கடவுளுடைய பிள்ளைகள்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 76
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தேசங்கள்தோறும் பாஷைகள் வேறு. மக்கள் பேசும் மொழியிலிருந்து ‘இன்ன நாட்டார்’ என்று அறிந்துகொள்ளலாம். பேதுருவைப் பார்த்து “உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது,” என்றார்கள்.
பிள்ளைகளுக்கு ஒரேமாதிரி உடுப்பு உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை போட்டு முகத்தை மூடி பெற்றோர் களிடம் ‘உங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடியுங்கள்’ என்று சொன்னால் கண்டுபிடிக்க முடியாதுதான். ஆனால் பேச்சைப்பார்த்து, அல்லது நடையைப் பார்த்துக் கண்டு பிடித்து விடலாம்.
ஆண்டவருடைய பிள்ளைகள் இன்னாரென்று அவர்கள் பேச்சிலிருந்து கண்டு கொள்ளலாம்.
“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் கூக்குரலும் தூஷண்ணமும் மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது” என்றார் பவுல்.
தேவனுடைய பிள்ளைகள் யாரென்று அவர்களின் பேச்சு வெளிப்படுத்தி விடும்.
“சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள்”. [ஆதியாகமம் 27:22]
“பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள்”. [மாற்கு 12:13]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
