குத்துங்க…! நல்லா குத்துங்க!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 2,056
வாழ்க்கை சிலபேருக்கு பரமபத விளையாட்டு!. சின்னச் சின்னதாகவாவது ஏற்றிவிட ஏணி இருக்கும்!. ஆனால், சுதாகருக்கு மட்டும் அது வேறு மாதிரி. சூப்பரா கிடுகிடுன்னு உயர்த்த உயர்ந்தான். ஆனால், உயர்ந்த வேகத்திலேயே அந்த பரமபத அனகொண்டா தீண்டிக் கீழிறக்கி விட்டா மாதிரி அதள பாதாளத்துல விழுந்தான்.
அவனுக்கு எப்பவும் ஒரே வருத்தம். தன்னை இப்படி ‘பரமபத ஆட்டப் பாம்பாக ஏற, ஏற யாராவது இறக்கி விட்டு விடுகிறார்களே!’ என்று. அதுக்கெல்லாம் அவன் அதைரியப்படற ஆள் இல்லை! என்றாலும் அவனுக்கு ஒரு நினைப்பு ‘தன்னைச் சீண்டறவன் நேருக்கு நேர் சந்திச்சா ஒரு கை பார்த்துடலாம். ஆனால் அயோக்கியனுக பின்னாடி இருந்துல்ல குத்தறானானுக?!’ இதை ஒருநாள் சொல்லயே விட்டான்.
கேட்டுக் கொண்டிருந்த கேசவன் கேட்டான் ‘என்ன முதுகுல குத்துறாங்கன்னு வருத்தப்படறயா? குத்தறவனைக் குத்துங்க குத்துங்கன்னு குத்தவிடு!” என்றான் கேசவன்.
நீ என்ன சொல்றே? குழம்பினான் சுதாகர்.
உனக்கு வாழ்க்கைத் தத்துவம் புரியலையா, கேட்டான் கேசவ் .
கேசவனை ஏறிட்டுப் பார்த்தான் சுதாகர்.
“உலகத்துல எவனை முதுகுல பின்னாடி இருந்து குத்தும் தெரியுமா? தனக்கு முன்னாடி இருப்பவனை! ஆக, நீ தெரிஞ்சுக்கோ நீ குத்தறவனுக்கு முன்னாடி இருக்கேன்னு, அதுமட்டுமில்ல, இன்னைக்கு முன்னாடி இருப்பவன் எல்லாம் பின்னாடி குத்து வாங்கினதுனால முன்னுக்கு வந்தவனில்லை, முன்னாடி வரவர பின்னாடி குத்தப்படறோம்னு தெரிஞ்சே அடி பட்டு உயர்ந்தவங்க, உயர்றவங்க தான்!” என்றான்.
அவன் சொன்னது ஆதரவாய் இருந்தது சுதாகருக்கு.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
என்ன நியாயம்?
ஜெயந்தி சங்கர்
June 12, 2026
பிறவி
ஸ்ரீசரவணன்
June 9, 2026
எண்களுடன் பயணித்தல்
திசேரா
June 9, 2026
