷயத்தை எப்படி குருவிடம் நயமாகச் சொல்வது என்பதை மனதுக்குள் ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டார்.

கலக்கமான முகத்துடன் குருவைச் சந்தித்தார்.

“”என்ன விஷயம்?” என்று கேட்டார் குரு.

“”மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?” என்று ஒரு பெரிய கேள்வியைப் போட்டார் சீடர்.

“”அது இயற்கை! பிறந்த உயிர்கள் எல்லாம் இறந்துதான் ஆகவேண்டும். மரணம் தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் அழிவு உண்டு. செத்துப் போவது இயற்கை” என்றார் குரு.

சீடர் சொன்னார், “”குருவே, உங்கள் தேநீர்க் கோப்பை செத்துப் போய்விட்டது!”

சொல்லும் விதமாகச் சொன்னால் சோகமும் இழப்பும்கூட பொருட்படுத்தப்படுவதில்லை!

– தங்க.சங்கரபாண்டியன், சென்னை. (ஜூன் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *