ஒரு பரிசு… பல்லிளிக்கிறது..!





சபாபதி சரியான கஞ்சப்பய.! அவனுக்குக் கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்க வந்தான். அவனுக்கு எப்பவுமே அடுத்தவனைச் சீண்டி ரசிப்பதில் அலாதி இன்பம்! அப்படியொரு அல்ப ஜென்மம் அவன்.

வீடு தேடி வந்துட்டான். வரவேற்காம இருக்க முடியுமா?! ஆனலும், மனசுக்குள் ஒரு சந்தேகம். கல்யாணம்னு சொல்றான். நெசமாவே கூப்பிடத்தான் வந்திருக்கானா?! இல்லை., இதில் எதுவும் கூத்துகீத்து இருக்குமோ?! யோசனையாயிருந்தது.
‘வாங்க.. வாங்க..!’ சபாபதியை சிரித்தபடி வரவேற்றார் வைத்தியலிங்கம்.
‘உள்ளே வந்த சபாதி கைப்பையைத் திறந்தான்… ஒரு பத்திரிக்கை எடுத்தான் ‘இந்தாங்க.. ஆர்.எஸ் புரம் ஹோட்டலில் கல்யாண ரிஷப்ஷன். கல்யாணம் எதிரில் விநாயகர் கோவிலில்.’ கண்டிப்பா வந்திடணும்னு சொல்லீட்டு, படக்குனு கொடுத்த பத்திரிக்கையைத் திருப்ப வாங்கீட்டான். நெனைச்சா மாதிரியே! பண்ணீட்டான் பாவி! நொந்து போனான் வைத்தி, பிறகு சொன்னான்…
‘பத்திரிக்கை பத்தலை!!. உங்களுக்கெல்லாம் எதுக்கு அழைப்பிதழ்?? விவரம் சொன்னா வந்துடப் போறீங்க!’
சுருக்குன்னது வார்த்தைகள்!!
‘உண்மைதான் உங்கள மாதிரி நெருங்கின நண்பர்க்குப் பத்திரிக்கை கொடுக்கணுமா என்ன?! சொன்னாப் போதுமே!’ என்றான் பேச்சுக்கு!
ஆனாலும், கல்யாண டிபன் சாப்பிட பத்திரிக்க வேணுமே?! இல்லே ‘பாஸ்’ ‘டோக்கன்’ எதேனும் ஒன்று வேணுமே!?’ யோசனையாய் இருந்தது, சரி சரி…!!
முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்?. முடிவு செய்தான். கல்யாண கிஃப்டா என்ன கொடுக்கலாம்?!
ரோட்டோரக் மண்பானைக் கடைக்காரப் பொம்பளையிடம் ஒரு மண் உண்டியல் மலிவு விலையில் வாங்கி கிஃப்ட் ரேப்பரால் பெரிசாய் தெரியும்படி பாக் செய்து வைத்துக் கொண்டான்.
கல்யாண நாளில் …
ஹோட்டலில் இருகரம் கூப்பி வரவேற்றான் சபாபதி. மாப்பிள்ளையாச்சே.!!. ‘மிடுக்கு’ காட்டினான்.
‘கிப்டைக் கொடுக்கையில், பார்சல் பெரிதாய் இருக்க, பல்லிளித்தான்.
எங்க வராம விட்டிருவீங்களோ கோவிச்சுட்டுனு சொன்னான்.
ஆக, தெரிந்துதான் பண்ணியிருக்கான்னு தெரிஞ்சது!.
‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் இல்லையா..?!! உயிர் நண்பனான உனக்கு உயிர் கொடுப்பதாய்க் கொடுத்திருக்கிறேன். உரிச்சுப்பாரு! சொல்லீட்டு சோத்தை வயிறுமுட்டத் தின்றுவிட்டுத்தான் திரும்பினான் வைத்தி!