சாவக் கத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 209 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்ல, ஒரு நரியும் – மானும் பெரண்டா இருந்திச்சாம். எதச் செஞ்சாலும், ரெண்டும் சேந்துதர் செய்யுமாம். ரெண்டும் சேந்துதர் எங்கயும், போகும் வரும்.

ஒருநா, நரியும் மானும் சேந்து, ஒரு மலய நோக்கிப் போகுதுக. போற வழியில, ஒரு வெள்ளரிக்காத் தோட்டம் இருந்திச்சு. அந்தத் தோட்டத்ல, ஒருத்த, தொத்த மாடுகளக் கமலயில பூட்டி தண்ணி எரச்சுக்கிட்டிருக்கா. எரக்கிறது தண்ணி பாச்சுறது, ரெண்டயும் அவனே செஞ்சுகிட்டிருக்கர். ரெண்டு சாலு எரக்கிறது, போயி ரெண்டு பாத்திய வெட்டி விடுறதுமா இருக்கா. 

வழில போன மானும் நரியும், அவங்கிட்டப் போச்சு. போயி, அண்ணே!! நிய்யி, ரெண்டு வேலகளயுஞ் செஞ்சு கஸ்டப்படுற, தோட்டத்த எங்ககிட்டக் குடு, நாங்க, வெவசாயம் செஞ்சு, ஒனக்குப் பங்கு குடுக்றோம்ண்டு நரி சொல்லுச்சு. அவனும் சரிண்டு சொல்லிட்டு, வீட்டுக்குப் போயிட்டா. 

அண்ணக்கிருந்து மானு தண்ணி எரைக்க, நரி தண்ணி கெட்டுது. வெள்ளரிக்கா காய்க்க ஆரம்பிச்சிருச்சு. மானு, தண்ணி எரைக்கயில, எடயில விட்டுட்டு, சால இளுத்து வெளியவச்சுட்டு, பச்சப் புல்லு இருக்ற எடத்தப் பாத்து மேயப் போயிரும். ரெண்டு சாலு எரச்சுக்கிறது, போயி, ரெண்டு வாய் புல்ல மேஞ்சுகிறது. 

நரி, நாலு பாத்திகள ஒண்ணா வெட்டி விட்டுட்டு, அந்த நாலு பாத்திகளுந் தண்ணி பாயங்குள்ள, பக்கத்ல இருக்ற கொளத்ல போயி, நண்டு பிடிச்சு தின்னப் போயிறும். நாலு பாத்தி தண்ணி பாச்சுறதுக்குள்ள, வகுத்துக்கு, நண்டப் பெறக்கித் தின்னப் போயிறது. இப்டியே, நண்டத் திண்டு, கொளுத்துப் போன நரி, கொளத்துத் தண்ணிக்குள்ள பேண்டு விட்டுட்டு, வெள்ளரிக்காயில வந்து குண்டி தொடைக்கிறது. வெள்ளரிக்காயெல்லாம், வெறும் பிய்யா இருக்கு. கொளத்துத் தண்ணிக்குள்ள பிய்யி பேலுறது, வெள்ளரிக்காயில வந்து குண்டிய வச்சுத் தேச்சுத் தொடச்சுக்கிறதுமா இருக்கயில, ஒருநா, தோட்டக்காரன், தோட்டத்தப் பாக்கணும்ண்டு வந்தா, வரயில, மானு புல்லு மேயப் போயிருச்சு. நரி கொளத்துக்கு, நண்டு புடிக்கப் போயிருச்சு. இருக்ற வெள்ளரிக்காயி பூராம் வெறும் பிய்யா இருக்கு. இத என்னாண்டு பாக்கணும்ணட்டு, மரத்து மேல ஏறி ஒக்காந்துகிட்டா. கொளத்துக்குள்ள, இருந்து நரி வந்திச்சு, வந்ததுமே வெள்ளரிக்காயில நக்கிளிச்சு, பிய்யத் தொடைக்கிது. தொடைக்கவும் இந்த நரிக்கழுதக்கிப் பாடம் புகட்டணும்ண்டு, நெனச்சுக்கிட்டு, வீட்டுக்குப் போறா. 

போயி, நெறயா சாவக் கத்திகள, ஆசாரிகிட்டச் சொல்லி அடிச்சு வாங்கிக்கிட்டுத் தோட்டத்துக்கு வாரா. வந்து, வெள்ளரிக்காயில, ஊண்டி – ஊண்டி வச்சிட்டா. அப்ப, நரி கொளத்துக்குள்ள பேண்டு வச்சிட்டு, வெள்ளரிக்காயில குண்டி தொடைக்க வருது. வந்ததே சரிண்டு, ஒரு வெள்ளரிக்காயில, வச்சு நக்கிளிக்கவும், காயில, ஊண்டி வச்சிருந்த கத்தி, வி சுக்குண்டு அறுத்து விட்டிருச்சு. அறுக்கவும், நரி அலறிக்கிட்டு ஓடிருச்சு. குண்டில சலம்புடுச்சிருச்சு. சலம் புடுச்சு வீசுது. நரி, அடிக்கடி அதத் தொட்டு மோந்து பாத்துக்கிறது. இருக்கயில, புண்ணு ஆறிப்போச்சு. ஆறிப் போகவும், நரி மறுபடியும் வெள்ளரிக்காயில குண்டி தொடக்கிற பழக்கத்த செய்ய ஆரம்பிக்குது. 

இப்டி இருக்கயில, மானும் – நரியும் செய்யுற வெவசாயத்த விரும்பாத தோட்டக்காரன், சாட்டக் கம்பக் கொண்டு அடுச்சு வெரட்டி விட்டுட்டா. 

அடி வாங்கின மானும் – நரியும், ஒரு காட்டுப் பாதயில போயிக்கிட்டிருக்கு. போயிக்கிட்டிருக்கயில, ரெண்டுக்கும் அளவு கடந்த பசி. நரி, மான, திங்கிறதுக்கு பாக்குது. நேரடியா அடுச்சுத் திங்க முடியாது. ஏ…ண்டா, பழகுன தோசம் இருக்குது. 

திட்டத்த, நெனச்சுக்கிட்டே போகயில, ரெண்டுக்கும் அளவு கடந்த பசியா இருக்கதுனால ஒரு சின்னக் கல்ல எடுத்து, நரி நடுகண்டு மெண்டுச்சு. மெல்லவும், மானு, நண்பா! என்னத்தத் திங்கறண்டு கேட்டுச்சு. அதுக்கு நரி, நண்பரே! பசி பொறுக்க முடியல, எங்கண்ணுல, ஒண்ணப் புடிங்கித் திண்டேண்டு சொல்லுச்சு. சரிண்ட்டு, மானும், ஒரு கண்ணப் புடுங்கித் திண்டுபிருச்சு. 

கொஞ்சத் தூரபோனதும், நரி, எதயோ கொறுக்ண்டு மெண்டுச்சு. மெல்லவும், நரியாரே!! என்னா திங்கிறண்டு மானு கேட்டுச்சு. பசி பொறுக்க முடியல, மிச்சமிருந்த இன்னொரு கண்ணயும் புடுங்கித் திண்டேண்டு சொல்லுச்சு. சொல்லவும், நண்பன் செய்யுறத, நம்மளுஞ் செய்யணும்ண்டு, மிச்சமிருந்த ஒரு கண்ணயும் புடுங்கித் திண்டுபிருச்சு. கண்ணப் பிடுங்கித் திண்டேண்டு நரி பொய்யு சொல்ல, புடுங்கித் திண்டுபிருச்சு. 

தின்னவும், மானுக்கு இப்பக் கண்ணுத் தெரியல. கண் ணு தெரியலண்டு மானு நரிகிட்டச் சொல்லுச்சு. சொல்லவும், நரிக்கு ரெம்ப சந்தோசம் பொறுக்க முடியல. நரி, நண்பா பயப்படாம, எம் பின்னாலயே வாண்டு சொல்லுது. 

சொல்லவும், நரி பின்னாலயே, மானு போகுது. போகயில, மானக் கொண்டு திங்கணும்ண்டு நரி நெனக்கிது. 

நெனச்சுக்கட்டே, ஒரு கெணத்துக்கிட்டக் கூட்டிட்டுப் போகுது. தந்திரமா, மான கெணத்துக்குள்ள விழுக வச்சிருச்சு. எரங்க முடியாமச் சுத்தியும் முத்தியும் பாக்குது. 

அப்ப, அங்கிட்டு ஒருத்தி உழுதுகிட்டிருந்தர். நரி, அவங்கிட்டப் போயி, கெணத்துக்குள்ள மானு செத்து மெதக்குதுண்டு சொல்லுச்சு. அவ், ஒழவ நிறுத்திட்டு, ஓடியாந்து, மானத் தூக்கிட்டு மேல வந்தர். ரெண்டுபேருக்கும், சரி பங்குண்டு நரி சொல்லுச்சு. சரிண்டு, உரிச்சுக்கிட்டிருக்கயில, ஒரு சப்பயக் கவ்வி க்கிட்டு ஓடிப்போச்சு நரி. அவ, மான உரிச்சு உப்புக்கண்டம் போட்டுட்டா. 

மறுநா, உழவங்கிட்ட, நரி வந்து, ஒழவனே எனக்கு பசியா இருக்கு, உப்புக்கண்டம் குடுண்டு கேட்டுச்சு. ஒழவ உப்புக் கண்டம் தர முடியாதுண்டு சொல்லிட்டா. 

சொல்லவும், நரி வருத்தத்தோட, அண்ணே! எடது பக்க மாட்டக் கழத்திவிடு, அதுக்கு பதிலா என்னயக் கட்டி உழு, அதுக்குக் கூலியா உப்புக் கண்டம் குடுண்டு கேட்டுச்சு. சரிண்ட்டு, எடத்து மாட்டக் கழத்தி விட்டுட்டு, நரிய ஏருல பூட்டி உழுகுறா. நரியால இழுக்க முடியல. சாட்டய வச்சு, ரெண்டு போடு போட்டர். பல்லுல ரத்தம் வடியுது. உப்புக்கண்டம் ஆசயில, முக்கிக்கிட்டுப் போகுது நரி. ஏர இழுக்க மாட்டாம, இருக்கவும், சாவடி அடிச்சு, ஓடக்குள்ள இழுத்துப் போட்டுட்டர் வலி தாங்கமாட்டாம, மொனங்கிக்கிட்டுப் படுத்துக் கெடக்கு. இங்க இவ் உழுதுகிட்டிருக்கா. 

அப்ப, அங்கிட்டிருந்து ஒரு நரி வந்திச்சு. வந்து நரியண்ணே!! என்னாண்ணே? இங்க படுத்திருக்கண்டு குசலம் விசாரிக்குது. வாயில ரத்தம் வருதே, என்னா விசயம்ண்டு கேட்டுச்சு. 

அதுக்கு, அடிபட்ட நரி, அத ஏ… கேக்குற? நீ கேட்டால் அசந்து போயிருவண்டு சொல்லவும், அப்ப, சொல்லுண்டு கேக்குது, புதுசா வந்த நரி. 

அந்தா, உழுகுராரு பாரு, அவரு மான உரிச்சு, உப்புக்கண்டம் போட்டு வச்சிருக்காரு. எடத்து மாட்டக் கழத்தி விட்டுட்டு, என்னயப் பூட்டி உழுதாரு. அதுக்குக் கூலியா, உப்புக்கண்டமும் குடுத்து, ரோசாப் பாக்கு வெத்தலயும் குடுத்தாரு. நல்லா திண்டுட்டு, திண்ட மயக்கத்ல படுத்துக் கெடக்குறேண்டு சொல்லுச்சு. 

நா,இந்தக் காடெல்லாஞ் சுத்தினே, ஒண்ணு கூடக் கெடைக்கல்ல. நானும் போயி, உப்புக்கண்டம் வாங்கித் திண்டுட்டு வாறேண்டு சொல்லிட்டு ஒழவங்கிட்டப் போகுது. போ! போ! நொணங்கப் பெத்து, வருவேண்டு நெனச்சுக்கிட்டு, இந்த நரி படுத்துக் கெடக்குது.

ஒழவாங்கிட்டப் போயி, அண்ணே! எங்ஙண்ணே சொன்னாரு. அவரு அங்க படுத்திருக்காரு. வலத்து மாட்டக் கழத்தி விடு, நாஞ் செத்த உழுகிறே. எனக்கு உப்புக்கண்டம் குடுண்டு, புதுசா வந்த நரி சொல்லுச்சு. சரிண்ட்டு, வலத்து மாட்டக் கழத்தி விட்டுட்டு, நரிய ஏர்ல பூட்டுனர். நரியால இழுக்க முடியல. சாவடி அடிச்சு, மொத நரியப் போட்ட எடத்ல தூக்கிப் போட்டுட்டர். வலி தாங்கக் மாட்டாம. 

எனக்கென்னா சொன்னவ பழி குடுப்பாண்டு, ரெண்டாவது அடி பெத்த நரி மொனங்கிச்சு. இப்டி, மொனங்கிக்கிட்டே, ரெண்டு நரியும் செத்துப் போச்சுக. 

அப்பாவி, மானுக்குத் தொரகஞ் செஞ்சா, அந்தப் பாவம் விடுமா? இப்ப அடி பெத்துச் சா. துரோகம் என்பது எதிரிக்குக் கூடச் செய்யக் கூடாது.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *