சுடுகாடு போற வரைக்கும்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு ஏழக் குடும்பம். அந்தக் குடும்பத்ல, அண்ணனுந் – தங்கச்சியும் இருந்தாங்க. அப்ப, தங்கச்சி வயசுக்கு வந்திருச்சு. எப்டியாச்சுந் தங்கச்சியக் கட்டிக் குடுத்துறணும்ண்டு நெனக்கிறா. வயசுக்கு வந்த பிள்ளய,வீட்ல வச்சிருக்கக்கூடாதுண்டு நெனச்சுக்கிட்டிருக்கயில, அவன மாதிரி ஒரு ஏழ, பொண்ணு கேட்டு வரா. பின்ன… அவ் வீட்டுக்கு பெரிய – பெரிய பணக்காரங்களா வருவாங்க? தங்கச்சிய அந்த ஏழக்கி, கட்டிக் குடுத்திருறா.
ஒரு வருசமாச்சு. இப்ப மாதிரி அப்பயெல்லாம் யாரும் ஒதவி செய்ய மாட்டாங்க. இப்ப மாதிரி கடங்குடுக்குற பேங்கெல்லாம் அப்ப இல்ல. இப்ப மாதிரி பிள்ளைங்களுக்கு எம்சியாரு ஆட்சில சத்துணவு போடுறதெல்லாம் அப்ப இல்ல. அப்ப, தங்கச்சிக்கு அண்ணந்தான் ஒதவி செய்யணும். இது அந்தக் காலத்ல செய்யிறமொற.
தங்கச்சிக்குப் புள்ள பொறக்குது. பெறந்த பிள்ளய, இலுப்ப மரத்ல தொட்டி கட்டிப் போடுறது, அந்தக் காலத்ல வழக்கம். அப்டி
அப்டி இருக்கயில, அண்ணன், இலுப்ப மரம் வெட்டிட்டுப் போயி, தொட்டி கட்டி, தங்கச்சி புள்ளய அதுல போடணும். இவ் என்னா செய்யுறர். வருமையோட வருமையா, இதயும் செய்யணும். வருமைங்கறதுக்காக செய்மொறய விட்டுற முடியுமா? விட முடியாது! விட முடியாம,
காலைல, வெள்ளனா எந்திருச்சு, அருவாள எடுத்துக்கிட்டு மலைக்குப் போறீர். எதுக்கு? இலுப்ப மரம் வெட்டுறதுக்கு. இலுப்ப மரம் வெட்டிட்டு வாரா. வந்து, அதுல தொட்டி கெட்டி, தங்கச்சி புள்ளயப் போட்டு ஆட்டி விட்டுட்டு, சோறு திங்காம வெளியேறி ஊருக்கு வாரா. சோறு திங்காம ஏ…. போறாண்டு தெரியுமா? தங்கச்சி வீட்டுல வரும் (வறுமை) ஜாஸ்தி. நாம திங்கிற சோறு, பாவம் பிள்ளைக திண்டுகிரட்டும்ண்டு நெனச்சுக்கிட்டு வாரா. அப்ப, அண்ணன் ஆட்டி விட்ட தொட்டியப் புடுச்சு ஆட்டிக்கிட்டு, தங்கச்சி, தொட்டிப் பாட்டுப்பாடி அழுகுறா.
எப்டிப் பாடுறாண்டா
பச்ச இலுப்ப வெட்டி
பால் வடியத் தொட்டி கட்டி
வே பட்டு க்கு பபின்ப
தொட்டியில இட்ட மாமன்
சோறு தின்னாமப் போறானேண்டு
தொட்டியாட்டுறா. அப்ப, அண்ணன், தங்கச்சியத் திரும்பிப் பாத்திட்டு, தங்கச்சி தும்பத்த தீக்க (தீர்க்க) முடியாத தன்னோட நெலய எண்ணி, ரொம்ப அழுது பொலம்பிக்கிட்டே நடந்து, ஊருக்கு வந்தானாம். இப்ப, நாங் கசுட்டப் படுறபோது எங்ஙண்ணன் பாத்துக்கிட்டிருக்குமா? அது போலதர். அண்ணந் தங்கச்சி பாசங்கறது எண்ணைக்கும் போகுமா? மண்ட, சுடுகாடு போற வரைக்கும் பாசம் இருக்கும். சும்மாவா!
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.