கல்லடி படும் மரம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 69
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தோட்டம் முழுவதும் பனைகள். தோட்டத்துக்கு வேலி இல்லை. மூலையில் ஓர் மாமரம். பழங்காலத்து மரம். சொந்தக்காரன் அம்மரத்தைப் போதுமான பாதுகாப்புப் பண்ணாமல் விட்டுவிட்டான். மாமரம் காய்த்துக்கொத்துக் கொத்தாகத் தொங்குகிறது. காற்றில் ஆடி. அசைந்து, வழியில் போகிறவர்கள் வருகிறவர்களைப் பார்த்து, வாருங்கள் ! வந்து வேண்டிய மட்டும் புசியுங்கள்’ என்று கூவி அழைக்கும் வண்ணமாக ஆடிக்கொண்டிருக்கிறது.
நன்றி கெட்ட மனிதன் என்ன செய்கிறான்? கல்லால் அடிக்கிறான். பழமும், காயும், மரமும் கல்லடி படுகின்றன. என்ன இது ! ‘வா, வா என்று வருந்தி அழைக்கும்போது இப்படிக் கல்லால் அடிக் கிறானே, நன்றி கெட்ட மனிதன். இவனுக்கு அடுத்த ஆண்டு நான் பழம் கொடுக்கமாட்டேன் காய்க்காமல் நின்றுவிடுகிறதா மாமரம் ? மறு வருட மும் காய்க்கத்தானே செய்கிறது. முன்பைவிட நன்கு காய்த்துத் தள்ளுகிறதே! அப்படித்தான் ஐயா, கடவுளும் ! இந்த ஆண்டும் பார்ப்போம்’ என்று கிருபையாய் கிடைத்த நாட்களை ஆதாயப்படுத்திக் கொள்வோம்.
‘காய்த்த மரம் கல்லெறிபடும்’ என்பர். ஆம், கல்லடி, சொல்லடி, வயிற்றடி, பேரிடி என்று வாழ்க் கையில் பல அடிகள் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் பொறுமை தேவை.
எறிபட எறிபடப் பழுத்துத் தள்ளுவதுபோல் நாமும் எரிய எரியப் பிரகாசிக்க வேண்டும். மெழுகு வர்த்தி போன்று உருகி வழிந்தோடி ஒளிகொடுப்போம்.
“கர்த்தர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து …அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவரா”. (மல்கியா.3:3)
“யோவான் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்”. [யோவான் 5:35.]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
