கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,530 
 
 

ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை விட்டிற்கு அனுப்பிவிட்டு, தேங்காய்களை விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பினான்.

தோப்பிலே எங்குப் பார்த்தாலும் ஒரே தேங்காய் நார்த் தூசியாகக் கிடந்தது.

மேல்தூசி, கீழ்தூசி இரண்டும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டது. ‘நாம் தேங்காயோடு இணைந்திருக்கும் போது துன்பமில்லை. இப்போது நம்மைப் பிரித்து விட்டார்கள், இப்படிச் சிதறிக் கிடக்கின்றோம்’ என்றது கீழ்தூசி.

அதற்கு மேல்துரசி “இது தோப்புக்காரன் தப்புமல்ல; குத்தகைக்காரன் தப்பும் அல்ல; நம் தப்புதான். நாம் சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டால் எல்லாம் சரியாகி விடும்.”

“நாம் சேர்ந்து இழைந்து வாழ்ந்துவருகிற சிறு இழுக்கும் கயிறாகி மணிக்கயிறாகி, பந்தல்கயிறாகி, வால் கயிறாகி, தேர்வடக் கயிறாகி ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இருந்தால், நம்மைவிட்டுப் பிரிந்த நமது எதிரிகளான தேங்காய்கள்கூட நம்மேல் மோதி தானாகவே “டாண் டாண்” என்று உடைபடும் என்றது.

அப்படியே, தேங்காய் நார்த்தூசிகளின் ஒற்றுமை வலுவினால் உண்டான தேர்வடக் கயிற்றில் மோதித் தேங்காய்களே உடைபடுகின்றன.

‘ஒற்றுமைக்கு இவ்வளவு பலம் உண்டு’ என்று அறிந்த நாமும் இனி சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வோமா?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *