கொடுப்பதும் எடுப்பதும் – ஒரு பக்க கதை





அவருக்கு மிகவும் இரக்க சுபாவம்.
தன்னிடமிருப்பதை யெல்லாம் பிறருக்கு வாரி வழங்குவதில் ஒரு திருப்தி,
கேட்டால்தான் தர வேண்டுமா? கேட்காமலே தருவதுதானே ஈகை என நினைத்தார்.
விதவிதமான பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு கடைவீதியில் அமர்ந்தார். ‘பழம் வேண்டுபவர்கள் வாருங்கள். இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.
ஆனால்; ஒருவர் கூட வரவில்லை. ‘இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ’ என்றும் ‘இலவசமாய் யாராவது பழம் தருவார்களா’ – பழம் விற்கிற விலையில் என்றும் ‘சுவையிருக்காதோ’ என்றும் விஷப் பழமோ என்றும் கூடிக்கூடிப் பேசி விலகிச் சென்றனர்.
மாலையில் பழங்களைத் தூக்கி எறிந்து விட்டு வந்தார். பலரும் பொறுக்கிக் கொண்டனர்.
– நவம்பர் 22, 2013