ஓசித் தண்டட்டி




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – புதுக் கல்யாணம் முடிச்சவ், ஒருத்த இருந்தர். கலியாணம் முடுஞ்சு, தனியா குடித்தனம் நடத்துறர். பொண்டாட்டி இருக்காளே, அவ எப்பயும் நகநட்டு போட்டுக்கிட்டிருக்கணும்ண்டு நெனக்கிறவ. நகநட்டு போட்டுக்கிட்டு சொந்தக்காரங்க ஊருக்கெலாம் போகணும்ண்டு நெனக்கிறா. இருந்தாத்தான போடுறதுக்கு இல்லயில, வாங்கணும்ண்டா புருசங்கிட்ட சொத்துபத்து இல்ல.
இப்டி ஆசயோட இருக்கயில, பக்கத்து ஊர்ல, ஒரு திருவிழா நடக்குது. நம்ம மாரியம்மங்கோயிலு திருவி ழா போல வச்சுக்குங்க.
நடக்கயில, அந்த ஊருச் சனங்கள்ளாம் திருவி ழாவுக்குப் போறாங்க. அப்ப, இவளும் போகணும்ண்டு நெனக்கிறா.
புருசனுக்குத் தெரியாம, அடுத்த வீட்டுக் கெழவி கிட்டப் போயி, தண்டட்டிய ஓசி வாங்கிப் போட்டுக்கிட்டு, புருசனக் கேக்காம, திருவழாவுக்குப் போயிட்டா. புருச் உழுகப் போயிட்டு, பொழுது விழுக வந்தர். எம் பொண்டாட்டிய எங்கண்டு கேக்கவும், அடுத்த வீட்டுக் கெழவி, எங்கிட்ட, தண்டட்டிய வாங்கிப் போட்டுக்கிட்டு, திருவி ழாவுக்குப் போயிட்டாண்டு, கெழவி சொன்னா.
இவ, திருவழாவ்ல, ஓசித் தண்டாட்டிய வாங்கிப் போட்டுக்கிட்டு. அங்கிட்டும் இங்கிட்டும் அலச்சுக்கிட்டுத் திரியிறா.
இங்க, இவ், ஓசித் தண்டட்டிய வாங்கிப் போட்டுக்கிட்டு போயிருக்கா. எங்கிட்டாச்சும் ஒரங்கிட்டாண்டா, தண்டட்டிய அவுத்துக்கிட்டுப் போயிருவாங்கண்டு, அவனும், மாடுகளக் கெட்டி வச்சுட்டு, கதவாலப் பூட்டிட்டு, கெழவி கிட்டச் சொல்லிட்டு, திருவி ழாவுக்குப் போறா.
போயிப் பாத்தா, அம்மா! அலச்சுக்கிட்டுத், திரிஞ்சுட்டு ஒரு எடத்ல படுத்து, நல்லா கொரட்ட விட்டு ஒரங்கிக்கிட்டிருக்கா. இவா பாத்தர். ரெண்டு அமுக்குப் பூட்ட வாங்குனர். பையாப் பக்கத்ல போயி, தண்டட்டியக் கழத்திக்கிட்டு, காதுல, அமுக்குப் பூட்டப் போட்டு விட்டுட்டு. தண்டட்டியக் கொண்டுகிட்டு வீட்டுக்கு வந்திட்டா.
நல்லா ஒரங்கி எந்திருச்சவ, காதுல தண்டட்டிதர் கெடக்குண்ட்டு அலச்சு அலச்சுப் பேசுறா. இவ, பேசயில பாத்தவங்க எல்லாஞ் சிரிக்குறாங்க. மத்தவங்க சிரிக்கச் சிரிக்க, இவ ரொம்ப அலைக்குறா. அலச்ச அலயில, பூட்டு அடுச்சு, ரெண்டு கன்னமும் இந்தந் தண்டி – இந்தந் தண்டி வீங்கிப் போயிருக்கு.
பாத்த பொம்பளைகள்ல ஒருத்தி என்னாடி, அமுக்குப் பூட்டப் போட்டுக்கிட்டு, இந்த அல அலைக்கிறண்டு கேட்டா. கேக்கவும், காதத் தொட்டுப் பாத்தா. தண்டாட்டிக்கு பதிலா அமுக்குப் பூட்டுப் போட்டிருக்கு. பதறிப் போயிட்டா.
புருசங்கிட்ட என்ன சொல்றது? கெழவி கிட்ட எதக் குடுக்குறதுண்டு நெனச்சுக்கிட்டு, அமுக்குப் பூட்டயுங் கழத்தாம் ட்டுக்கு ஓடியாந்தா. வீட்ல, கெழவி நிண்டுகிட்டிருக்கா. இவ, வீ ட்டுக்குள்ள வந்தும் வரங்குள்ள, J… இன்னாரு பொண்டாட்டி! தண்டட்டியக் குடு, எந்தங்கச்சி வீட்டுக்குப் போகணும்ண்டு கேக்குறா.
கேக்கவும், பையாப் புருசங்கிட்ட வந்து, கெழவி கிட்ட ஓசித் தண்டட்டி வாங்கிப் போட்டுக்கிட்டுத் திருவழாவுக்குப் போனே. எவனோ தண்டட்டியக் கழத்திக்கிட்டு, அமுக்குப் பூட்டப் போட்டு விட்டுட்டாண்டு சொன்னா. சொல்லவும், அட கண்டாரோளி முண்ட! அடுத்த வீட்டுக் கோழி முட்ட, அம்மிய ஒடைக்கும்ண்டு ஒனக்குத் தெரியாதாண்டு, வெளக்க மாத்த எடுத்து, ரெண்டு போடு போட்டர். போடவும், அதயும் தாங்கிக்கிட்டுப் பேசாம இருந்தா. தப்புச் செஞ்சுட்டா, எப்டிப் பேச முடியும்?
அப்பக் கெழவி, இங்க துடிச்சுக்கிட்டிருக்கா. தண்டட்டியக் குடுறி, நர் தங்கச்சி வீ ட்டுக்குப் போகணும். ரெண்டு பவுனுக்குச் செஞ்ச தண்டட்டி, இப்டி தொலச்சிட்டு வந்திருக்கியே, ஒனக்கு எம்புட்டுத் தைரியம்ண்டு புடுச்சுப் பேசுறா.
அப்ப, பையா புருசங்கிட்ட, அந்தக் கோம்பக் காட்டவி த்து, கெழவிக்குக் குடுத்துருங்கண்டு சொல்றா. என்னாடி, கல்யாணம் முடுஞ்சு மூணு மாசங்கூட ஆகல. அதுக்குள்ள, காட்ட விக்கச் சொல்றியே அதெல்லாம் முடியாதுண்றா.
இங்க, கெழவி வேற நெருக்கிக்கிட்டிருக்கா. ரொம்ப அவமானப்பட்டுப் போயி, பாவமா புருசனப் பாத்தா. அவனுக்கு எரக்கம் வந்திருச்சு. பெறகு உம்மயச் சொல்லி, இதுனாலதா அடுத்தவங்க பொருள, ஓசி வாங்கக் கூடாதுண்றதுண்டு, புத்திமதிகளச் சொல்லவும், அவளும், இப்ப இருந்து நாந் திருந்திட்டேண்டு சொன்னா.
கெழவி கிட்ட, கழத்தி வச்சிருந்த நகயக் குடுத்திட்டு, சந்தோசமா வாந்தாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.