செயல் வீரர்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 170
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிந்தனையா? செயலா? எது முக்கியம்? எது மக்களால் தக்கவாறு போற்றப்படுகிறது? செயல்தான் என்று யாவருமே சொல்லிவிடுவோம்.
அதற்கு ஒரு எடுப்பான எடுத்துக்காட்டைக் கூற விழைகிறேன்.
அரிஸ்டாட்டில் மிகச் சிறந்த சிந்தனைச் சிற்பி. உலகைப் பற்றிய தத்துவ ஞானக் கருத்துக்களைப் பக்கம் பக்கமாக எழுதினார். உலகியல் பற்றிய புரட்சிகரமான சிந்தனைக் கருத்துக்களை மொழிந்தார்.
அவரது மாணாக்கர்களில் ஒருவரான அலெக்சாண்டர் ஒரு நூல்கூட எழுதவில்லை. ஆயினும் உலகை வென்றார். மகா அலெக்சாண்டர் என்ற மாபெரும் பெயர் பெற்றார்.
சரித்திரப் புகழ்பெற்ற அலெக்சாண்டரை அனைத்து மக்களும் நன்கறிவர்.
அரிஸ்டாட்டிலை எத்தனைபேர் அறிவர்? அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி வெறும் தத்துவக் கூறுபாடுகளை விட செயல்திறனையே மக்கள் விரும்புகின்றனர்.
செயல் வீரர்களே குறுக்கு வழியில் சீக்கிரம் பெயர் பெறுகின்றனர்.
“யோவான் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்.” – [யோவான் 5:35]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
