கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!






‘இனி ‘ஏப்ரல் ஒண்ணு’க்கு மேல உங்களுக்கு ராஜயோகம்தான்னார் ராஜேந்திரன்.
‘எப்படி?’ என்று கேட்டான் கேசவன். ‘ஒருவேளை ஏபரல் ஒண்ணு முட்டாள்கள் தினம்கறதினால நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறாரோ?’ என்ற அனுமானத்தில்.
‘ஏப்ரல் ஒண்ணுல உன் எதிரிகள் கெட்டு இருக்கிற இடம் தெரியாம போயிருவாங்க…! அதனாலதான் அப்படிச் சொன்னேன்!’
‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்னு!’ என்றார் ராஜேந்திரன்.
மனசு கேக்கலை..! இதை நம்புவதா? வேண்டாமா? ஒரே குழப்பம் உள்ளத்துக்குள்..! தனக்கு ஞானம் கொடுக்கும் குருவாகத் தான் கருதும் சந்துரு என்ன சொன்றான் பார்ப்போம்னு முடிவு பண்ணி அவனிடம் கேட்க, அவன் சொன்னது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
எப்போது மனக்குழப்பம் வந்தாலும், அதற்கு மருந்தும், மார்க்கமும் தருபவன் சந்துருதான்.
அவன் இப்படிச் சொன்னான் :
‘எதுக்கு எதிரி கெட்டு அதில் இன்பம் காணணும்?! ஒருத்தன் கேட்டில் எதுக்கு இன்னொருத்தனுக்கு லாபம்?!
எப்பவுமே… “அறிவு சொல்றதைவிட, இதயம் சொல்றதைக் கேள்..! “அறிவு ஆதாயத்தை மட்டும் சொல்லும்! அது, அடையும் வழியைப்பற்றி யோசிக்காது!., ஆனால், இதயம் சொல்ற வழி இருக்கே… அதுதான் ‘இறைவன் சொல்றவழி!’ அது ஆதாயத்தைப் பார்க்காது! அன்பைப்பார்க்கும்., அகிலமேன்மை பார்க்கும்! அதுதான் ஆண்டவன் வழி! அதனாலதான் நம்ம பெரியவங்க ‘அகம் பிரம்மாஸ்மீ’னாங்கன்னான்!’ என்றான்.
ஒன்று ‘பட்டுப்’போய் இன்னொன்றுக்கு ‘வாழ்வு’ வேண்டாம்! ஆண்டவனே! பாரதி சொன்னபடி, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒருமைப்பாட்டில் வாழ்வு கிடைக்கட்டும். அது எல்லாருக்கும் நன்மை தரும்படி கிடைக்கட்டும்னு நினைத்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |