கடலக்காயி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு பெரிய பண்ணயாரு இருந்தாரு. அதே ஊர்ல, புதுசா, ஒரு கொசவன் (குயவன்) வந்து, அதாஞ் சட்டி – பான செய்றவரு குடி இருந்தாரு. இவரு சட்டி பான செய்யுற எடத்லஎப்பயும் பத்து பேரு கூடி இருப்பாங்க. இருந்துக்கிட்டு, எதயாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. கொசவருக்கு, பேச்சுக்குப் பேச்சும் நடக்கும் – வேலக்கி வேலயும் ஓடும்.

அப்டி இருக்கயில, ஒருநா வெதைக்கிறது பத்திப் பேச்சு வந்திச்சு. ஒவ்வொரு ஆளுங்களும், நீர் பத்து மொடா வெதச்சே, நா ஆறு மொடா வெதச்சே, நா நாலு மொடா வெதச்சேண்டு, அவங்கவங்க, வெதச்சதப் பத்திப் பேசிக்கிட்டிருந்தாங்க. 

கொசவருக்கும் ஒரு ஆச, நம்மளும் வெதைக்கணும், இவங்க கூடப் பேசும்போது, நானும் அஞ்சு மொடா வெதச்சேண்டு சொல்லணும்ண்டு நெனச்சுக்கிட்டு, நே…ரா… பெரிய பண்ணயாருகிட்டப்போயி, காணி நெலம் வேணும்ண்டு கொசவரு கேட்டாரு. சரிண்ட்டு, பெரிய பண்ணயாரு ரெண்டு காணி நெலங் குடுத்தாரு. வீட்டுக்கு வந்து, அஞ்சு பானைகள் நொறுக்கி, நெலத்துல கொண்டு போயி வெதச்சுட்டு வந்துட்டாரு. மொடா என்பதை அளவு என்று கொள்ளாமல் பானை என்று கொண்டார்.) 

மூணு நாக் கழிச்சுப் போயிப் பாக்கயில, வெறும் அருகம் புல்லா மொளச்சிருக்கு. மொடா, இப்பத்தா மொளைக்குதுண்டு நெனச்சுக்கிட்டு, வீட்ல வேலயப் பாக்குறாரு. பெறகு, நாலுநாக் கழிச்சுப் போயி பாத்தாரு. புல்லு நல்லா மொளச்சிருந்திருச்சு. மொடா, நல்லா மொளச்சிருச்சிண்டு, திருப்தியா வீட்டுக்குப் போயிட்டாரு. 

எட்டாம் நா, போயிப் பாக்கயில, தேவலோகத்து ஆனைக வந்து, மேஞ்ச தடம், நெலம் பூறாவும் இருக்குது. ஆனத் தடம் பெரிசா இருக்கும்ல்ல. ஆமா! அத இவரு ஒரலுத் தடம்ண்டு நெனச்சு, ஊருல இருக்ற ஒரலுகதா (உரல்) வந்து மேயுதுண்ட்டு, நேரா ஊருக்குள்ள போனாரு. நம்ம என்னா பாடுபட்டு மொடாவ வெதச்சிருக்கோம். இந்த ஊர்ல இருக்ற ஒரலுக வந்து, இப்டி மேஞ்சு அழிக்குதேண்டு, வருத்தப்பட்டு, ஊருக்குள்ள வந்து நேரா…. நாட்டாமக்காரு வீட்டுக்குப் போறாரு. 

போயி – நாட்டாம!! நாட்டாம!! நா பெரிய பண்ணயாருகிட்ட ரெண்டு காணி நெலம் வாங்கி, அஞ்சு மொடா வெதச்சிருக்கே. அத இந்த ஊரு ஒரலுக போயி, மெஞ்சிட்டு வந்திருச்சு. வந்து, தடத்தப் பாருண்டு, கூட்டிக்கிட்டுப் போனாரு. நாட்டாமகாரு போயிப் பாத்துட்டு, ஆமா அது உம்மண்டு, ஊருல இருக்ற ஒரலுகளயெல்லாம் புடுச்சுக் கட்டிப் போடச் சொன்னாரு நாட்டாம். ஊரு ஆளுங்களும், வீட்ல இருக்ற ஓரலுகளப் புடுச்சுக் கட்டிப் போட்டுட்டாங்க. 

மறுநாக் காலைல போயி காட்டச் சுத்திப் பாத்தா வெறும் ஆனத் தடமா, வட்ட வட்டமா இருக்கு. நம்ம ஊரு ஒரலுகளத்தா கட்டிப் போட்டுட்டோமே, பெறகு எப்டி ஒரலு வந்து மேயுது? ஒரு வேள அசலூரு ஒரலுக வருதோண்டு நெனச்சு, காவலுக்குப் போயி படுத்துக் கெடக்காரு. 

படுத்துக் கெடக்கயில, தேவலோகத்து ஆனைக வந்து மேயுதுக. பையாப் போயி, ஒரு ஆனயோட வாலப்(வால்) புடுச்சுக்கிட்டாரு. புடிக்கவும், ஆன, மேல பறந்து,தேவலோகத்துக்குக் கொண்டுகிட்டுப் போகுது. அங்க, தேவேந்திரன் இருக்கர். பாவமண்டு சொல்லி, கடலக்காயப் போல, நெறயாத் தங்கத்தக் குடுத்து, இவனக் கீழ கொண்டு போயி விடச் சொல்லி, தேவேந்திர சொல்றாரு. சொல்லவும் ஆனைக, கீழ கொண்டு வந்து விட்டுருச்சு. விடவும், நே….ரா…. வீட்டுக்கு வந்துட்டாரு. 

வந்து, தேவலோகத்ல கடலக்காயி குடுத்தாங்க. கடிச்சு உடைக்க முடியல. எனக்கு வறுத்துக் எரக்கி குடுண்டு, பொண்டாட்டிகிட்டச் சொன்னாரு. அவ, ஓட்டக் காய வச்சு, வருத்தா, கடலக்காயி பொறியாமல் உருகிப் போச்சு. வக்யவும், கெட்டியா இருகிப் போச்சு பிச்சுப்-பிச்சுப் பாத்தாங்க. பிக்ய முடியல. ஓட்டோட தூக்கிட்டுப் போயி, குப்பையில கொட்டிட்டாங்க. குப்பையில கெடந்த, கடலக்காய, ஆசாரி மகன், கரிக்கட்ட பெறக்க வந்தவ், எடுத்திட்டுப் போயி, அப்பங்கிட்டக் குடுத்திட்டா. ஆசாரி வாங்கிப் பாத்திட்டு, எங்க கெடந்திச்சுண்டு கேட்டு, உம்ம தெரிஞ்சுகிட்டு, கொசவர புடிக்கிறாரு. ஒண்ணுந் தெரியாத கொசவரு, ஆசாரியக் கூட்டிக்கிட்டு, காட்டுக்குப் போறாரு. போயி -, ரெண்டு வேரும் படுத்துக் கெடக்காங்க. படுத்துக் கெடக்கயில, ஆனைக வந்து மேயுதுக. மேயவும், ஆசாரியக் கூப்ட்டு, ஆசாரி!! ஆசாரி!! ஆனைக வந்திருச்சு. நா மொதல்ல வாலப் புடுக்கிறே. நீ எங்காலப் புடுச்சுக்கிறணும்ண்டு சொல்றாரு. ஆசாரி சரிண்ட்டா. ஆசாரிப்பய இல்ல, விடுவானா? 

கொசவரு போயி, வாலப் புடுச்சாரு. ஆசாரி போயி, கொசவரோட காலப் புடுச்சுக்கிட்டா. ரெண்டு வேரும் மேல போறாங்க. தேவலோகத்துக்கு முக்கா வாசித் தூரம் போகயில, ஆசாரி கேட்டா! எவ்வளவு கடலக்காயி தருவாங்கண்டு. கேக்கவும், கொசவரு, சும்மா இருக்கமாட்டமா, ஆனயோட வால் விட்டுட்டு, இந்தா, இவ்வளவுண்டு; ரெண்டு கையையும் விரிச்சுக் காட்னா. கைய விடவும், ரெண்டு வேரும் கீழ விழுந்து செத்துப் போனாங்களாம், சாகாம இருப்பாங்களா? பாவம்! கொசவரு கூடப் போனது யாரு? கம்மாளப் பய இல்ல. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *