சாத்வீக உலகில் ஒரு தரிசன தேவதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 4,381 
 
 

அவர்கள் கோபியினிடைய அம்மாவும் இரு சகோதிகளுமாக அடுக்களையின் நடுமையைத்தில் அமர்ந்து மண் சட்டியில் இறைச்சி கழுவுவதை அறை வாசலில் நின்று அதை ஒரு புதினம் பார்த்துக் கொண்டிருந்த பாரதிக்கு ஒரு மனிதக் கொலையையே பார்த்து விட்ட குற்ற உணர்வில் குலை நடுங்கிற்று.

அதைப் பார்க்க நேர்ந்த பாவம் தன்னை சும்மா விடாது என்று அவள் நம்பினாள். அவள் வாழ்கின்ற அந்த சாத்வீக உலகின் இருப்புக்கேற்பவே அவளின் நம்பிக்கை வித்து அது விருட்சமாகவும் வளரும் வேரோடும் குற்ற மனிதர்களை அழித்து விடவும் கூட.

ஆனால் உண்மையில் அவள் ஒரு அழிப்புக் கடவுளல்ல, அன்புக் கடவுள். அதுவே அவளின் மூலதனம். வாழ்க்கையெல்லாம் நேற்றே, இதை அவள் அறிந்திருந்தாள். நேற்றிரவு படுக்கையில், அவனோடு உடல் உறவு கொண்டாடி மகிழ்ந்த போது இடையில் களிப்பு மிகுதியோடு மிகப் பரவசமாக, குரலை உயர்த்தி அவன் சொன்னான்.

பாரதி! என் செல்லக் குட்டி! நாளைக்கு நல்ல வேட்டை தான்.

அதைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள்.

புதிதாக இனியொரு வேட்டையா? ஏற்கெனவே, நான் நொந்து போய்க் கிடக்கிறன், இதை விட இன்னொரு வேட்டையா?

ஓ! அதைச் சொல்லகிறாரா? நேற்று பிற்பகல் காதில் இரும்பையே காய்ச்சி ஊத்துர மாதிரி ஒரு செய்தி கேட்டேனே. மாமாவின் வாய்க்கு சக்கரை தான் போட வேணும். அது வேறொன்றுமில்லை. தீபாவளி, அதுவும் எங்களுக்குத் தலை தீபாவளி வருகுதல்லே. இப்ப குடியே மூழ்கிப் போன மாதிரி நான் இருக்கிறன். கட்டின உறவும் எடுபடேலை. வெறும் நடைப் பிணம் தான் நான். குடும்பம் உறவு எல்லாம் பொய். இவர்கள் என்னையே பிடுங்கிச் சாப்பிட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அது தான் மாமா சொன்னார், தம்பிக்கு நாளைக்குத் தலைதீபாவளி. ஆட்டிறைச்சி தான் வாங்க வேணும். அதைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள். முட்டையைக் கண்டாலே அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறவள் அப்படிப்பட்டவளுக்கா இந்தக் கதி? அதுவும் இறைச்சி காய்ச்சுகிற வீட்டில் அவள்.

இது வழக்கல்ல, வாழ்க்கைப் போராட்டம். முதன் முதலாக அவள் தீக்குளித்து எழ நேர்ந்தது, அவல் கொண்டு வந்த பாவக் கணக்கின் முதற்படி. அவளின் மாசுபடாத அன்பு வழிபாட்டிற்கே, விழுந்த பேரிடி. அவள் காதைப் பொத்தி கண்ணை மூடினாலும் மனத் திரையில் அந்த அவலக் காட்சியே தெரிந்தது. அது மட்டுமல்ல குடலையே பிடுங்கி குப்பைக் காட்டில் எறிந்த மாதிரிஅதன் வாசம் வந்த போது அவளால் தாங்க முடியவில்லை, கதவைச் சாத்திக் கொண்டு அவள் படுக்கையில் தன்னை மறந்து அழுத போது, உலகமே இருண்டு விட்டது.

இருள் வந்தால் என்ன நடக்கும்? சம்ஹாரம் தான் அவளுக்குத் தெரியும். தன் உடலையே வேட்டையாடித் தீர்க்கிற கோபியிடம் தான் இதற்காக, வேதம் சொல்ல போனால் என்ன நடக்கும்? அவளைக் கொன்றே தீர்த்து விடுவான். பரவாயில்லை இங்கு நான் செத்தாலும் பரவாயில்லை. எனக்கு இயல்பாகி விட்ட சாத்வீக நான் ஒரு போதும் சாகக் கூடாது. இதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை. எனக்கு இரத்தக் கண்ணீரே வருகுது. அவர் வரட்டும் பேசிக் கொள்ளுறன்.

பேபரெல்லாம் வாசித்து விட்டு வாசகசாலையிலிருந்து பசியோடு அவன் திரும்பி வரும் போது அவள் அவனை வரவேற்ற விதம் வேறு விதமாக இருந்தது.

அழுது கொண்டு கட்டிலில் படுத்திருந்தவள் அவனின் காலரவம் கேட்டு, திடுக்கிட்டு விழித்து, எழுந்து உட்கார்ந்தவள், அடித் தொண்டை வரள அவனைக் கேட்டாள்.

நான் ஒன்று கேட்பன், கோபிக்க மாட்டியளே. அவனுக்கு ஏனோ அப்போதைய வேளையில் இரவு ஞாபகம் வந்தது. அது முற்றினால், எங்கே நானும் மாறிவிடுவேனோ, என்ற பயத்தோடு அவன் சொன்னான், அது நீ கேட்பதைப் பொறுத்தது.

இப்ப உங்களிடம் ஒரு யாசகம் தான் கேக்கிறன். இன்று உங்களுக்கு நான் சாப்பாடு சமைச்சுத் தாறன். அதுவும் மரக்கறியோடை சாப்பிடுவியளே? சாப்பிடத் தான் வேணுமென்று என் மனம் சொல்லுது.

அதைக் கேட்டு விட்டு அட்டகாசமாய் சிரித்து விட்டும் குரலை உயர்த்தி அவன் சொன்னான்.

அதெப்படி? இறைச்சி சாப்பிட்டால் தான் எனக்கு மூச்சே வரும். சைவம் சாப்பிட்டால், எனக்கு சாவு தான்.

அதைக் கேட்டு அவள் மனம் வருந்தி அழுது விட்டு, ஆற்றமையோடு சொன்னாள்.

உங்களுக்கு உபதேசம் செய்யவும் உங்களை வழி நடத்தவும் நான் ஒன்றும் புத்தனில்லை. இருந்தாலும் வழி தவறி வந்து விட்ட எனக்கு என் மீதுதான், கோபம் கோபமாய் வருகுது, இப்ப சொல்லுறன். எனக்கு அன்பு செய்வது ஒன்றைத் தவிர வேறு வழி தெரியாது. வாழ்க்கையும் பிடிபடவில்லை. எல்லா உயிர்கள் மீதும் எல்லையற்ற அன்பும் பாசமும், கொண்டுருக்கிற எனக்கு உங்கடை பதிலைக் கேட்ட பிறகு ஓவன்று வாய் பிளந்து அழுவதைத் தவிர வேறு வழி தெரியேலை. இது வெறும் அழுகையல்ல. கங்கை தான் என்பது நீங்கள் அறியாத ஒன்று. எனக்கு மட்டுமே தெரியும்.

அதை அவள் சொல்லும் போது அங்கு அவனைக் கானவில்லை. அவன் நிழல் மட்டுமே அவள் காணக் கூடியதாய் அங்கு மிஞ்சியிருந்தது. நிழல்களையே கண்டு, பழகிப் போயிருந்த அவள் கண்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவளின் தேடல் இன்று வரை நிஜம் நோக்கி நகரும் சத்திய ஊர்வலமாகவே என்றும் தனித்திருக்கும்.

வேடம் கட்டியே ஆடுது உலகம். வாடுது மனம். இங்கு வானம் தான் அறியாமல், ஈனமுற்று சாவதொன்றே, இதன் விதியாகும் கானலில் கால் முளைக்க காட்சி உலகமொன்றே, இதன் கனவிலும் வருகிறது.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *