காலாவின் கட்டளை




“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற பாடு இருக்கே, ஆதாங்க என்னால தாங்க முடியல!
“நான் அவளைத் தொடும் அடுத்த நொடியில்… என்னிடமிருந்து விலகி ஓடிறாள்“
இருங்க அவள் பேரைச் சொல்லையே, அதாங்க “சின்னப்பொண்ணு ”
“போங்க எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு, ஓரே வீட்டுல இருந்துகிட்டு. அடிக்கடி சேரக்கூடாதுன்னு சொன்னா யாருக்குத்தான் கோபம் வராதுங்க.”.
கோபத்தோடு கவலையும் கூடிகிட்டே போச்சு”
“ வீட்டிற்குள் நான் அவளை துரத்துவதும், அவள் விலகி ஓடுவதும். அவளுக்கு வேண்டுமானால், அது சுவாராஸ்யமாக இருக்கலாம், என்னால முடியல, அலுத்து போச்சு, ஒரு நாளா? இரண்டு நாளா… காலம் முழுக்க இதுதான்டா, ஒனக்குன்னா” நீங்களே சொல்லுங்க…இது நியாமா?.
இந்த கண்ணாமூச்சு விளையாட்டுக்கு ஒரு வழி கிடைத்தால் நன்றாக இருக்குமே, யாரைக் கேட்டால்…… என்று வெகுநேரம் யோசித்தேன். அப்போது எனக்கு “காலா” நினைவுக்கு வந்தார்.
“அப்புறமென்ன எடுத்தேன் ஓட்டம்…அவரிடம் சரணாகதி”
“குருவே “நாளெல்லாம் அவளுடன் கூடி சுகிக்க வேண்டும்” அதற்கு தங்கள் ஆசி வழங்க வேண்டும் ” தலை வணங்கி நின்றேன். வணங்கிய தலை நிமிர்ந்த போது..”குருவின் கண்கள் கோவைபழமாய் சிவந்திருந்தன.
“ அடேய் அற்ப பதரே…. கைக்கட்டி நிற்பவனே, அசை எழலாம், பேராசைக் கூடாதுடா? ”
கூடும் நேரமென்பது…. கட்டுப்பாட்டுடன் கண்ணியமாய் கடைப்பிடிக்க வேண்டியது. அதை தாறுமாறாய் கடைப்பிடித்தால் நீ கெட்டு விடுவாய், நீ கெட்டு விடுவதுடன் மட்டுமல்ல இயற்கைக்கு துன்பத்தை ஏற்படுத்தி விடுவாயடா”
“உன் பேராசை நிறைவேறாது….. ஆனால் ஆசையை மட்டும் வேண்டுமானால் நிறைவேற்ற ஆசி வழங்குகிறேன்… ஓர் நாளில் சிலமுறை மட்டுமே அதுவும் சிறிது நேரம் மட்டுமே சுகித்திருப்பாய்… ”ததாஸ்து” என்று ஆசி வழங்கினார்.
“வணங்கினேன் குருவே, தங்கள் ஆசி என்பாக்கியம்”என்று சொல்லிவிட்டு …..காலாவின் கட்டளையை நிறைவேற்ற கூடல் ஆசையோடு வேகமெடுத்தேன் ஆதாங்க “கடிகாரத்தின் பெரிய முள்ளான “ பெரிய பையன்“.
மிக்க நன்றி
ரசித்தேன்.