கூடப் பிறந்தவன்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, அண்ணணும் தம்பியும் இருந்தாங்க. ரெண்டு பேருமே கூலிக்கு ஆடு மேய்க்கிறவங்க. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட சச்சரவுக வரும். போட்டுக்கிருவாங்க. பெறகு கூடிக்கிருவாங்க.
இப்டி இருக்கயில, ஒருநா, ஆடு மேய்க்கிற எடத்ல, ரெண்டு வேருக்கும் சண்ட வந்திருச்சு. அண்ணங்கார, தம்பிய அடுச்சுக் கெணத்துக்குள்ள போட்டுட்டு, வீட்டுக்குப் போயிட்டா. இவ், கெணத்த விட்டு வெளியேற முடியாம, கெணத்துக்குள்ள அழுதுகிட்டுக் கெடக்கா.
அந்த வழியா ஆடு மேச்சுக்கிட்டுப் போன எடையன், அவனக் காப்பாத்தி, பத்து ஆடுகளக் குடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லிட்டு, மீதி ஆட்டப் பத்திக்கிட்டுப் போயிட்டா.
ஆடுகளப் பத்திக்கிட்டு, தம்பி, வீ ட்டுக்கு வர்றர். ஆடுகளப் பாத்திட்டு, அண்ணணுக்கு, ஒரே பொறாம், பொறுக்க முடியல. தம்பியப் பாத்து, ஆடுக ஏதுண்டு கேக்குறா.
நம்ம பாட்டன் சொத்து. கெணத்துக்குள்ள இருக்ற நம்ம பாட்டன், குடுத்திட்டு, போயி அண்ணன வரச்சொல்லுண்டு சொன்னாருண்டு, அண்ணங்கிட்டச் சொல்லிட்டா.
தம்பி சொன்னதக் கேட்ட அண்ணன், பாட்டன், ஆடு குடுப்பாருண்டு நெனச்சு, நேரா கெணத்துக்குப் போயி, உள்ள விழுந்தர், விழுந்தவ், ஊட்டி ஒடுஞ்சு செத்துப் போயிட்டா.
தம்பிய அடுச்சுக் கொடுமயப் படுத்தினவ, பின்ன சாகாம, என்னா செய்வானாம். கூடப் பெறந்தவனக் கொடுமப் படுத்தலாமா? ஆயிரம் இருந்தாலும், அவ, கூடப் பெறந்தவன்ல்ல.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.