ஒற்றைகால் காக்கைக்கு ஒரேயொரு கால்
கதையாசிரியர்: இடலாக்குடி ஹஸன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 84
(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காதைக்கிழித்துத் தொங்கப் போடும் சத்தம். பள்ளியின் மினாரா ஒலிபெருக்கிகள் பாங்கு அழைத்து ஓய்ந்தன. சாலைகளை அடையாளங்காட்டும் பெட்டிகளுக்குள் இருந்து கொண்டு, மனிதர்கள் சாலைகளைத் தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தனர்.
திடீரென அமீனின் செல்போனின் நாகூர் அனிபா இறைவனிடம் கையேந்தச்சொல்லி அலறினார்.
“என்ன..பேசுறதெ பேசிட்டு வை”
“யேங் வரலெ”
“இந்த மனுஷன் ஒரு எழவும் சொல்லமாட்டாரு, அவரு சொன்னாத்தானே வரமுடியும்… சரி… வைக்கட்டா”. அமீனின் செல்போன் இறந்து விழுந்தது.
ஒப்பனைகளோடு வெளியே கிளம்பும் காதர் தலையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். பண்டு ஆடுன ஆட்டமெல்லாம் தெரியாதா?இப்போ.. நல்ல பிள்ளை வேஷம் போட்டுக்கிட்டு அலையுறான் மனுஷன். பாங்கு சொல்றேன் பேர்வழின்னு மனுஷன் அஞ்சு வேளையும் நீட்டி முழக்கிச் சத்தம் போட்டு பாங்கு சொல்லி முடிச்சா ஊரு இயங்குவதற்குச் சில வினாடிகள் பிடிக்கும். அடிக்கடி கவுட்டுக் கிடையில் கையை விட்டுப் பிசைந்து கொண்டே இருப்பான் காதர். எதுக்கு வீண் சிரமம்? என்ற எண்ணமோ என்னவோ ஜட்டியோ கோமணமோ அணிவதில்லை. காதருக்கு அதுபற்றிய கவலையுமில்லை. பெண்களைக் கண்டால் பிரேக் போட்டு விடுவான். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவர்களிடம் நெருங்கி நின்று பேசிக் கொண்டேயிருப்பான்.
“பட்டினிகிடந்து சாவுலே… பன்னிக்குப் பெறந்தவலே” என்று அமீன் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தனர் சிலர். பட்டினி கிடந்தாவதுதான் பரம யோக்யன் என்று காண்பிக்க வேண்டிய கட்டாயம் அமீனுக்கு ஏற்பட்டுவிட்டது. பூதங்களை அடைத்து வைத்து விட்டு அதனருகில் குழந்தைகளை விளையாட விட்டனர்; அவனை எதிர்த்தவர்கள். திறந்து விட்டுப் பாருங்கள்… பூதங்களை. அவை உங்கள் குழந்தைகளையும் பூதங்களாக்கிவிடும் என்றான் அமீன். இதைக் கேட்டதும் மண்ணை அளைந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பூதங்களாக உருவெடுத்து அடைந்து கொள்ள குப்பிகளைத் தேடின. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள காவலுக்கு நின்றவர்கள் “பூதத்துக்கு காதுகள் இல்லை. குப்பிகளுக்குள் அடைபட்ட பூதங்கள் இனி வெளியே வரமுடியாது” என்றனர். தூரத்தில் தெரு, வரைந்து வைத்த ஓவியங்கள் சிதைவுற்றுக் கிடந்தன. காதர் அவமானங்களை, உடல் ரீதியான கூற்றுகள் சிதைவுற்றிருப்பதைத் தேடி நகர்த்த பழகிக் கொண்டான். காதரின் மனைவியின் காவலாளிகள் வேர்பிடித்து மேய்ந்து கொண்டிருந்த காடு தீக்கிரையாகிப் போனது. காவலாளிகளின் முகவரியைத் தேடிப்பிடித்துக் கரித்திட்டு க ள் எதிர்கொள்ளும் மூச்சுக் காற்று நொறுங்கிக் கிடந்ததைப் பற்றி அமீன் கேள்விப் பட்டிருந்தான். அவனுக்குள் அதுபற்றிய நினைவு திரும்பவும் நிகழ வேண்டாம் என்று எண்ணியிருந்ததால் அமீன் அதைப்பற்றிப் பேசுவதை அறவே வெறுத்தான்.
அமீனை சலிப்படையச் செய்யும் அத்தாட்சிகள் பிடரியைச் சிலிர்த்துவிட்டு வியர்வையில் குளித்தன. காலங்காலமாக மகிழ்ச்சித் தூண்டல் இல்லாமல் ஆசுவாசமாய் அவித்துத் தின்னு சொரணையற்றுக் கிடக்கும் நாட்களில் நவீன ப ட்டி ய ல் க ள் புறந்தள்ளப்பட்டன. காய்ந்து போன மண்முகங்களின் வரலாற்றைப் பேச நாதியற்றுப் போனதும் அமீனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.
அமீன் தீராத மனக்குழப்பத்திலிருந்தான். அதைப் போக்கிக் கொள்ள பள்ளியில் தூங்கியெழுவதை வழக்கமாக்கிக் கொண்டான். அழகுடன் உயரமாக நீண்டிருக்கும் மினாராக்கள் எதனுள்ளும் நுழைந்துவிட முடியாத நிலையிலிருந்தாலும், பெரும் பிளவுகளுக்குள் புதர்களாய் மறைந்து ஒளிச்சுக் கண்டு விளையாடும் அந்தம் தெரியாத நினைவுகளுக்குள் நடுச்சாமங்களைப் புணர்ந்து காற்றில் மிதந்து கொண்டிருந்தன. உயிர் மறைந்து விழுந்த மரங்களின் புகைப்படக் காட்சிகளை உண்டாக்கும் நிலத்தில் மினாராவின் உயரத்துக்கு ஏற்ற மன இயல்புகளுக்கு ஏற்ற இறக்கங்களை அறியாத மண்ணினைப் பிரித்துப்போட்டு, சோறு விளம்பிக் கொண்டிருந்தனர் சமுதாயக் காவலர்கள்.
அமீனின் மனக்குமுறல்களில் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த தூக்குப் போசியில் முடங்கிய சுன்னத்துகளும், பர்லுகளும், வாஜிபுகளும் உறவுகளைப் பிரித்துச் சித்திரம் வரைந்தன.
அமீனுக்கான சொந்தங்கள் உடலின் நாற்றத்தில் பங்கு கொள்ளவில்லை என்ற கவலை அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை. அதனால் பொருள்களைச் சொந்தம் கொண்டாட தேவை ல்லை என்று எண்ணிருந்த வேளை நண்பர்களின் வற்புறுத்தலில் சிறைக்குள் அடைபட்டு போனான். அவர்களின் உணவு பரிமாற்றங்களில் வெளி உலகைக் காணாத வாழ்கையை வெறுத்தான். அமீனின் நிராசைகள் பிரச்சினைகளைக் குவித்து வைத்துக்கொண்டு காலங்கடந்து தாக்குதலைத் தொடர கட்டவிழ்த்து விடப்பட்டன. அவன் மனத்தின் ஊனம் உடலில் ஓடியோடி அலைக்கழித்தது. உடல் உறுப்புகள் இடம் மாறிக் கொண்டிருந்தன. கால்கள் பிடித்திழுத்து கைகள் நடந்து பேச்சொலிகளில் பேய்மொழி கலந்து மணந்தது. அவன் குப்பிகளில் அடைபட்டுக் கொண்டிருந்த குழந்தைகளோடு பேச்சுவார்த்தை நடத்தினான். அவர்கள் பிடிவாதம் பிடித்து அவனிடமிருந்து பேய்மொழிகளைப் பிடுங்கிக்கொண்டு வேகமாகப் குப்பிகளில் அடைபட்டுப் போயினர்.
கறிவேப்பிலைப் பழங்களாய்ச் சிதறிக் கிடந்த குப்பிகளில், மரத்து மூட்டில் முலைகள் பிதுங்கிக் கிடந்த ஆடுகளின் நிழலுருக்கள் நெடுந்தொலைவு செல்ல காத்துக்கிடந்தன. குழந்தைகளின் குப்பிகள் மழைக்காலத்துக்காகத் தவமிருக்கத் தொடங்கின. மரத்தைச் சுற்றி வேலியமைத்து உரூஸ் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர் சிலர். மரத்து மூட்டின் ஆட்டுப்புழுக்கை நாற்றமடிக்கும் மண்ணில் மௌலூது பாடல்களின் நிகழ்கால சினிமா மெட்டுகள் கல்தூண்களில் கிழிந்து தொங்கின. நாடோடிப் போராட்டங்களையும் கலக உணர்வுகளை இனியொரு இலக்கியத்திற்கான தத்துவ உறவுகளில் கொண்டு வரும் வெளிச்சத்தையும் பெரும்பான்மையினரின் நேர்ச்சைகளில் சமாதியாக்கின மௌலூது பாடல்கள். மய்யித்தாங் கொல்லையில் அவர்களை நிறுத்தி, அடிமைகளாக உலவவிட்டு மனித நேயங்களை யதார்த்தம் நீக்கிக் காயடித்து உரூஸ் மரத்தின் மண்ணை ஈரமாக்கினர். மீண்டும் புழுக்கை நாற்றமடித்தது அந்த மண். மண்ணை முகர்ந்து கொண்டு உணர்வின் உச்சங்களைச் சுமந்து திரியும் ஆடுகள் நிறத்தை உமிழ்ந்து தூரத்தில் படுத்துக்கிடந்தன. சிறைக்குள் அடைபட்ட குழந்தைகளின் முகங்களில் பச்சை வண்ணத்தின் பரிதாபங்கள், மதமதப்புடன் உறங்கிக்கிடந்தன. பள்ளிக்கூட சுவர்களில் நோய்கள் பதுங்கிக் கிடந்து குழந்தைகளைப் பயமுறுத்தின.
நீர்வழியின் அப்புறத்தில் உலகம் காணாமல் போய்விட்டதாக நம்பிக் கொண்டிருந்த குழந்தைகளின் நாட்களில் எல்லோர்க்குமான “சரி”களை அமீன் சந்தேகித்தான். மனநோய்கள் பற்றி ஆய்ந்து கொண்டிருந்த அமீனின் தொட்டிலில், அவனைக் கடந்து சென்ற காற்றின் சாம்பிராணிப் புகையில் முரட்டுக் கைகள் கையேந்திக்கிடந்ததை ஓர்த்தான். பலம் நிறைந்த முரட்டுக் கரங்களிலிருந்து விடுபட்ட பிச்சிப்பூ மொட்டுகள் தரையில் விழுந்து சிலிர்த்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தான். அவற்றை மிதித்துப் போட்டுவிட்டுப் போன முரட்டுக்கைகளின் கால்கள் மௌலூது பாடல்களின் முரண்கள் பேசி நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தன. உரூஸ் மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கம்பளிப் பூச்சிகள், தாங்கள் ஊர்ந்து சென்ற இலைகளைப் பற்றி விலாவாரியாக விளக்கி மரத்தோடு பாடம் நடத்திக் கொண்டிருந்தன. இலைகளைச் சுமந்து திரியும் அவற்றின் திமிர்த்தனங்கள் உடல்களின் பலத்தை நினைத்துப் பார்க்க மறுத்தன. உரூஸ் நாட்களில் வாய்கள் கட்டுப்பாட்டை இழந்து மரத்து மூட்டில் வாந்தியெடுத்து வைத்தன. சுற்றுப்புறங்களில் மேய்ந்து கொண்டிருந்த பக்தர்கள் சில வாரங்கள் வரை மீன்களை நிராகரித்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளை எதிர்பார்த்துக் குழம்பிப்போன அமீனின் வார்த்தைகள் செயலற்றுக் கூச்சமில்லாமல் அரங்கிற்குள் நிர்வாணமாய் நுழைந்தன. அவற்றின் அவமானங்கள் மனித உரிமைகள் குறித்து நிறை விடுவித்தல்களைச் செய்தது. அமீன் இரவுகளை உடைத்துவீட்டுக்குள் போட்டு வைத்தான். ஒவ்வொரு நாளும் பகலில் தெருக்கோடியில் சும்மாவே நின்று கொண்டிருப்பதும் போவோர் வருவோரை ஒரு காரணமுமில்லாமல் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு வேலையாகிப் போனது.
அரிக்கன் விளக்கு, சுவரில் தன்னை ஆசுவாசப்படுத்தி அசையாமல் கிடந்தது. அதிலிருந்து புறப்பட்ட சின்னச்சின்ன கதைகள் தெருவில் மேய்ந்து திரிய ஆடுகள் இல்லை. அவற்றின் பிட்டங்கள் ருசிபார்க்கப்பட்டுவிட்டன. அமீனின் உம்மா இறைச்சி வாங்கி வர அவனிடம் சொல்லும் போது “வாப்பா… பாத்து வாங்குலே. பொட்டாட்டுக் கறியெ தந்து ஏமாத்திப் புடுவானுவோ… கொட்டெ இருக்குதான்னு பாத்து நின்னு வாங்கிட்டுவா…” என்பாள். உம்மா சொல்லும் பொட்டாட்டுக்கறி என்பதற்கு “புருவை” என்று கசாப்புக்கடைக்காரன் பெயர் வைத்திருக்கான். கிடா இறைச்சியைவிட “புருவை” இறைச்சிதான் ருசியா இருக்குமாம். நண்பன் கபீரு சொல்லக் கேள்விப் பட்டிருந்தான். ஆணுமில்லாத பெண்ணுமில்லாத ஆட்டைத்தான் புருவை என்ற சொல்வாங்களாம். அப்போ அலி ஆடு. அலிஆட்டுக்குக் கொட்டையுமிருக்காது; மடியுமிருக்காது. கறி மட்டும் ருசியாயிருக்கும். அல்லாவே அதுகளுக்குக் காயடிச்சு விட்டுட்டானோ? பொட்டாட்டுக்கு, கிடா ஆட்டின் கொட்டைகளை வைத்து தைத்துக் கிடா இறைச்சின்னு வித்துப் போடுவானுகளாம்; கசாப்புக் கடைக்காரன்கள். உம்மா எச்சரித்து அனுப்பினாள். அவன் குழந்தைகளை விடுவிக்கக் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. கசாப்புக்கடையில் ஊசிக்கு என்ன வேலை? எப்படி ஊசியும் நூலும் வைத்துத் தைக்க முடியும்! குப்பிக்குள் அடைபட்ட குழந்தைகள் துடிப்பதன் காரணம் புரிந்து போனது. உம்மாவும், வாப்பாவும் பண்ணுகிற நெருக்கடிகள் குப்பிகளை விசாலமாக்கி வைத்ததை அமீன் உணர்ந்து கொண்டான். வயல்களின் தண்ணீர் வரத்து கால்கள் முறுக்கப்பட்டுக் கசாப்புக் கடைக்காரனின் கொ க்கி க ளி ல் தொங்கவிடப்பட்டிருந்தன. தீப்பெட்டி அறைகளில் மனிதர்களும் ஆடுகளும் அடைபட்டுக்கிடக்கும் நகர வாழ்க்கையில் அமீன் தீக்குச்சியாகி விட்டான். அவனுடைய கட்சித் தலைவியைப் புகழ்ந்து வார்த்தைகளை ஒட்டி வைத்து சாலையோரத்தில் நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அமீனின் மொழி அவனைக்
காட்டிக்கொடுக்கிறது. அலங்கார மொழியைத் தேடிச் சொற்கள் ஆளாய்ப் பறக்கின்றன. சொற்கள் மீது ஜனநாயகம் என்ற கத்தி வீசப்படுவதை குழந்தைகள், குப்பிக்குள் கிடப்பதைக் காரணம் காட்டி அமீன் விளக்கினான். குழந்தைகள் குப்பிக்குள் தங்களின் செல்பேசிகள் மூலம் உரையாடிக் கொள்கிறார்கள். இரவும் பகலும் வந்து போகின்றன.
அமீன் உக்கிரங்களின் ஓவியப்புயலுக்குள் தள்ளப்பட்டான். புயலின் வீரியத்திலிருந்து விடுபடாமலிருக்க சொந்தங்களுக்கு எதிரான விடுதலையின் குறியீட்டைத் தேர்வு செய்து வைத்திருந்தான். அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தவைகள் ஒவ்வொன்றாக வழியில் அம்போவென்று விட்டுவிட்டு நடையைக் கட்டிவிட்டன. பயணங்களைத் தடுத்து நிறுத்த புறப்பட்டவைகளைச் சுட்டிக்காட்டிப் பட்டியலிட்ட குழந்தைகளின் அடைப்பு நீக்கப்பட்ட குப்பிகள் அடுத்தடுத்த பிரச்சினைகளில் பங்கெடுக்க முடியாதனவாய் அவனைத் திணற வைத்தன. அமீனின் வலிகள் அதிகப்பட்டுக் கொண்டிருந்தன. சின்னச்சின்ன வலிகளில் தொடங்கி எப்போதும் உடம்பில் தீராதவலி. இடக்கை தோளில் மின்சார விறுவிறுப்பு. நாள்கள் தெருக்களைக் கடந்து செல்ல, அவனின் இடக்கை தோள்வலியும் அதிகப்பட்டுக் கொண்டிருந்தது. தைக்கா கூட்டம் வரட்டு.. வலி கொறஞ்சா… வெள்ளியிலெ ஒரு கை செய்து போடணும். தைக்கா பள்ளிக் கூட்டம் வருவதற்குச் சில நாட்களுக்கு முன் அமீனின் உறவுகள் புகலிடத்திற்குப் பயணப்படுவது அவசியமாகிப் போனது. கபுறடியில் வைக்கப்பட்ட ஹார்லிக்ஸ் குப்பியினுள்ளே தண்ணியில் நோய் குணமாக்கும் சக்தி இருக்குன்னு சொல்லி ஹார்லிக்ஸ் குப்பிகள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இம்முறை எல்லாக் குப்பிகளிலும் அடைந்திருந்த குழந்தைகள் கபுறடியில் அடுக்கி வைக்கப்பட்டனர். கபுறடிக்கு வந்தவர்கள் ஹார்லிக்ஸ் குப்பிக் குழந்தைகளைக் கண்டதும் காரணகாரியமில்லாமல் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தனர். குப்பிகள் நிறைந்த கபுறடியில் அவர்களின் உடலைக் கீறிக் கொண்டு நுழைந்தது சட்டாம்பிள்ளைத்தனம். போதிமரத்தவன் இப்போது தெருவெங்கும் களைத்துப் போய் உட்காரத் தொடங்கி விட்டான். வனத்தின் அனைத்து விலங்குகளும் வெளியேற்றப்பட்டு சிங்கங்களும், புலிகளும், நாய்களும், குரங்குகளும் கபுறடியில் குவியத் தொடங்கின. இவற்றில் கழுதைகள் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுப் பிரச்சார மேடைகளில் நாற்காலிகளில் உட்கார வைக்கப்பட்டன.
அமீனின் நரைத்த தலைக்கு சூப்பர் வாஸ்மால் 33 தடவிக் கொண்டிருந்தான் வாரமொரு முறை. கடற்கரையில் ஒட்டுண்ணிகள் முளைக்க வைக்கப்பட்டிருக்கின்றன. இனி ஹார்லிக்ஸ் குப்பிகள் கபுறடியில் அதிகமாகும். சில நாட்களுக்குப்பின் ஹார்லிக்ஸ் குப்பி சமாதிகள் அதிகப்பட்டுக் கொண்டிருக்கும். பின்னர் அந்த கபுறுகளுக்கருகில் காற்றில் ஹார்லிக்ஸ் குப்பிகள் பறக்கும். மூச்சு விட்டால் இரத்த சுவாலை பற்றி எரியும். குழந்தைகள் வீதிகளில் காணாமல் போயிருப்பார்கள். இரவுச் சிணுங்கல்களின் புணர்ச்சி வாடையின்றி கதவுகள் கிறீச்சிட்டுக் கிடக்கும். விளை நிலங்களில் அலைந்த பெண்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயினர். மாதவிடாய்த் தள்ளிப்போனது.
முட்டுக்கால்களுக்குக் கீழே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் முகம் கைகால்களைக் கழுவி விட்டு நிமிர்ந்தான் அமீன். தலைப்பாகைத் தலையர் ஒருவர் “ஸலாமலைக்கும்” என்றார். பதில் சொல்வது தேவையற்ற ஒன்று என்று கருதினான். அந்தத் தலைப்பாகைத் தலைவர் வஹ்ஹாபிகள் பற்றிப் பேச்சு வந்தபோது “நாசாமாய் போவானுவோ பன்னி வெட்டுற வாளாலெ இவனுகளே வெட்ட வேண்டாமா?… தக்கலெ தெருவாங் கோட்லெயில்லாம் அவனூளுக்கு பாச்சா பலிக்கலெ… இங்கெ தள்ளெயெ தின்ன தேவடியா மொவனுவோ ஆட்டம் போடுறானுவோ… இங்குள்ளெ நக்கி பேலுக்க பொறந்தவனுவோ… அவனுகளெ ஏசிக்கிட்டு அவனூன்ட்டெயே வாங்கித் திங்ககுற பலவட்றெ தேவடியாமொவனுவோ” என்றார். அமீனுக்குக் கோபம் வந்தது. அவன் நெருப்பு நாக்கை வெளியே நீட்டித் தலைப்பாகைத் தலையரைத் திட்டினான். “நீரெல்லாம் வொரு மனுஷனா வோய்…. எவனாம் என்னத்தையாம் கொண்டாடிட்டுப் போவட்… வொமக்கென்ன… அஞ்சு நேரம் தொழவேறெ செய்யீரு… வாயெ தொறந்தா நாறுது. போவும் வோய் அதிகம் வஞ்சித்து, திருடி, கொன்று இங்குவந்து பெரிய மனிதர்களாக மாறியிருந்தனர், பாவுக்குள் விரலைவிட்டு நீவிவிட்டு, துப்பிணி தொட்டு நூல் முடிஞ்சு அலக்கம்பால் தட்டி சீப்பால் ஒழுங்குபடுத்தி, கவுட்டுக் கம்பை நகர்த்தி, சுருட்டி முடித்து வெளியேறும் போது மக்ரிப்பாங்கு சொல்லப்பட்டிருக்கும். சக்கரை மொதலாளி, பாவாத்தி மடக்குன பொறவு விறுவிறுன்னு நடந்து கம்பளம் போய் முருகேச செட்டியாரின் காப்பிக் கடையிலெ கதையளந்து கொண்டிருப்பார். சக்கரை மொதலாளி, கம்பளத்துக்குக் கதையளக்க மட்டுந்தான் போறாருன்னு நீங்களும் அமீனும் நம்பணுமா? ஊஹும்… நீங்க நம்புனாலும் அமீன் நம்ப மாட்டான். ஏன்னா… அமீனெ பெத்தவளே பெத்தவ, சக்கரை மொதலாளிட்டெ நூலு வாங்கி ராட்டு சுத்தியிருக்க…நூலெ சுத்திக் கொடுத்தா லேசுலெ காசு தரமாட்டாரு. இழுத்தடிப்பாரு.. காசு வாங்கெ ராத்திரி போனா எதுவும் பேசாமெ உம்மணா மூஞ்சியைப் போல் முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாரு. வாடெ ஒரு மாதிரி அடிக்கும். புளிச்சவாடெ… என்ன எழவோ.. வாய் தொறந்து பேசுனா குடிச்சிருக்கிறது தெரிஞ்சுடும்னு வாயெ ஒரேயடப்பா அடச்சு வச்சிருப்பாரு.
அமீனைக் கடந்து சிலர் சென்று கொண்டிருந்தனர். எல்லோருடைய யோக்யதையும் காற்றில் பறந்து போய் வருடங்களாகி விட்டன. அவர்கள் மதவழிபாட்டை மட்டும் தவறாமல் கடைபிடிப்பவர்கள். அமீன் எப்போதாவது தொழுகைக்குப் போவான். அப்பிடி தப்பித்தவறி வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு போனா, அங்கெ நடக்குறதையெல்லாம் பாத்துட்டு கொஞ்ச வாரங்களுக்குப் போகமாட்டான். அவனுடைய மதத்தின் மஸ்அலாக்கள் (சடங்கு சம்பிரதாயங்கள்) கட்டுப்பாடுகள் குறித்து அவனுக்கு விமர்சனம் உண்டு. நண்பர்களிடம் சொல்லிப் பார்ப்பான். அவர்கள் இசைய மாட்டார்கள். கட்டுப்பாடுகளின் இறுக்கம்தான் அதிக ஒழுங்கு சடங்கு சம்பிரதாயங்களைத் தூக்கிப் பிடித்த சமணம் அழிந்து போக காரணமாக இருந்தது என்ற கவலை பட்டான்.
முள் கரண்டிகளில் பிசிறு ஒட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்காலம் மனிதத்தின் உணர்ச்சியற்ற படிநிலைகளாகிச் சமூகத்தின் நியாய மரத்தின் அடிச்சுவடுகளில் உட்கார்ந்திருக்கும் குளிர்காற்றில் கதையளந்து கொண்டிருந்தது. அமீன் சொரணையற்றுப் போய் படுக்கையில் விழுந்து கிடந்தான். கொசுக்கள் அவனை மொய்த்துக் கொண்டிருந்தன; இரத்தம் கக்கிச் சாவதற்காக!
– மே 2013, உயிர் எழுத்து.
தொடர்புள்ள சிறுகதைகள்
பழமொழியாம் பழமொழி..!
வளர்கவி
August 28, 2026
அலையரசி!
மா.சித்திவினாயகம்
August 28, 2026
எது சுதந்திரம்?
இரா.கலைச்செல்வி
August 28, 2026