ஏமாற்றாதே, ஏமாற்றாதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 201 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேய்ந்து மழுங்கிப்போன ஒரு ரூபாய் நாணயம், அது ஒரு கடையிலும் செல்லுபடியாகவில்லை.

இறுதியாக ஒரு பேப்பர் கடைக்குப் போய் அந்த நாணயத்தைக் கொடுத்து தினச்செய்தித்தாள் ஒன்றைக் கேட்டார். கடைக்காரர் பார்த்த பார்வையில் அவசரமாகக் கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டு ஒரு பேப்பரை எடுத்துக் னெடுத்தார்.

பேப்பரை வாங்கிச் சென்ற அரைமணி நேரம் கழித்து கடைக்காரரிடம் வந்து, “உன்னை ஏமாற்றிவிட்டேன், நான் தந்த ரூபாய் செல்லாது” என்றார்.

உடனே கடைக்காரன் சொன்னான்:

“நீ மட்டும் என்னவாம்? நான் உனக்குத் தந்த தினத் தாள் மூன்று நாட்களுக்கு முன்னாலுள்ளது. அதுவும் செல்லாத பேப்பரே.”

ஒருவரையொருவர் ஏமாற்றுவதிலும் ஒரு பெருமிதமா?.

“மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” – [கலாத்தியர் 6:7]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *