கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,510 
 
 

டேய் செல்லம். இந்தப் பழத்தைக் கொண்டு போய் பாட்டிகிட்டே கொடுத்திட்டு வந்திடுப்பா’

வீட்டுக்குள் வரும்போதே மகனை விரட்டினார் பத்மநாபன்

நுழையறதுக்கு முன்னாடியே அம்மா ஞாபகம் வந்திடுச்சா? குழந்தையை இந்த விரட்டு விரட்டுறீங்க?

சிடு சிடுத்த கெஜலட்சுமியிடம் மற்றொரு பழ கவரை தந்த பத்மநான்,

‘இத பாரு கெஜா…பெத்த வயிறு குளிர்ச்சியா இருத்தாத்தான் நாம நல்லா இருக்க முடியும். அது மட்டமில்லாம குழந்தைங்க
வளரும்போது அப்பா அம்மாகிட்டே நிறைய விஷயம் கத்துக்குங்க….இப்ப நான் என் அம்மாவை எப்படி நடத்துகிறேனோ,
அப்படித்தான் நம்மையும் நடத்துவாங்க!

வர்ற பொண்டாட்டி என்ன குணத்தோட இருந்தாலும் அவன் நம்மை அக்கறையா பார்த்துப்பான். இப்ப நான் என் அம்மாவை
கவனிச்சிக்கிறது அவங்க மேல உள்ள பாசத்தால் மட்டுமில்ல, நம்ம பிற்காலத்து பாதுகாப்புக்காவும்தான்!”

பத்மபாபன் சொல்லி முடிக்க, கெஜலட்சுமி புரிதலோடு தலையாட்டினாளை.

– பெ.கணேஷ் (ஏப்ரல் 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *