சிறுமீன் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 5,863 
 
 

(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு அலகில் மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு. 

உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. எல்லாவற்றையும் விட நீங்கள் அழுக்கை சாப்பிட்டு வளரும் அற்ப உயிர்கள். உங்களை நான் கொன்றால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். என்னை எதிர்க்க உங்களால் இயலுமா. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை அதனால் தான் உங்களைக் கொல்கிறேன். என்று கேலி செய்தது

இப்படி தினம் கேலியும் அவமானமும் பட்டு சாவதை நினைத்து மீன்கள் மிகவும் வருத்தம் கொண்டன. 

ஒருநாள் அந்தக் கொக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்னஞ்சிறு மீன்குஞ்சு ஒன்று குளத்தில் இருந்து தாவி மண்ணில் விழுந்து துடித்துச் சாக முயன்றது. 

அதைக்கண்ட கொக்கு சிறுமீனே..உனக்குச் சாவதற்கு அவ்வளவு விருப்பமா. அல்லது என்னைக் கண்டு பயமா, நீ நன்றாக வளரும் வரை பிழைத்து இருக்கட்டும் என்று தானே விட்டுவைத்திருக்கிறேன், அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டது. 

ஸ்பூன் வெல்வெட் துணியில் புரண்ட படியே எரிச்சலுடன் சொன்னது 

“முள்கரண்டிகள் நிம்மதியற்றவை. அவை மூன்று நாக்குகள் கொண்டிருக்கின்றன. நடந்த தையும் நடப்பதையும் நடக்க போவதையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள கூடியவை.” 

அதை கேட்டு சற்றே எரிச்சலுற்ற முள்கரண்டி சொன்னது 

“ஸ்பூன்கள் வெட்கமற்று மனிதர்களின் நாக்கை முத்தமிடுகின்றன. தடவி கொடுக்கின்றன. முள்கரண்டிகள் ஒரு போதும் அப்படி இருப்பதேயில்லை.” 

கோபமுற்ற ஸ்பூன் சொன்னது 

முள் கரண்டிகள் ஒரு போதும் சூப்பின் சுவையை அறிய முடியாது. உப்பும் சக்கரையையும் ஒரு போதும் தீண்டமுடியாது. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை ஒரு போதும் உணரவே முடியாது. பாவம் அர்த்தமற்ற வாழ்க்கை.” 

இரண்டும் முகத்தை திருப்பிக் கொண்டன. 

வீட்டின் உரிமையாளன் உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தான். சூடான சூப்பிற்குள் ஸ்பூனை தூக்கிபோட்டான். முள்கரண்டியை ஆவி பறக்கும் இறைச்சியின் நடுவில் குத்தினான். இரண்டும் மௌனமாகின. பசி தீருமட்டும் சாப்பிட்டுவிட்டு எச்சில்பட்ட ஸ்பூனையும் முள்கரண்டி இரண்டும் ஒன்றாக தட்டில் போட்டு எழுந்து சென்றான். 

சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டும் ஒரே தண்ணீர் வாளிக்குள் போடப்பட்டன. மிகுந்த ஆவேசத்துடன் ஸ்பூனை கட்டி தழுவியபடியே முள்கரண்டி சொன்னது. 

“அன்பே இந்த நிமிசத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன்.” ஸ்பூனும் முள்கரண்டியும் மாறி மாறி முத்தமிட்டு கொண்டன.

– நகுலன் வீட்டில் யாருமில்லை, கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *