சாத்தானின் தந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 94 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு கல்லூரிப் பேராசிரியர் தம் மாணாக்கர்களுக் குச் சோதனை செய்து காட்ட ஒரு தவளையை வெந்நீரில் போட்டார்.

தவளை உடனே வெந்நீரிலிருந்து குதித்து வெளி யேறிவிட்டது. பின்பு, குளிர்ந்த நீரில் தவளையைப் போட்டு அடுப்பில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாக்கினார். கடைசியில் சூடு தாங்காமல் தவளை செத்தது.

சாத்தானும் இப்படித்தான் நம்மைச் சாகடிக்கிறான்.

முதலில் ஜெபம் செய்யாதபடி செய்கிறான், பிறகு கோவிலுக்குப் போகாதே என்று தடுத்துவிடுகிறான் குருவைக் குறைகூறச் செய்கிறான்; கோள் சொல் லச் சொல்கிறான். இப்படியே இன்னும் பல பாவங் களுக்குள் அணு அணுவாக அடிமையாக்குகிறான்.

எல்லாவற்றையும் மொத்தமாகச் செய்யச் சொன் னால் சாத்தானின் சொல் ஏற்றுக் கொள்ளப்பட மாட் டாது என்று சாத்தானுக்குத் தெரியாதா, என்ன?

“என் மகளே, பாவிகள் உனக்கு ‘நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே” [நீதிமொழிகள் 1;10]

“யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்” [லூக்கா 22:3]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *