கதையாசிரியர்:
தின/வார இதழ்: இன்ஸான்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 525 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெளியே காரிருள் அப்பிக் கிடந்தது. 

சுவாசம் மோதும் தூரத்தில் நின்றாலும் ஒருவரை மற்றொருவர் கண்டுகொள்ள முடியா நிலை. 

அந்தக் கிராமத்தவரின் உளத்தைத்தான் இருள் பறை சாற்றிக் கொண்டிருக்கிதோ? 

இப்போதெல்லாம் கிராமங்கள் எவ்வளவு கெட்டு விட்டன. எங்கிருந்து வந்தது இந்தப் பழக்கம் மனதிலே இருளும் குரோதமும் போட்டியும் பொறாமையும்… 

நாகரீகத்தின் உச்சாணிக் கொப்பிலே நின்று வெறி யாட்டமாடும் நகரத்தின் பழக்க வழக்கங்கள்தான் எவ்வளவு வேகமாகக் கிராமங்களை ஆட்கொண்டுவிட்டன? 

அன்பும் அறமும் பண்பும் படிப்பினையும் ஊட்டிய கிராமங்களா இவைகள்? 

வெள்ளை மணல் ரோடு அவர்களின் தூய உள்ளத்தையல்லவா பிரபலித்துக் கொண்டிருந்தன அன்று. இன்றோ அந்த ரோடுகள் கறுப்புத் தார் ரோடுகளாக மாறிவருகின்ற வேகம்… அதனையும் மிஞ்சும் மனிதர்களின் உளம் இருளடையும் வேகம். 

ஜன்னலை நன்றாக இழுத்து ‘சிக்’ கென்று மூடிவிட்டு ‘ஆம் செயரில்’ அமர்ந்தேன், எனது உடலின் வெட வெடப்பு சற்று தணிந்தது. சற்றேதான்.. மீண்டும் தொடர்ந்தது. 

ஜன்னலின் மேல் உள்ள ஓட்டையினூடாக பனிக்குளிர் எனது அறைக்குள் நுழைந்தது. அழுக்கேறிய பெனியன் குளிரைத் தாங்க இயலாமல் கெஞ்சியது எழுந்து சேட்டை அணிந்தேன். மீண்டும் கதிரையில் அமர்ந்து வலது காலைத் தூக்கி மேசை மேல் போட்டப்படி இடது முழங்காலினால் மேசையின் விளிம்பில் முட்டுக் கொடுத்தவாறு கதீரையில் ஆறுதலாகச் சாய்ந்தேன். ‘மினுக், மினுக்’ கென்று எரிந்து கொண்டிருந்த ‘சிமினி’ யற்ற கைவிளக்கின் சுடர் அங்கும் மிங்கும் அசைந்து பரிதாபமாகக் கெஞ்சியது. 

அதைச் சற்று தூண்டினேன். மேசையில் புத்தகங்களும் கொப்பிகளும் தாறு மாறாய்க் கிடந்ததன. அடுக்குவோம் அடுக்குவோம் நினைப்புத்தான்! எங்கே? 

வெளியே “கபுறு’ அமைதி, ஏழுமணிக்கெல்லாம் மௌத்தாகிவிடும் கிராமம் அது. சிறு கிராமம் பெரிய களங்களுக்கும் பெரும் பெரும் வயல்களுக்கும் பஞ்சமில்லை. உண்டு கொழுக்கும் கரங்கள் இரண்டு மூன்று இருந்தாலும் உழைக்கும் கரங்களும் ஏராளம், ஏராளம் வியர்வையைச் சிந்தத் தயங்காத மக்கள். ஆனால் அந்த வியர்வை தான் நெற்கதிர்களுக்குக் கிடைக்கும் நீரா?

“வெவ் வெவ்” 

வெளிக்கதவு திறபடும் ஓசையுடன் நாயின் குரைப்பும் சேர்ந்தது. பாவம் நன்றியுள்ளது அது மட்டுந்தானா? 

எனக்கு நன்றாகத் தெரியும் – யாரோ இந்த நெரத்தில் பாடசாலைக் கிணற்றில் நீர் அள்ள வந்திருக்கிறார்கள். அதை நிரூபிப்பது போல் வாளி கிணற்றில் விழும் ஓசை.

எழுந்து பார்ப்போமா? மனந்தான் சொல்கிறது மேசை மேல் இருந்த காலை இழுத்து கதிரையிலிருந்து எழுந்து கதவைத் திறந்து வெளியே சென்று ‘டோச்’ சை அடித்துப் பார்க்கும் தைரியம் ஊஹும். குளிருக்கு அவ்வளவு பயமா? 

ஒரு இலை அசையக் காணோம். 

உள்ள ஆறு ஆசிரியர்களுள் இருவர் வீடு சென்றிருந்தனர்! மற்றைய நால்வருள் மூவர் தத்தமது அறையினிலே. 

இரண்டு அறைக்குல் மெல்லிய வெளிச்சம். மற்ற அறை கும்மிருட்டு பாவம், அலுப்பு, தலைமையாசிரியர் உறங்கிவிட்டார் போலும், 

இன்னும் ஒரேயொரு நாள் தான்: எமது கிராமத்தின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக நடைபெறும் மீலாத் விழா! 

எமது கோட்டைகள் எல்லாம் சரிந்து விடுமோ? ஆண்டிகள் கட்டியதுபோல். 

நீண்ட பெருமூச்சுடன் சீரணிக்காத உணவு செரித்துக கொண்டு மேலே வருவது போல் பழைய சம்பவங்கள். நான், எனது பெயர்: பெயரில் என்ன இருக்கிறது? எனது சொந்த ஊர்: மன்னார். வயது: 23. தொழில் வாந்தியெடுத்தல் (ஆம், ஆசிரியத்தொழில்) பல கிராமங்களைக் கண்டவன். இங்கு வந்து மூன்று மாதங்கள்தான், 

ஆசிரியர் பவர் ஒன்று கூடி அருமையான (?) திட்டமொன்றைத் தீட்டினர். ஆம், மிகத்தடல்புடலாக மீலாத் விழாவைக் கொண்டொடுவதென்று. 

ஊரே திரண்டு நிற்கின்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் முதல் பழைய மர்ணவர் சங்கம் வரை முழுமூச்சாக நிற்கிறது மீலாத் விழாவை நடாத்த வேண்டுமென்று. நான் எம்மாத்திரம்? மரைக்கார் பாட்டிமுதல் லெப்பை பாட்டி வரை ஏக மனதாகத் தீர்மானிக்கிறது: நபிகள் தினத்தைக் கொண்டாடத்தான் வேண்டுமென்று நான் எந்த மூலைக்கு. 

ஆகவே சில ஆக்க வேலைகளுக்கு நானும் ஒத்துழைக்க வேரண்டியிருந்தது சம்மதித்தனே. 

காரியங்கள் சுடுகதி வேகத்தில் நடைபெற்றன. நன்கு கரையின்றிப்பாயும் வெள்ளம்போல், உற்சாகம் – ஊரெங்கும் ஒரே உறசாகம்! ஒவ்வொருத்தர் மனநிலும் குதூகலம் நிரம்பி வழிகிறது. 

ஆனால். ஆனால்… 

இரண்டு ‘பாட்டிகளுக்கிடையேதான் போராட்டம் மரைக்கார் பாட்டி, லெப்பை பாட்டி: கீரி, பாம்பு, நாங் பூனை, யாளை, பூனை, யானை, சிங்கம் இவைகளுக்கிடையில் உள்ள கூடன்பாடு; 

மரைக்கார் பாட்டி சொல்லும், ‘ஒலிபெருக்கி வேண்டாம்’ என்று. லெப்பை பாட்டி சொல்லும் ‘வைக்கத் தான் வேண்டும், என்று மரைக்கார்’ சொல்லும் ‘வெளியூர் பேச்சாளர் வரத்தான் வேண்டும். என்று லெப்பை ‘வீண செலவு’ எதக்கென்று மறுக்கும். ம. பா. ஆணையிடும். ‘வம்பர்தாபதி பூசரை அழை’ என்று? ‘அவன் எதற்கென்று அலறும் ‘லெ. பா’. ஆளுக்கு 5 ரூபா போதும் என்று வெ பா.நடக்காது 50 ரூபாயாவது வேண்டும் என்று ம.பா. இப்படி, இப்படி; நாளும் கரைந்து நாமும் கரைந்தோம். 

சில பேச்சாளர்கள் வருவதற்கும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அரபு சம்பாஷணை, இன்னிசைக் கீதங்கள் (சினிமா டியூனில்), அடுக்குத் தமிழ் ஆலாபனைகள் இப்படி பலதும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தன… அது… அது இப்படியா தவிடு பொடியாக வேண்டும்? 

பக்கத்து அறை நண்பர் இருமுகிறார். தொண்டை காய்கிறது. அமைதி. மீண்டும் மெல்லிய குரட்டை ஒலி. 

மாடு மீண்டும் இரைமீட்கிறது. 

முந்தாநாள் இரவிலே பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையில் அதிமுக்கிய கூட்டம் பெற்றோமெக்ஸ், ஒளியில மண்டபம் நிறைந்திருக்கிறது. அந்த மூலையில் சாலிஹர மரைக்கார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் பெருங் கூட்டம்.(மரைக்கார் பாட்டியினர்] சாலஹு-மரைக்கருடன் ஒட்டி உறவாடுகிறார் குத்தூஸ் மரைககார். இந்தா பக்கம் கபீர் லெப்பை அவரைச் சுற்றியும் பெருங்கூட்டம் (லெப்பைப் பாட்டியினர்] ஒருத்தரை மிக அலட்சியமாக நோக்குகின்றனர். 

சாலிஹுமரைக்கார் எழும்புகிறார், மொழிகிறார், “மாஸ்டர் எனக்கு ஒரு ஐடியா தோண்டுது பென்னம்பெரிப் பேச்சாளரை வரவழைக் காட்டியும் நம்ம மினிஸ்ட்டயை யாவது வரவழைக்கணும். இதுதான் எங்க எல்லார்ட விருப்பமும்…” செருக்குடன் கபீர் லெப்பையைப் பார்க்கிறார் அந்த பழுத்த அரசியல்வாதி. 

“அதுககு எவ்வளவு செலவானாலும் சரி” இது கெளது மரைக்கார். தொடாந்து “ஆமாம் ஆமாம்”. 

சீறி எழுகிறார் கபீர் லெப்பை “என்னாது எல்லார்டையும் விருப்பமெனடால்?” என்று ஒரு அழுத்தம் வைத்துச் சபையைக் கூர்ந்து ஒருமுறை நோட்டம் விடுகிறார். தொடாந்து “…என்னா அர்ததம்? எனக்கு இந்தத் திட்டமே பிடிக்கல்ல” 

அவர் வசனத்தை முடிக்கவில்லை: துள்ளி எழுகிறாப் சாலிஹமரைக்கார். தன்னைக் கபீர் லெப்பை எதிர்த்துக் பேசிய ஆத்திரம் அவரைப் பிடுங்கித் தின்கிறது, ஆட்டுக் குட்டியைப் பார்க்கும் வேங்கையின் கொடூரம். 

“உமக்குப் பிடிக்காவிட்டால் என்ன காணும்? உம்ம ஒருத்தனுக்காக என்னுட திட்டத்தை மாத்துக்க முடியுமா?”

தலைமையாசிரியர் சரீப் சற்றே நடுங்கிறார். நான் அமைதியாய்யிருந்து வேடிக்கை பார்த்தேன். 

இரண்டு இடங்கள் கபீர்லெப்பைக்குப் பிடிக்கவில்லை; ஒன்று ‘ கானும் என்ற வார்த்தையிலே உள்ள இளப்பம் மற்றது ஒருத்தனுக்கு என்ற வார்த்தையிலே உள்ள’னுவின் அழுத்தம்.. இருந்தாலும் பொறுமை கடைப்பிடிக்கப் படுகிறது. ஆனால் வாய் எல்லை மீறுகிறது. 

”எனக்கு மட்டுமா பிடிக்கவில்லை? இங்கேயுள்ள பாதிப் பேருக்கு மேலே பிடிக்காதே ஓம்மடதிட்டம்” 

ஆமாம் போடவா ஆட்கள் இல்லை.

பொத்துக் கொண்டு வருகிறது கோபம். யாருக்கு? மரைக்கார் பாட்டி தலைவர் சாலிஹ் -மரைக்காருக்காக? அல்ல அவரது வால் குத்தூஸ் மரைககாருககு (ஆண்டவ ன் வரங்கொடுத்தாலும் ஆலிம்ஷ வரங் கொடுக்கவேண்டாமா?)

“சரிதான் நிறுத்துங்காணும் என்ன யோக்கியதையிலே இங்கே நீர் கதைக்க வந்துவிட்டீர்? கேடு கெட்ட லெப்பை கூட்டத்துக்குத் திமிர் வேறையா? பணத்தை அள்ளி எறிகிறோம் நாங்க [உண்மையிலேயே இன்னும் ஒரு சதம் அவர் கொடுக்கவில்லை] நீங்க அனுபவிக்கப் பாக்கிறீங்களா?” 

கபீர் லெப்பைக்கு முகம் ‘ஜிவு ‘ஜிவு’ என்று சிவக்கிறது. சாலிஹு மரைக் காருக்குப் பரிபூரண திருப்தி. அத்தோடு மனுசன் வாயை முடக்கிக் கொள்ள வேண்டாமா? 

“கீழ்சாதிப் பயல்கள், நபி நாயக விழாக் கொண்டாட வந்துட்டானுக, மோடைாக் கழுவாத பயல்க. பள்ளிவாசல் என்ன நிறம்னு தெரியுமா இவனுவளுக்கு? உண்மையில் பள்ளிவாசலுக்கு நிறம பூஜையிட்டவரே டல மரைக்கார்தான்.

நான் மௌனமாய்க கவனிக்கிறேன்.

:சாலிஹு-மரைக்கார்” அடிபட்ட புலியின் உறுமல்.

ஆசிரியர் பலரும் பரபரப்புடன் எழுகின்றனர்.

சாலிஹுமரைக்கார் கூடச் சற்றே துணுக்குறுகிறார்  கௌதுவின நிலையோ… 

“வர வர வர்த்தை தடிச்சிக்கிட்டே போவுதே! நாங்களும் மரியாதைக்காகப் பார்த்துக் கிட்டுத்தான் வாறோம். பத்துமொறை மக்காவுக்குப் போயிட்டு வந்தா மட்டும் போதுமா? மரியாதை பழகிக்கிக்க ஸாலிஹு ஹாஜியாரே! நாங்கள்ளாம் கீழ்சா நீங்க மட்டும் பெரிய மேல் சாதயோ?” 

மனிதர்களின் அசைவுகன் அதிகரித்தன. 

பயங்கர உறுமலுடன் பாய்கிறார் கபீர் லெப்பை: புலி பாய்ந்துவிட்டது. பதுங்கிய வேங்கை பாய்ந்து விட் டது. மரைக்கார் நிலத்தில் சாய்கிறார். கபீரின் முஷ்டிகள் அவர் கன்னத்தை பதம் பார்க்கின்றன. 

இரத்தம் – இரத்த ஒழுக்கு… 

“கபீர் லெப்பை… லெப்பே…” தலைமையாசிரியன் அவலக்கு தகநெட்டும். 

கலவரம் பாடசாலை மண்டபத்திற்குள்.. 

இந்தப் பூஞ்ச உடல் ஆசிரியர்களால் என்ன செய்ய முடியும். 

“அல்லாஹ்! என் கால்” 

“ஆண்டவனே காப்பாத்து” 

“எண்ட வாப்பா”

“எண்ட உம்மா” 

“கொல்லுடா! கொல்லுடா” 

ஐயோ கடவுளே – ஒரு தமிழனின் அவலக்குரல். 

‘கணீர்’ பெற்றோமெக்ஸ உடைந்து சிதறியது. 

டோச்சை அடித்துக் கொண்டு தலைமையாசிரியர் முன்னேறுகின்றார். ஆளுக்கொருவராகப் பாய்ந்து பெருந் தலைகளைப் பிடித்துக் கொண்டோம். 

அட ஆண்டவனே! 

ஒரு நிமிட உணர்ச்சி. வெறி ஒரு நூற்றாண்டு நாகரீகத்தையெல்லாம் தவிடு பொடியாக்கி விடுகிறதே. 

ஹாஜியார்களும், லெப்பைகளும், மரைக்கார்களும் அச்சச்சோ.. அந்தந்தோ… 

நான் நடுங்குகிறோன் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டால். 

ஆம். மறுநாள் முதல் லெப்பைப் பாட்டியினரில் எவ ரும் இந்த மீலாத் விழாவில் கலந்து கொள்வதில்லை எனத் தீர்மாணக்கப்படுகிறது. 

அதற்கு எதிர்மாறு மரைக்கார் பாட்டியினர் ஆனா கொஞ்சப்பேரை வைத்துக்கொண்டு, விழாவைச் சிறப்பிக்க முடியுமா? 

புனித தூதர் விழாவில்… சோலி மனிதர்கள் நுழைந்து பெருங் பிரளயத்தையல்லவா ஏற்படுத்தி… 

விடிந்தால் மீலாத் விழா 

துன்பமான கற்பனையாழின் தந்திகள் மீட்டப்படுகின்றன. 

வாதிக்கும் குறைந்த சனம். வெளியூர்ப் பேச்சாளர்கள் சோர்வடைகின்றனர். முப்பது பேருக்கு என்ன ஹபீப் பெரிய பிரசங்கம்? ஒலிபெருக்கி கூடச் சோர்கிறது. எமது தயாரிப்புகள் அத்தனையும் தவிடுபொடி. அரபு சம்பாஷணை நடக்கிறது. 

மரைக்கார் பாட்டிக் குழந்தையொன்றின் கேள்விக் லெப்பைப்பாட்டி பதில் பகரவேண்டும். ஆனால் கேள்வி மட்டும்தான் கேட்கப்படுகிறது. பதில் கூறும் குழந்தை வரவில்லை. 

மேடையிலுருந்தவாறு வீதியை ஏறிட்டு நோக்குகிறேன். 

ஐயகோ!. அங்கென்ன? 

கையிலே கத்தியும் கம்பும் தடியும் தாங்கிய வண்ணம், பெருகூட்டம் பறவைகளைக் குறிவைக்கும் வேடனின் நிலை. 

லெப்பை பாட்டியினரா?. மீண்டும் ஒரு கலவரமா? புனித நாளிலா?, 

திடீரென்று கற்பனைத் தந்திகள் அறுபடுகின்றன எனக்கு வியர்க்கிறது. காரணம், வெளியே பயங்கர உறுமல். சீறல், பிறாண்டல், 

உயிர்ப்பிச்சை கேட்டு ஒன்று மரண ஓலம் எழுப்புகிறது. கடித்துக்குதறி – நாயும் பூனையும்தான்.

வெளியே சென்று விரட்டுவோமா? அது எனது சேவை, கடமையுங்கூட. 

ஆனால், கதிரையை வீட்டு எழமுயல்கிறேன். முயல்கிறேன். முடியவில்லை, குளிருக்கு அவ்வளவு பயமா? 

– 16-02-1968, இன்ஸான் முஸ்லீம் வாரப் பத்திரிகை.

– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *