கல்குடாக் கடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,618 
 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்வரம் கலவரம் எண்டு கடலுக்குப் போகாம் “இருந்தீர் கருவாட்டு ஓடரை எப்படி செய்து முடிக்கிறது. என்று கண்ணன் புறுபுறுத்துக் கொண்டிருந்தான். ஓடர் ஒடர் எண்டு இவ்வளவு காலமும் மூட்டை கட்டிக் கட்டி அனுப்பி உங்கட முதுகெலும்பு வளைந்ததுதான் மிச்சம் என்று பதில் கூறினாள் மனைவி கலா ஓமோம் நீ அப்படியும் சொல்லுவா? இப்படியும் சொல்லுவா உண்ட மிகனுக்கு டோ ரியூசனுக்கு ஒரு பாடத்திற்கு ரூ. 12 கொடுக்கணும் தெரியுமா? குந்தித்திருந்தர் வாச்சமாதிரிதான் என்று கூறிக்கொண்டே கையைக் குத்தியபடியே எழும்பினான் கண்ணன்.

அவசர அவசரமாக இரவுச் சாப்பாட்டை பொட்டலங் கட்டினாள் மனைவி. கல்குடா கடற்கரையை நோக்கி – நண்பனோடும் கூலியாளோடும் நடந்தான் கண்ணன்.

நிலவு தானே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் எல்லோருக்கும் நேரக் காவலாளி. நட்சத்திரங்கள் தானே கலங்கரை விளக்கு இல்லாத கல்குடா கடலுக்கு வழிகாட்டி.

அண்மைக் காலமாக சுறா மீனுடைய இறகுகளுக்கு நிரம்ப கிராக்கி ஏற்பட்டு விட்டது. அன்று அலியா போட்டிலே சுறா பிடிக்கத்தான் கண்ணன் சென்றான்.

வெளி மாவட்டங்களிலிருந்து அதே கடலுக்கு அனேகமான மீனவர்கள் றோலர்களில் வந்திருந்தார்கள். கடவுள் படைத்த கடலிலும் பெரும் போட்டி.. எல்லோருமே மிகவும் புதிய உபகரணங்களை வைத்திருந்தார்கள்.

கண்ணனிடம் அவ்வளவு வசதியில்லை 80 அடி றோலர்கள் மத்தியில் கண்ணனின் 30 அடி போட் ஒன்றுதான் கதாநாயகன்.

சுறாக்களுக்கு மனித இரத்தம் மிகவும் சுவையானதாம். ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலும் இரத்த வாடையினை நுகரக் கூடிய சக்தி அவற்றிற்கு இருக்குதாம்.

கண்ணன் சுறா பிடிக்கச் செல்லும் போதெல்லாம் தனது நண்பன் ரகுவே கூடச் செல்வான்.

ஜெய்பூர்கால் பூட்டிய பின்னும் அவன் தைரியமாகவே கண்ணனோடு செல்வான்.

கலாவின் எச்சரிப்பின் மத்தியிலும் ரகு தயங்கவில்லை. கணிசமான கொமிசன் அவனுக்குக் கொடுப்பது கண்ணனின் வழக்கம்.

கூலியாளும் நல்ல அனுபவசாலி. தேவையான இடங்களில் போட்டை லாவகமாகப் திருப்பிச் செலுத்துவதில் நல்ல கெட்டிக்காரன். கைராசியோ என்னவோ கண்ணனுடைய சில தொழிநுட்பமும் அங்கு இருக்கத்தான் செய்தது. ஊரிலே பொது மக்களால் வீதியில் விடப்பட்டிருந்த நாய்க்குட்டிகள் பலவற்றினைப் புதிதாக அறுத்து சுறாக்களுக்கு உணவாகக் கொடுத்து பல சுறாக்களை அன்று வேட்டையாடி விட்டான் கண்ணன்.

பொறுக்க முடியாத போட்டியாளர்களில் ஒருவன் கண்ணனின் வள்ளத்தை நோக்கி வேகமாகத் தனது றோலரைச் செலுத்தினான்.

அனுபசாலியான கண்ணன் நங்கூரத்தை உயர்த்தும்படி கூலியாளரிடம் கூறிய மாத்திரத்தில் தன்னுடைய போட்டின் எஞ்சினை முடுக்கி விட்டான். இன்னும் பத்தே நிமிடத்தில் அவர்கள் நம்மைத் தாக்கத் தொடங்குவர், அவர்களின் றோலர் நமது போட்டினை அடிக்கும் அதேவேளை நாம் றோலருக்குப் பாய வேண்டும் தெரிஞ்சுதா? என்றான் கண்ணன்.

நெருங்கிவிட்டது றோலர். திடிரென எதிர்பாரத ஒரு நிகழ்வு கண்ணனின் போட் எதிர்த்திசையில் திரும்பிய கணத்தில் றோலருக்குள் மூவரும் பாய்ந்தார்கள்.

கண்ணனின் அலியா போட் ஆளில்லாமல் போய்க் கொண்டே இருந்தது. கிடைத்த உபகரணங்கள் ஆயுதங்களாயின் இப்பொழுது கண்ணனுடைய கட்சியிடம் றோலர் சிக்கிவிட்டது.

சுறாக்கடலில் அப்போது எதிரிகளின் உடல்கள் வீசப்பட்டிருக்கலாம். ஆனாலும் தனது பிள்ளையின் எதிர்காலம் கருதி கண்ணன் அப்படிச் செய்யவில்லை. போட்டியாளர்களை உயிரோடு பொலிசில் ஒப்படைத்தான். பாவம் அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று, ஆளில்லா அலியா போட்டும் ரோந்து சென்ற கடற்படையினரால் அதே பொலிசில் ஒப்படைக்கப்பட்டது.

நடைமுறையில் நல்ல பொலிஸ் இயங்க முடியாதல்லவா? யதார்த்தவாதி பொதுசன விரோதி என்பார்களே! கண்ணனின் கட்சிக்கு அரசியல் பலம் இல்லை. அதுவும் மட்டக்களப்பில் ரகுவின் ஜெய்பூர்க்கால், கூலியாளனின் பலவீனம் ஆகியன கண்ணனைக் கம்பி எண்ண வைத்தன.

கலா சல்லி சுட்டாள், மகன் மாவீரனானான், கண்ணன் வருவானா?

– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை

மு.தவராஜா பிறப்பு : 1950 - 03 - 18தாய் - திருமதி. வள்ளியம்மைதந்தை : திரு. முருகேசு பிறந்த இடம் : பேத்தாழை வாழைச்சேனை.ஆரம்பக் கல்வி : மட் /வாழைச்சேனை, இந்துக்கல்லூரி இடைநிலைக் கல்வியை மட் /வந்தாறு முலை மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றதின் பின்னர் வாழைச்சேனை காதிதாலையில் 14 வருடங்கள் தொழிலில் ஈடுபட்டு, 1986 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமானி, வியாபார முகாமைத்துவ சிறப்புப் பட்டதாரி யானார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *