சங்கு சுட்டாலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 173 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் உலகப்போரின் வில்லன் ஹிட்லர் என்றால் கதாநாயகன் சர்ச்சில் எனலாம்.

சர்ச்சிலின் புகழ் சர்வதேசமெங்கும் பரவி இருந்தது. இங்கிலாந்தின் பிரதமராக இரண்டாம் உலகப்போரின் போது மிகத் திறமையாகச் செயல்பட்டார். அப்பொழுது ஒருமுறை மிக மட்டமான ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து உணவு உண்ண நேர்ந்தது. ஆங்கு வந்த சர்வரைக் கண்டு சர்ச்சில் துணுக்குற்றார். சர்வர், சர்ச்சிலின் பாலிய பள்ளி நண்பராயிருந்தார்.

“நீ இங்கேயா இருக்கிறாய்? இந்த ஓட்டலில்தான் உனக்கு வேலை கிடைத்ததா?” என்று சர்ச்சில் சிநேகி தனான சர்வரைப் பார்த்துப் பளிச்சென்று பரிகாசமாகக் கேட்டார்.

நண்பன் மிகச் சாதாரணமாக, “நான் இங்கு வேலை செய்கிறேன், ஆனால் இங்கு ஒருநாளும் சாப்பிட்டதில்லை” என்றான்.

சங்கு சுட்டாலும் வெண்மைதரும் என்ற பழமொழி சர்ச்சிலுக்குத் தெரியுமா?

“ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது”. – [நீதிமொழிகள் 15:23]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *