கல்யாணமாம் கல்யாணம்..!
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 2,485
(பழையகதை புதிய பாடல்)

ஊரில் ஆழப் பொந்தொன்றில்
அமைதியாக வாழ்ந்து வந்த
கூரிய பற்கள் கொண்டஇரு
குட்டி எலிகள் இருந்தனவாம்!
அம்மா, அப்பா அவற்றிற்கு
அழகிய பெண்ணொரு சுண்டெலியாம்
சும்மா இல்லை சுண்டெலியும்
எம்மா அழகு எனவியந்து
அம்மா எலியது மகளுக்கு
அழகிய துணையைத் தேடியதாம்!
‘இம்மா நிலத்தில் இல்லாத
இளவரசன் ஒருவனைச் சந்தித்து
மகளுக்கு மணம்நான் முடித்திடுவேன்
மாநிலம் போற்ற நடத்திடுவேன்!’
என்றே எண்ணி மணமகனை
எல்லா இடத்தும் தேடியதாம்!
வட்டச் சூரியன் வடிவழகை
வைத்த கண்வாங்காது பார்த்தஅது
கிட்ட நெருங்கிக் காதுகளில்
கட்டச் சம்மதம் தனைக்கேட்க
சுட்டு எரிக்கும் சூரியனோ
‘பட்டே! என்னையும் மறைக்கின்ற
பலசாலி மேகத்தை நாடென்று
எலியை விரட்டி விட்டதுவாம்!
காற்றில் தவழும் மேகத்தை
கண்டு நெருங்கி என்மகளை
ஏற்றுக் கொள்ளச் சம்மதமா?
என்றே கேட்டது அவ்வெலியும்!
மேகம் தன்னையே விரட்டுகிற
மேன்மை காற்றுக் குண்டதனால்
ஆகச் சிறந்த துணையென்று
அனுப்பி வைத்ததாம் அவ்வெலியை!
காற்றை கேட்க சுவர்வேலி
கட்டடத் திற்குக் கட்டிகொடு
ஆற்றல் மிக்க காற்றினையும்
அணையாய் தடுக்கும் என்றதுவாம்.
வேலி தன்னைத் தான்னெருங்கி
விவாகம் செய்யச் சம்மதமா
எலியென் மகளை எனக்கேட்க
வலியது வேறுண்டு எனச்சொல்ல!
யார தென்று எலிகேட்க
பாரந்த எலியென வேறெலியை
பையக் காட்ட மகளுக்கு
பரிசம் போட்டதாம் அவவெலியும்!
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவனன்று
என்றே ஒப்புக் கொண்டுததுவும்
கண்ணதாசனை வாழ்த்தியதாம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026
திருடாதே! பாப்பா திருடாதே!
வளர்கவி
May 25, 2026
வாக்கும் போக்கும்..!
வளர்கவி
May 13, 2026
