கருங்கல்லும் கூழாங்கல்லும்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 3,159 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(திருக்குறள் கதைப்பாடல்)

ஒறுத்தார்க்கு ஒருநாள இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்!

ஆற்றங்கரையின் ஓரத்தில்
அந்தி சாயும் நேரத்தில்
வீற்றி ருந்த சிறுவர்கள்
வீடு கட்டி களித்தனர்!

சின்னஞ் சிறிய சிறுவரின்
சிந்தை கவர்ந்த கற்களை
ஒண்ணு ஒண்ணாய்ச் சேர்த்தவர்
உவகை யோடு பார்த்ததனர்!

சேர்த்த கல்லில் சிறுசிறு
கூழாங் கற்கள் இருந்தன
பார்க்க நல்ல பளபளக்கும்
பளிங்கு போல மிளிர்ந்தன!

மற்ற கற்கள் அப்படி
மனதைக் கவர வில்லையாம்
குற்ற மென்று அவற்றையே
கொதித்துத் தூர வீசினர்!

சென்று விழுந்த கற்களும்
ஒன்று சேர்ந்து நெருங்கியே
கூழாங்கற்கள தம்மிடம்
குனிந்து பணிந்து கேட்டன

அழகு மிக்க வடிவில்நீர்
ஆன துதான் எப்படி?
சொல்லக் கேட்க, கற்களும்
சொன்ன செய்தி விந்தையாம்!

மலையில் பெய்த பெருமழை
துளைத்த போதும் துன்பத்தால்
களைத்தி டாது தாங்கினோம்!
துரத்துமிடம் ஓடினோம்

என்ன புரட்டு புரட்டினும்
இன்னல் தந்து உருட்டினும்
ஒண்ணும் செய்யவில்லையாம்
இன்னல் யாவும் தாங்கினோம்!.

அந்த பொறுமைத் தன்மையால்
இந்தப் பெருமை வந்தது!
இன்று பளிங்கு போலவே
இலங்குகிறோம் என்றது!!

துன்பம் கண்டு துவளுவோர்
தொடுவதில்லை துருவத்தை
இன்பம் ஒன்று மட்டுமே
இல்லை உலக வாழ்வது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

1 thought on “கருங்கல்லும் கூழாங்கல்லும்!

  1. Hello Sir,
    I am extremely surprised that how you write everyday and salute your way of writing.
    It makes me remeber Mr .Ruskin Bond even at his 92 sge he says,I like to more writing.
    Wonderful and look forward to see more.
    Vidya VijayKumar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *