ஒரு கொசுவால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 82 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜான் வெஸ்லியும் அவர் கூட்டத்தாரும் நற்செய்தி கூறி தெருப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அயர்லாந்து வாசி ஒருவன் அவர்களின் பாட்டை ஆவலுடன் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர்களின் பாட்டில் நாட்டமே தவிரப் பிரசங்கத்தில் பிரியம் கிடையாது.

பிரசங்கம் ஆரம்பிக்கவும் இருவிரல்களால் அடைத்துக் கொண்டான். பிரசங்கத்தின்போதும் இடையிடையே பாடுவார்களாதலால் மறு பாட்டுப் பாடும் வரை காதைத் திறக்கத் கூடாதென்று தீர் மானித்திருந்தான்.

இவ்வேளை அவன் மூக்கில் ஒரு கொசு உட் கார்ந்தது. அதை விரட்ட, வலது கையை ஆட்டினான்.

“கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்’ என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்து விட்டது.

மின்சாரம் தாக்குவது போன்று அவ்வார்த்தைகள் அவன் மூளைக்குச் சென்றன.

மீதிப்பிரசங்கத்தையும் கவனமாகக் கேட்டான்.

கூட்டம் முடிந்தவுடன் வெஸ்லியிடம் அனைத்தை யும் கூறினான். அவர் அவனைக் கிறிஸ்துவண்டை வழி நடத்தினார். இங்கிலாந்துத் திருச்சபையின் தூண்களில் ஒருவனாக விளங்கினான்.

“தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்”. [யோனா 4:7]

”சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்”. [யோவான் 18:37]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *