காடும் பாடியதோ?
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,769
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,769
அழகிய காடு.
வானளாவிய மரங்கள் தண்ணீர்த் கடாகங்கள்.
ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள்.
எங்கும் எழில் தவழ்கிறது. குன்று போன்ற யானைகள் உலவுகின்றன.
எங்குப் பார்த்தாலும் யானைக் கூட்டம்.
இந்தக் காட்டில் இத்தனை யானைகளா?
அற்புதம்தான்.
எங்கிருந்து வந்தன இத்தனை யானைகள்
இந்தக் காடு ஆய் வள்ளலின் மலையைப் பாடியிருக்குமோ?
ஆயின் மலை தந்த பரிசிலாகத் தான் இருக்க வேண்டும் இந்த யானைகள்!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்